செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது செல்வராகவனையே நடிக்க வைத்து இயக்கும் அளவிற்கு சினிமாவில் வளர்த்துள்ளார் என்றால் அதற்க்கு இருவருக்கிடையேயான புரிதல் தான் காரணம்.
நிஜ வாழ்வில் அண்ணன் தம்பிகளாக இருந்து வரும் செல்வராகவன், தனுஷ் சினிமா என்று வந்துவிட்டால் தங்களுடைய 100% உழைப்பை தந்து படத்தை ஹிட் செய்வதில் வல்லவர்களாக இருந்து வந்துள்ளனர்.

மாறுபட்ட சிந்தனை கொண்ட இயக்குனர் செல்வராகவன், நடிப்பை ரசித்து நடித்து வரும் Dhanush இருவரும் இணைந்து பணியாற்றும் போது அண்ணன், தம்பி பாசம் எல்லாம் ஓரமாக வைத்து விட்டு படத்திற்கு தேவையானதை தனுஷிடம் இருந்து பெறாமல் விட மாட்டார் செல்வராகவன்.
இந்த அளவிற்கு சினிமா உலகில் “தனுஷ் எனும் நான்” என்று உச்சம் தொட்ட தனுஷை செதுக்கிய பங்கு செல்வராகவனுக்கு அதிகம் என்றே கூறலாம்.
தனுஷை அறிமுகம் செய்ததில் இருந்து இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள்.
அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில், அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத “துள்ளுவதோ இளமை” படத்தில் அறிமுகமான Dhanush சினிமா உலகில் கவனிப்பை ஏற்படுத்தினார். பள்ளி மாணவனாக ஒல்லியான உடல், இன்னசென்ட் நடிப்பு, திமிரான பார்வை என முதல் படத்தில் ரசிக்க வைத்தார்.
காதல் கொண்டேன்:

செல்வராகவன் இயக்குனராக “காதல் கொண்டேன்” படத்தின் மூலம் அறிமுகமாக, தம்பி தனுஷை வைத்தே இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், சோனியா அகர்வால், சுதீப், நாகேஷ், டேனியல் பாலாஜி போன்றோரும் நடித்திருந்தனர். கல்லூரி மாணவனாக Dhanush அப்பாவியாக நடித்திருப்பார். படம் முழுவதும் பெரிதாக எதுவும் பேசாமல் இருந்து வரும் Dhanush கிளைமேக்ஸ் காட்சியில் சோனியா அகர்வாலுக்காக நடனமாடி, “திவ்யா திவ்யா” என்று பேசும் வசனம் அல்டிமேட் என்றே கூறலாம். யுவன் இசை ரசிக்க வைத்திருக்கும்.
புதுப்பேட்டை:

2006-ல் செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி மீண்டும் இணைய புதுப்பேட்டை என்ற கல்ட் படம் உருவாக “கொக்கி குமாரு” கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. Dhanush, சினேகா, சோனியா அகர்வால், பாலா சிங்க், அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ளனர்.
பள்ளி படிக்கும் மாணவனாக தனுஷ், தனது அம்மா கொலை செய்யப்படுகிறார் அப்பாவால், தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் Dhanush, பாலா சிங்க் மூலம் ரௌடி கும்பலில் சேர்ந்து பெரிய ரௌடியாக மாறுகிறார் Dhanush, பின்னர் அழகம் பெருமாள் இடம் வேலை செய்யும் பெரிய ரௌடியாக “கொக்கி குமார்” என்ற பெயரில் இருந்து வருகிறார். அதன் பின் நடக்கும் நிகழ்வை ரசிக்கும் படி எடுத்திருப்பார்.
படம் ரிலீஸ் ஆன சமயம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து கொக்கி குமார் என்ற கேரக்டர் போல ஒரு கேங்க்ஸ்டர் ரோல் இன்றுவரை சினிமாவில் வரவில்லை என்று ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
செல்வராகவன் தெலுங்கில் “ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே” என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழில் அந்த படம் “யாரடி நீ மோகினி” படமாக வெளியானது. இந்த படத்திற்கு கதை மட்டும் செல்வராகவன் எழுதியிருந்தார். Dhanush, நயன்தாரா, ரகுவரன், கார்த்திக் குமார், கருணாஸ், சரண்யா மோகன், K. விஸ்வநாதன் போன்றோர் நடித்திருந்தனர்.
மயக்கம் என்ன:

2011-ல் செல்வராகவன் இயக்கத்தில் Dhanush, ரிச்சா கங்கோபாத்யாய், சுந்தர் ராமு நடிப்பில், GV. பிரகாஷ் குமார் இசையமைத்து வெளியான படம் “மயக்கம் என்ன”. போட்டோகிராபராக இருந்து வரும் தனுஷ்க்கு தனது நண்பர்கள் உதவி செய்து வருவார்கள். மனதளவில் பாதிக்கப்பட்ட தனுஷுக்கு ஆறுதலாக இருந்து இன்டர்நேஷனல் போட்டோகிராபி விருது வாங்கும் அளவிற்கு தனுஷ்க்கு உதவியாக இருப்பார்.
GV இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது. ரிலீஸ் ஆனா போது படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. SIIMA சிறந்த நடிகைக்கான விருது ரிச்சாவிற்கு வழங்கப்பட்டது.
நானே வருவேன்:

2022-ல் செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி ஒன்று சேர்ந்த படம் “நானே வருவேன்”. இரட்டை வேடத்தில் Dhanush, இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். பிரபு, கதிர் என இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார் தனுஷ். பிரபு ஒரு அப்பாவி பையன், கதிர் எப்போதுமே பிரச்சனை செய்பவர். இருவரும் ஒன்றாக வாழமுடியாது என்று கூற கதிரை ஒரு கோவிலில் விட்டுவிட்டு பிரபுவுடன் ஓடிவிடுகிறார். பிறகு நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கும்.
தற்போது ராயன் படத்தில் தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். படம் ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]