அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற டிஜிட்டல் மற்றும் அச்சு இதழ் ஆன “The Hollywood Reporter” ஹாலிவுட் மற்றும் பிற ஆங்கில மொழிகளில் வெளியாகும் திரைப்படம், தொலைக்காட்சி வெப் தொடர்கள், சர்வதேச திரைப்பட விருது விழாக்கள் என சினிமா குறித்த எல்லா செய்திகளையும் அவர்களின் இதழ் மற்றும் இணையதள பக்கங்களில் பதிவு செய்வர். அமெரிக்காவை தாண்டி பிற நாடுகளில் உள்ள சினிமா நிகழ்வுகளை கவரும் விதமாக அந்தந்த நாடுகளில் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
தற்போது முதல் முறையாக இந்தியாவில் “The Hollywood Reporter India” நேர்காணல் நடத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பிரபலமான முன்னணி சினிமா பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளர் ஆன அனுபமா சோப்ரா தொகுத்து வழங்கினார். இதில் இந்திய சினிமாவில் தொலைநோக்கு பார்வை கொண்ட படங்களை எடுத்து வரும் ஐந்து இயக்குனர்கள் அழைக்கப்பட்டு, நேர்காணல் நடந்து முடிந்தது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஆன வெற்றிமாறன் மற்றும் ப.ரஞ்சித் கலந்து கொண்டனர். இதன் மூலம் The Hollywood Reporter India நேர்காணலில் கலந்து கொண்ட முதல் இரண்டு தமிழ் சினிமா இயக்குனர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘பாட்டல் ராதா’ படத்தின் போஸ்டர் ரிலீஸ்!
தற்போது இந்திய சினிமா எதிர்கொள்ளும் சவால், ஹேமா கமிட்டி பிரச்சனை, திரைப்படங்கள் வெளியிடும் தளங்களின் மாற்றம், திரையரங்கில் வெளியிட எதிர்கொள்ளும் சவால்கள், புதுவிதமான கதாபாத்திரங்களை செய்ய தயாராகும் நடிகர், நடிகைகள் என பல கோணங்களில் ஐந்து இயக்குனர்களும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் பெயர் | மொழி | இயக்கிய படங்கள் |
வெற்றிமாறன் | தமிழ் | விடுதலை-1, பொல்லாதவன், விசாரணை, வடசென்னை |
ப.ரஞ்சித் | தமிழ் | அட்டகத்தி, நட்சத்திரம் நகர்கிறது, காலா, கபாலி, தங்கலான் |
மகேஷ் நாராயணன் | மலையாளம் | மாலிக், Take Off, C U Soon, அறியிப்பு |
ஜோயா அக்தர் | ஹிந்தி | லக்கி பை சான்ஸ், ஜிந்தகி நா மிலேகி தோபாரா, பாம்பே டாக்கீஸ், கல்லி பாய் |
கரண் ஜோகர் | ஹிந்தி | கபி குஷி கபி கம், மை நேம் இஸ் கான், குச் குச் ஹோதா ஹை, Student of the year |
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை பின்பற்றும் இயக்குனர்கள் ஒவ்வொரு தசாப்தமும் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் முக்கியமான இரு இயக்குனர்கள் “வெற்றிமாறன் மற்றும் ப.ரஞ்சித்” ஆகிய இருவர் ஆகும்.
நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியது:
“இந்த பிரச்சனை நமது துறையில் மட்டும் அல்ல, நாம் இதில் பணியாற்றுவதால் இதை குறித்து பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. நான் பார்த்தவரையில் ஒரு பெண் தனக்கு நடந்த குற்றத்தை வெளியே வந்து சொல்லும் பொழுது, அந்த பெண் பலரின் கேள்விக்கு உள்ளாகின்றனர். எதற்காக இத்தனை வருடம் அமைதியாக இருந்து, தற்போது வந்து கூறுவதன் நோக்கம் என்ன என்றெல்லாம் கேட்பது தவறான ஒன்று.”
நேர்காணலில் இயக்குனர் ப.ரஞ்சித் கூறியது:
இந்த கூட்டணி புதுசா இருக்கே!. Suriya 45 – வது படத்தை இயக்கும் RJ. Balaji.
“ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கான முதல் படி நமது வீட்டில் இருந்து தொடங்குகிறது. ஆண் பெண் என்ற பாகுபாடு நமது வீட்டிலேயே பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது அதோடு நமது கல்வி மற்றும் பாட புத்தகங்களிலும் நாம் பின்பற்றும் பண்பாட்டை பெருமையாக பேசுவதிலேயே கவனத்தைச் செலுத்துகிறது சம உரிமை குறித்த பாடங்கள் சொல்ல தவறுகிறது. ஒரு பெண் சினிமா துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் பல விதமான பிரச்சனைகளை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதை வெளிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.” இவ்வாறு பலவிதமான கருத்துக்களை இந்த நேர்காணலில் இரு இயக்குனர்களும் பகிர்ந்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]