கேரளா மாநிலம் தமிழ் சினிமாவிற்கு அன்று முதல் இன்று வரை பல ஹீரோயின்களை தந்துள்ளது. அந்த வகையில் 80-களில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டார் நடிகை Radha…
தமிழ் சினிமாவில் 80,90 காலகட்டத்தில் தனது நடிப்பு, சிரிப்பு, அழகான முக தோற்றம் கொண்டு இளைஞர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் ராதா. “உதய சந்திரிகா” என்ற இயற்பெயர் கொண்ட RADHA கேரளா மாநிலத்தில் கிளிமானூர் இடத்தில் பிறந்தார். இவரது அக்கா நடிகை அம்பிகா. இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளாக வளம் வந்தனர்.

பாரதிராஜாவின் கதைக்கு ஹீரோயின் தேர்வு செய்யும் போது தனது அக்கா அம்பிகாவுடன் ராதாவும் சென்றிருந்தார். அந்த கதைக்கு அம்பிகாவை விடுத்து ராதாவை கதையின் ஹீரோயின் ஆக தேர்வு பாரதிராஜா.
16 வயதில் ஹீரோயின் ஆக பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமாகிறார் ராதா. அந்த படம் தான் “அலைகள் ஓய்வதில்லை”. முதல் படமே ஹிட் அடிக்க பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகள் வரிசையில் முக்கிய நடிகையாக இடம் பிடித்தார் ராதா. பள்ளி படிக்கும் போது நடனம் ஆடுவதில் ஆர்வம் கொண்டு சிறப்பாக நடனம் ஆட கற்றுக்கொண்டார்.
எப்போதும் பாரதிராஜா நடிகையின் உண்மையான பெயரை மாற்றி சினிமாவில் அறிமுகம் செய்து வைப்பார். அந்த வகையில் “உதய சந்திரிகா” என்ற பெயரை “ராதா” என மாற்றினார் பாரதிராஜா. முதல் படமே ஹிட் அடிக்க அடுத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடித்து அசத்தினார்.
பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வர 1985-ல் சிவாஜி கணேசனுடன் நடித்து வெளியான “முதல் மரியாதை” படம் ராதாவின் சினிமா வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குயில் என்ற கதாபாத்திரத்தில் மிக அழகாக நடிப்பில் அசத்தியிருப்பார். சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

இவரது அக்கா அம்பிகா ராதா இருவரும் ஒரே சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நிலையிலும் இருவரும் எந்த ஒரு மன கசப்பும் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஆதரித்து உதவியாக இருந்து வந்தனர். இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து இருந்தனர்.
ஜப்பானில் கல்யாண ராமன், காதல் பரிசு, எங்க சின்ன ராசா, வெள்ளை ரோஜா, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து கிட்டத்தட்ட 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிக்க வந்த 10 வருடங்களில் இந்த அளவில் படங்களில் நடித்து எந்தவொரு நடிகையும் செய்யாத சாதனையை படைத்தார்.
கமல், ரஜினி, சிவாஜி, சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த், பிரபு என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார். நடிப்பில் மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் ராதா கலக்கி வருகிறார். 1986-ல் ARS ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடக்கினார்.
16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டி பரந்த ராதா சினிமாவில் மட்டுமல்ல குடும்பம், தொழில் வாழ்க்கை என அனைத்திலும் வெற்றி கண்டு அசத்தியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]