திரையில் தோன்றிய முதல் கட்சியில் ஒல்லியான உடல்கட்டுடன், அப்பாவியான முகமும் பார்ப்பதற்கு நமது அக்கம் பக்கத்தில் இருக்கும் ஒரு வாலிபனாக இருந்தவர், படிப்படியாக தன்மேல் வீசப்பட்ட விமர்சனங்களை முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக மாற்றி, இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அசத்திவருகிறார் நடிகர் தனுஷ். அவரின் வளர்ச்சி, தமிழ் சினிமாவில் பலருக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அப்படி அவர் நடித்து அதிகம் பாராட்டப்பட்ட கதாப்பாத்திரங்கள் பல உண்டு.

தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்றால் அது 2003ல் வெளியான ‘காதல் கொண்டேன்’ தான். செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு வித்தியாசமான சாதுவான கதாபாத்திரக்த்தில் நடித்திருப்பார். சிறு வயதிலேயே அனாதையாக வளர்ந்து, ஒரு பெண்ணின் அன்பை முதல் முறையாக அனுபவிக்கிறான். அந்த அன்பு ஒரு தலை காதலாக மாறும்போது அவனால் அவளின் அன்பை நீட்டிக்க செய்யும் செயல்கள் அவான் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. படம் முழுவதும் கண்ணாடி போட்டுகொண்டு, பொறுப்பான, பாவமான பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார் நடிகர் Dhanush.

இதற்கு அப்படியே முரண்பட்ட பாத்திரம் தான் கொக்கி குமார். 2006ல் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில், புதுப்பேட்டை பகுதியில் சிறு வயதயிலேயே தான் செய்யாத தவறுக்காக கைது செய்யப்படம் குமார், ஒரு சின்ன ரவுடி கும்பலில் சேர்கிறார். அதன் பின் அங்குள்ள சூழ்நிலை ஆவணி எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் சந்தித்த மனிதர்களால் அவனுக்கு நாடாகும் நன்மை தீமைகளை இந்த படத்தில் முழுமையாக நடித்திருப்பார். இன்று ஒரு கல்ட் படமாக பார்க்கப்படும் புதுப்பேட்டையில், ‘கொக்கி குமார்’ கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர்கள் உண்டு.

2008ல் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து பையனாக, ஒரு தலை காதல், அப்பாவுடனான முறிந்த உறவு என ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்திருப்பார்.இரண்டாம் பத்தியில் தன்னுடைய நண்பனுக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் அவரின் போராட்டத்தை மிக எளிதாக ரசிகர்களுக்கு காட்டி, தன்னை ஒரு கமர்ஷியல் நாயகனாக மாற்றிக்கொண்டார் நடிகர் Dhanush. நகைச்சுவை காட்சிகளில் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் மக்களிடம் கைதட்டல் வாங்கிய பாத்திரமாக இது அமைந்தது.

வெற்றிமாறனுடன் ஏற்பட்ட கூட்டணியில், பொல்லாதவன் படத்தை அடுத்து ‘ஆடுகளம்’ என்ற மாபெரும் ஹிட் படத்தில் நடித்தார் தனுஷ். சண்டை சேவல் வளர்த்து அதை போட்டிக்கு விடும் கதாபாத்திரத்தில் நடித்தார் தனுஷ். ஆறு தேசிய விருதுகளை வென்று குவித்து, அந்த ஆண்டின் அதிகம் பேசப்பட்ட படமாக அமைந்தது. K. P. கருப்பு என்ற பாத்திரத்தை படத்தின் ஆரம்பம் முதல் தெளிவாக புரிந்து, அப்படியான சூழலில் தன்னை பொருத்தி அசத்தலாக நடித்தார் Dhanush.

தன்னுடைய சகோதரர் செல்வராகவனுடன் இணையும் படங்களில் எல்லாம் தனுஷ் ஒரு நடிகராக ஒரு படி முன்னேறி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அது வரை அவருடைய திரை பயணத்தில் ஏற்காத பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். 2011ல் வெளியான ‘மயக்கம் என்ன’ படமும் தனுஷை ஒரு நடிகராக மெருகேற்ற முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. கார்த்திக் என்ற இளைஞனின் வழக்கை லட்சியமே ஒரு சிறந்த ‘Wildlife Photographer’ ஆக வேண்டும் என்பது தான். அதிலும் முக்கியமாக அவரின் குருவை போல சாதித்து, அந்த துறையில் வெற்றியடைய வேண்டும் என்ற கனவில் காதல், நட்பு, துரோகம், தோழ்வி என பல இன்னல்களுக்கு மத்தியில் அவன் கனவை அடைகிறானா? என்ற நுணுக்கமான கதையில், நடிகராக தனித்து ஜொலித்தார் Dhanush.

2014ல் ஒரு புது இயக்குனர் வேல்ராஜுடன் இணைந்து ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தை தயாரித்து நடித்தார் Dhanush. படித்து முடித்து வேலை கிடைக்காத பட்டதாரி ரகுவரனாக நடித்து, பல பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதிபலிக்கும் படமாக இது அமைந்தது. படித்த படிப்புக்கான வேலை கிடைக்காமல், வீட்டிலும், சமூகத்திலும் நடக்கும் அரசியல் பற்றியும் பேசி ரகுவரனை ஹீரோவாக கொண்டாடவைத்தார் தனுஷ்.

ரகுவரனுக்கு மாறாக, ஒரு அரியாவையே மிரட்டும் நல்ல உள்ளம் படைத்த டான் ‘மாரி’யாக 2015ல் நடித்தார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அனைத்து பொருத்தமும் இந்த படத்தில் அமைய, நகைச்சுவை, ஆக்ஷன் என ஒரு பக்கா கமெர்ஷியல் படத்திற்கான சரியான கலவையாக இந்த படம் இருந்தது. ஸ்டைலான கண்ணாடி, முறுக்கு மீசை, கலர் சட்டை என ‘மாரி’ படத்தில் இவரின் கெட்டப் மறக்கமுடியாத ஒன்று.

சின்ன சின்ன ரவுடித்தனம் செய்யும் ‘மாரி’ வேடத்தில் இருந்து தன்னுடைய குடும்பத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் எந்த எல்லைக்கும் போகும் ‘அசுரன்’ சிவசாமியாக, யாரும் எதிர்ப்பாராத கதாப்பாத்திரத்தில் நடித்து, பாராட்டுக்களை அள்ளினார் தனுஷ். இளம் வயதின் கோபம், வாலிப வயதின் போராட்டம், வயதிற்கேற்ப தெளிவு என வாழ்க்கையின் மூன்று பரிமாணங்களிலும் தனித்துவத்தை காட்டி, மக்களின் மனங்களில் வேரூன்றிய படம் ‘அசுரன்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக தனுஷுக்கு பெற்றுத்தந்த பாத்திரமும் இது தான்.

அடிப்படை வசதிக்கு கூட ஒரு ஊர் மக்கள் அனைவரும் போராடும் நியாயமற்ற நிலைமையை படமாக எடுத்து, அதில் ‘கர்ணன்‘ என்ற பாத்திரத்தில் தனுஷை நடிக்க வைத்து, சமூகத்தில் நடக்கும் நிகழ்வை வெளிச்சம்போட்டு காட்டினார் இயக்குனர் மாரி செல்வராஜ். துடிப்பான இளைஞன், தன கண்முன் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கிறான். அவனின் குரலின் வேகத்திற்கு பினாவிளைவுகள் எழுவதை பார்த்து அவனின் அடுத்தக்கட்ட எதிர்ப்பாக கையில் வாள் ஏந்துகிற போராளியாக நடித்து, பலரின் சிந்தனையில் துளிர்விடச்செய்யத ஒரு துணிச்சலான கதாபாத்திரம் தான் ‘கர்ணன்’. ஆக்ரோஷமான ஒரு நியாயக்குரலாக ஒலித்த இந்த பாத்திரத்துக்கு நியாயமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ்.

இந்த மாதிரியான மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் பலவற்றை நடித்து நமது பாராட்டுக்குரியவராக இருக்கும் நடிகர் தனுஷ், இயக்குனராக ஏற்கனவே பா. பாண்டி படத்தில் அவரின் வருகையை அறிவித்து நல்ல வரவேற்பு பெற்றார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்த தனுஷ், அவரின் 50வது படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டுள்ளார். ‘ராயன்‘ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில், ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்து, ஆர்ப்பரிக்கும் வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பன்முக திறமைசாலியான நடிகர்-பாடகர்-பாடலாசிரியர்-தயாரிப்பாளர்-இயக்குனர் தனுஷ்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]