கௌதம் வாசுதேவ் மேனன் – மின்னலே (2001)

மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடிப்பில் வெளியான படம் ‘மின்னலே‘. தமிழில் முக்கோண காதலில் அமைந்த கதைகளில் மிக பிரபலமான படமாக அமைந்தது இந்த படம். கௌதம் வாசுதேவ் மேனன் உடைய முதல் படமான இது காதல் படங்களுக்கான ரசிகர்களை மீண்டும் புதுப்பித்தது. காதலுக்காக மாதவன் சொல்லும் பொய், அமெரிக்கா மாப்பிள்ளை என பல படங்களில் இதே கதைக்களம் இருந்தாலும், ‘மின்னலே’ படத்துக்கு தனி ரசிகர்கள் எப்போதும் உண்டு. அதிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு படத்தின் ரிலீசுக்கு முன்பே ஹிட்டானது.
ஏ ஆர் முருகதாஸ் – தீனா (2001)

நடிகர் அஜித், சுரேஷ் கோபி, லைலா நடித்த படம் ‘தீனா‘. ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கிய படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறதற்கு காரணம், இந்த படத்தின் கதை மற்றும் ஆக்ஷன் அம்சம் தான். அண்ணன் தம்பி பாசம், கண் முன் நடக்கும் அநியாயத்தை தட்டிகேட்கும் ஹீரோ, நியாயத்துக்கு விசுவாசத்துக்கும் ஆன கதை தான் ‘தீனா’. இந்த படத்தில் இருந்து தான் நடிகர் அஜித்துக்கு ‘தல’ என்ற பட்டம் கிடைத்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதிரடியான பின்னணி அமைய இந்த படம் படு ஹிட்.
வெற்றிமாறன் – பொல்லாதவன் (2007)

தனுஷ், ரம்யா, கிஷோர், டேனியல் பாலாஜி நடிப்பில் இளைஞர்கள் மத்தியில் ஒட்டு கல்ட் படமாக இன்றும் கருதப்படும் படம் ‘பொல்லாதவன்‘. சராசரியான ஒரு இளைஞனின் கண்ணோட்டத்தில் அவன் எடுக்கும் முடிவுகள், அவனுக்கு அவனுடைய பைக் மீது உள்ள காதல், அந்த வயதானவர்களின் கோவம் என தெளிவான திரைக்கதையுடன் வெளியான படம். இளைஞர்களுக்கு pulsar பைக்கின் மேல் இருக்கும் ஒரு ஆசையை அதிகரித்த படமும் இது தான்.
கார்த்திக் சுப்பாராஜ் – பீட்சா (2012)

முற்றிலும் இளம் நடிகர்களும் புது முகங்கள் கொண்டு எடுத்த வெற்றி படம் தான் ‘பீட்சா‘. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் நடிப்பில் ஒரு பக்கா திரைக்கதையுடன் உருவான ஹாரர்- திரில்லர் படம். ஒரு பீட்சா டெலிவரி செய்யும் வீட்டில் நடக்கும் எதிர்பார்க்காத அமானுஷ்ய சம்பவங்கள், அனால் நடப்பது உண்மையா என நினைக்கும் முன் கதையில் நடக்கும் திருப்பங்களுடன் ஒரு சுவாரசியமான படமாக அமைந்தது. மிக குறைவான பட்ஜெட்டில் நல்ல வசூல் செய்து அசத்திய ஒரு கார்த்திக் சுப்பாராஜ் படம்.
பா ரஞ்சித் – அட்ட கத்தி (2012)

புதுமையான நகைச்சுவை கலந்த காதல் படத்தை எடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் பா ரஞ்சித். ‘அட்ட கத்தி‘ என்ற படம் ஒரு அடைமொழியாக நடிகர் அட்ட கத்தி தினேஷுக்கு அமைந்தது. பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை கதாநாயகனின் காதல் கதையை நகைச்சுவையாக காட்டிய படம். சந்தோஷ் நாராயணன் இசையில் கானா பாடல்களுடன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
அட்லி – ராஜா ராணி (2013)

முதல் படத்தை கச்சிதமாக எடுத்து 100 நாட்கள் ஓடும் வெற்றி படமாக மாற்றுவது எல்லாராலும் சாதிக்க முடியும் விஷயமில்லை. நடிகர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த படம் ‘ராஜா ராணி‘. அனைவருக்கும் காதல் என்று ஒன்று இருந்திருக்கும், அது கல்யாணத்தில் முடியும் என்பது உறுதியில்லை. ஆனால் பிடிக்காத கல்யாணத்துக்கு பின்னும் நல்லது நடக்கும் என்பது தான் கதை. நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல் என அனைத்தும் கதையுடன் பொருந்தி ஒரு நல்ல கமர்ஷியல் படமாக அமைந்தது.
H வினோத் – சதுரங்க வேட்டை (2014)

முதல் படத்தை பெரிய கதாநாயகனை நம்பி எடுப்பவர்கள் உண்டு, ஆனால் இயக்குனர் வினோத் முற்றிலும் தன்னுடைய கதையை நம்பி எடுத்திருப்பார். நாட்டில் மக்களின் கண் முன்னே நடக்கும் ஊழல்களை ஒரு படமாக எடுத்துக்காட்டியிருப்பார். ‘சதுரங்க வேட்டை‘ திரைக்கதை மற்றும் வசனம் வழியாக படம் முழுவதும் நிஜத்தில் நடக்கும் சூழ்நிலைகளை தெளிவாக காட்டியிருப்பார்.
சுதா கோங்கரா- சூரரை போற்று (2016)

டெக்கான் ஏர்வேஸ் முதல்வர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை கதையை ஒரு சுவாரசியமான படமாக எடுத்து கொரோனா காலத்தில் OTT தலத்தில் வெளியிட்டார் இயக்குனர் சுதா கோங்கரா. நடிகர் சூரியா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் நடிபில் ஒரு நிஜ கதையை ஊக்கமளிக்கும் விதத்தில் சற்றும் தளர்வு இல்லாமல் எடுத்திருப்பார். ‘சூரரை போற்று’ படம் இந்தியளவில் மாபெரும் பாராட்டு பற்று 5 தேசிய விருதுகளை வென்ற படம்.
லோகேஷ் கனகராஜ்- மாநகரம் (2017)

24 மணி நேரத்தில் இரண்டு வெல்வேறு இடத்திலிருக்கும் வெவ்வேறு நபர்களின் கதையும் ஒரு இடத்தில் சந்திக்க, அதற்கு நடுவில் நடக்கும் த்ரில்லான திரைக்கதை தான் ‘மாநகரம்‘. முதல் படத்தில் ஒரு நாளில் நடக்கும் இக்கட்டான கதையை தேர்ந்தெடுத்து அதில் இளம் நடிகர்களான சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா காசான்ட்ரா தேர்ந்தெடுத்து நடிக்கவைத்தார்.
மாரி செல்வராஜ் – பரியேறும் பெருமாள் (2018)

சாத்திய வன்கொடுமைகள் மற்றும் சமூக வேற்றுமை பற்றி பேசும் இயக்குனர்களில் முக்கியமானவர் மாரி செல்வராஜ். அவரின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’, ஒரு கிராமத்தில் இருந்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் மத்தியில் சாதி வெறி எப்படி நிலவுகிறது என்றும் இந்த சீர்க்கேடுகளை நம்பும் படிக்கும் மாணவர்களிடம் உள்ள முன்கோபம் பற்றி பேசிய படம். சமூகத்தில் சமநிலை கூட இல்லை, நல்ல நிலைக்கு வர நினைக்கும் சாமானியனுக்கு நடக்கும் சோதனைகளை அவன் கையாளும் வீதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]