Home Movies வளர்ந்து வரும் ஹீரோயின் “Ammu Abhirami” நடித்த படங்கள்

வளர்ந்து வரும் ஹீரோயின் “Ammu Abhirami” நடித்த படங்கள்

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் Ammu Abhirami ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் கதையை மையப்படுத்தும் முக்கியமான கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 

by Sudhakaran Eswaran

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் Ammu Abhirami ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் கதையை மையப்படுத்தும் முக்கியமான கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.     

2k கிட்ஸ் ஆனா Ammu Abhirami சென்னையில் தான் பிறந்து வளர்த்துள்ளார். 2016-ல் விஜய்யின் பைரவா படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து துணை கேரக்ட்டரில் ஹீரோயின் நண்பராக வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தினார். 

Ammu Abhirami

2018-ல் ராட்சசன் படத்தில் “அம்மு” கேரக்டரில் பள்ளி மாணவியாக இவரை மையப்படுத்தியே கதை நகரும். 18 வயதிலேயே கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருந்தார் என பலராலும் பாராட்டப்பட்டார். ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே கேரக்டரில் நடித்து வரவேற்பை பெற்றார். 

Ammu Abirami in Asuran

2018-ல் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படத்தில் “மாரியம்மாள்” கேரக்டரில் நடித்து தன்னை மீண்டும் நிரூபித்து காட்டினார். இது தெலுங்கு மொழியில் வெங்கடேஷ் நடிப்பில் “நரப்பா” என ரீமேக் செய்து வெளியானது. இதில் “கண்ணம்மா” கேரக்டரில் நடித்திருந்தார். 

அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வர தமிழ், தெலுங்கு மொழியில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற “குக் கோமாளி” ஷோவில் சீசன் 3-ல் பங்கு கொண்டார். 

Actress Ammu Abirami

தனுஷ், கார்த்தி, சூர்யா, வெங்கடேஷ், அருண் விஜய் என முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்து வந்துள்ளார். இவரை நடித்து வெளியான படங்கள். 

2017பைரவா, என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் 1.  
2018தான சேர்ந்த கூட்டம், ராட்சசன், துப்பாக்கி முனை. 
2019அசுரன், தம்பி. 
2020அடவி 
2021நவரசா (வெப் சீரிஸ்)
2022யானை,பேட்டரி, காரி. 
2023தண்டட்டி, பாபா ப்ளாக் ஷீப், வான் மூன்று, கண்ணகி, 
2024ஹாட் ஸ்பாட்.

அசுரன், ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லும் படியான கேரக்டரில் நடிக்கவில்லை. இருந்தாலும்  வாய்ப்பை பயன்படுத்தி சில படங்களில் நடித்து வருகிறார் Ammu Abhirami. வரும் காலங்களில் இவரை ஹீரோயின் ஆக பார்க்கும் வாய்ப்பு ஏற்படலாம். 

Asuran movie Abirami stills

இவரது நடிப்பில் “கனவு மெய்ப்பட” மற்றும் “யார் இவர்கள்” போன்ற படங்கள் வெளிவர காத்துக்கொண்டுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.