தனது திறமையால் படத்திற்கு படம் விருதுகளை வாங்கி குவிக்கும் மாறுபட்ட கதைகளம் கொண்டு தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார் Director Bala …
மதுரையில் பிறந்த இயக்குனர் Bala தனது வித்தியாசமான கதைக்களம் கொண்டு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். இது வரை இரண்டு முறை தேசிய விருதை வாங்கியுள்ளார். இவரின் படங்களில் நடிப்பது என்றாலே ஹீரோ, ஹீரோயின்கள் சற்று சிரமப்பட்டு தான் ஆக வேண்டும். அந்த அளவிற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி மிகவும் எதார்த்தமாக படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் Bala படத்தில் நடித்த பிறகு நடிப்பின் அருமையை அறிந்துகொள்வர்.
அந்த வகையில் Bala இயக்கத்தில் வெளியான முக்கிய படங்கள்.
சேது

1999-ல் Bala இயக்கத்தில் , இளையராஜா இசையில், விக்ரம், அபிதா, சிவகுமார் நடிப்பில் வெளியான படம் சேது. இந்த படம் விக்ரம் திரை வாழ்வில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிப்பில் இரு வேறு விதமாக வேரியசன் காட்டி நடித்து அசத்தியிருப்பார். கல்லூரி மாணவனாக காதலிலும் சரி, மனநலம் பாதிக்கப்பட்ட நபராகவும் சரி எதிர்த்தமாக நடித்து ரசிக்க வைத்திருப்பார். தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, தமிழ் நாடு அரசு விருது, சினிமா எஸ்பிரஸ் விருது என சிறந்த இயக்குனருக்காக முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் பாலா. இதில் விக்ரம் பெயர் “சியான்” என முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நந்தா

2001-ல் சூர்யா, லைலா, கருணாஸ், ராஜ்கிரண், சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நந்தா. சூர்யாவின் நடிப்பு இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. சில காட்சிகளில் கண்ணில் பார்க்கும் பார்வை கூட நடிப்பை வெளிப்படுத்தியது. சூர்யாவின் சினிமா வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த படமாக கூட இருந்தது. அதற்க்கு முன்பு வரை ஜாலியான சூர்யாவாக திரையில் தோன்றியிருந்தார். இந்த படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் நடிப்பில் மாறுதல் காணப்பட்டது. பிலிம்ஃபேர் விருது, சினிமா எஸ்பிரஸ் விருது என சிறந்த இயக்குனருக்கு இந்த படத்திற்க்காக வழங்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருப்பார்.
பிதாமகன்

சூர்யா, விக்ரம் என தனி தனியாக வெற்றிப்படங்களை தந்த பாலா இருவரையும் வைத்து “பிதாமகன்” என்ற படைப்பை தமிழ் சினிமாவிற்கு தந்து அசத்தினார். 2003-ல் ஜெயகாந்தன் எழுத்தில் “நந்தவனத்தில் ஒரு ஆண்டி” என்பதை மையமாக கொண்டு எடுத்த படம் பிதாமகன். சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா ஆகியோர் நடிப்பில் வெளியானது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமிற்கு இந்த படத்திற்காக வழங்கப்பட்டது. கிளைமேக்ஸ் கட்சியில் சூர்யாவை கொன்ற பிறகு விக்ரம் செய்யும் செயல் நடிப்பின் உச்ச கட்டம்.
நான் கடவுள்

2009-ல் பாலாவின் இயக்கத்தில் ஆர்யா, பூஜா உமாசங்கர், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் என்ற படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு மேல் ஷூட்டிங் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆனது. தேசிய விருது, விஜய் டெலிவிஷன் விருது, பிலிம்ஃபேர் விருது என சிறந்த இயக்குனருக்காக வழங்கப்பட்டது. இந்த படத்துக்காக ஆர்யா பெரும் சிரமத்தை சந்தித்தார். அகோரியாக ஆர்யா நடித்து பெரும்பாலும் காசியை மையமாக கொண்டு தான் பட ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
அவன் இவன்

ஆர்யா, விஷால் கூட்டணியில் காமெடி, செண்டிமெண்ட் என படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பார்கள். இதுவரை நடிக்காத மாறுபட்ட கதைக்களத்தில் விஷால் நடித்திருப்பார். ஆர்யா விஷால் இருவரும் சட்டையிடும் காட்சி, போலீஸிடம் ஆர்யா பேசும் காட்சி, விஷாலை ஆர்யா கிண்டல் செய்யும் காட்சி என ரசிக்கவைத்திருப்பார். G.M. குமார், அம்பிகா, பிரபா ரமேஷ், ஜனனி ஐயர், மது ஷாலினி, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
பரதேசி

பால் ஹாரிஸ் டேனியல் படைப்பில் “ரெட் டீ” என்ற ஆங்கில நாவலில் இருந்து தமிழில் “எரியும் பனிக்காடு” என மொழி பெயர்க்கப்பட்டது. இதனை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடித்திருந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் மலை பிரதேசங்களில் டீ சாகுபடி செய்யும் தொழிலாளர்களின் நிலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்காக விஜய் டிவி விருது, பிலிம்ஃபேர் விருது, ஆனந்த விகடன் விருது போன்ற விருதுகள் பாலாவிற்கு இந்த படத்திற்காக வழங்கப்பட்டது.
ஜோதிகா, GV பிரகாஷ் குமார், இவானா நடிப்பில் 2018-ல் வெளியான படம் நாச்சியார். ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் வெளியாகவுள்ளது. இதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போல போட்டோ வெளியானது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]