மிஸ் சென்னை பட்டம் பின்னர் நடிப்பில் ஆர்வம் கொண்டு கேரக்டர்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி வரும் துஷாரா விஜயன்.
திண்டுக்கல் பகுதியில் பிறந்த துஷாரா, ஆரம்பகாலத்தில் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பின்னர் பேஷன் துறையில் ஆர்வம் கொண்டு அதில் படிப்பை முடித்தார். நாளடைவில் பேஷன் துறையில் ஆர்வம் அதிகரிக்க விளம்பரங்கள், முன்னணி நிறுவனங்கள் நடத்தும் நிகழ்வில் ராம்ப் வாக் போன்றவற்றில் பங்கு கொண்டார்.

2017-ல் மிஸ் சென்னை பட்டம் வென்ற துஷாரா, பின்னர் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் runner- up ஆக வந்தார். பேஷன் துறையில் ஈடுபாடு கொண்டு இருந்துவந்த துஷாராவிற்கு 2019-ல் புதுமுக இயக்குனர் சந்துரு KR இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் துஷாரா நடிப்பின் மூலம் கவனம் பெற்றார். 2 ஆண்டுகள் கழித்து 2021-ல் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார்.
ட்விட்டரில் துஷாராவின் புகைப்படத்தை பார்த்த பா.ரஞ்சித் ஆடிஷனுக்கு அழைத்து படத்தில் நடிக்க தேர்வு செய்தார். ஆரம்பத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்த ரஞ்சித் அவரை அந்த கேரக்டருக்கு ஏற்றவாறு தயார் செய்தார். வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டும், அங்கு இருக்கும் நடத்தை முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ளும்படி துஷாராவிற்கு அறிவுரை கூறினார். அதனை சரியாக செய்த துஷாரா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நேர்மறையான விமர்சனங்களை பெற்றார்.

அறிமுகமான இரண்டாவது படத்திலேயே துஷாராவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த துஷாராவிற்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சார்பட்டா பம்பரை படத்தில் இவர் பேசிய சில வசனங்கள் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. அதை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் குறிப்பிட்ட ரோலில் நடித்து கலக்கினார்.
பின்னர் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்திருந்தார். அதே கிராமத்து பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது என்று கூறினார். மேலும் எனது படங்களை தேர்வு செய்வதில் நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கேரக்டர் எனக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என கூறியிருந்தார்.
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன் நடித்து வெளியான சைக்கோ த்ரில்லர் படம் அநீதி. விறுவிறுப்பாக படம் முழுவதும் ரசிக்கும் படியாக இருந்தது. ஃபுட் டெலிவரி செய்யும் நபராக அர்ஜுன்தாஸ் நடித்திருப்பார். அர்ஜுன்தாஸ் மீது காதல் கொண்ட துஷாரா விஜயன் ரசிக்கும்படியாக நடித்திருப்பார்.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படத்துக்காக கலாட்டா கிரவுண் விருது, JFW விருது OTTplay விருது, தமிழ் நட்சத்திரம் விருது போன்றவற்றை பெற்றார்.
தற்போது வெளியான ராயன் படத்தில் தனுஷுக்கு தங்கையாக துர்கா கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். இதில் இடம் பெற்ற “உசுரே நீதான்” பாடல் ராயன் படத்தில் இவருக்காக பாடப்பட்டு பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
சமீபத்தில் தான் 35 வயது வரை மட்டுமே நடிக்க போவதாகவும், அதற்க்கு பிறகு உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இனி வரும் ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் | கேரக்டர்கள் | இயக்குனர் |
போதை ஏறி புத்தி மாறி | 12 ஜூலை 2019 | அஜய், ராதா ரவி, மீம் கோபி, துஷாரா விஜயன், சார்லி | ஜனனி | சந்துரு KR. |
சார்பட்டா பரம்பரை | 22 ஜூலை 2021 | ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கேன், துஷாரா விஜயன் | மாரியம்மா | பா. ரஞ்சித் |
அன்புள்ள கிளி | 6 பிப்ரவரி 2022 | மைத்திரியா ராஜசேகர், துஷாரா விஜயன், சாந்தினி, மீம் கோபி, இளவரசு | அன்விதா | ஸ்ரீநாத் ராமலிங்கம் |
நட்சத்திரம் நகர்கிறது | 31 ஆகஸ்ட் 2022 | காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், முனீஷ்காந்த் | ரெனே | பா. ரஞ்சித் |
கழுவேத்தி மூர்க்கன் | 26 மே 2023 | அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனீஷ்காந்த் | கவிதா | கெளதம் ராஜ் |
அநீதி | 21 ஜூலை 2023 | அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், பரணி, வனிதா விஜயகுமார், காளி வெங்கட் | சுப்புலட்சுமி (சுப்பு) | வசந்தபாலன் |
ராயன் | 26 ஜூலை 2024 | தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், SJ. சூர்யா | துர்கா | தனுஷ் |
வேட்டையன் | UP COMING | ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாஃ சில், மஞ்சு வாரியார், | – | TJ. ஞானவேல் |
வீர தீர சூரன் | UP COMING | விக்ரம், துஷாரா விஜயன், SJ. சூர்யா | – | அருண் குமார் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]