தந்தை இயக்குனராக இருந்ததால் எளிதில் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு, பின்னர் தன்னை தானே மெருகேற்றி தனக்கென்று ஒரு இடத்தை இந்திய சினிமா அளவில் உருவாக்கிக்கொண்டவர் பகத் பாசில்.
பகத் பாசில் ஆலப்புழா பகுதியில் பிறந்தார். இவரது தந்தை தமிழ், மலையாள இயக்குனர் பாஃசில் ஆவர். பகத் தனது பள்ளிப் படிப்பை கேரளாவிலும், அலெப்பியில் உள்ள SD கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தார்.

பகத்-ன் தந்தை பாசில் தமிழில் பூவே பூச்சுடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா மற்றும் விஜய்யின் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ், மலையாள மொழியில் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாசில் மகனாக 20-வது வயதில் “கையெத்தும் தூரத்” என்னும் மலையாள படத்தில் அப்பாவின் இயக்கத்தில் 2002-ல் சினிமா உலகில் அறிமுகமாகிறார்.
பகத்-ன் நடிப்பை கண்டு பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. முதல் படமே பெரிய அடியாக பகத்-ன் சினிமா வாழ்வில் இருந்தது. இதிலிருந்து மீண்டு வந்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பகத்.
7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2009-ல் கேரளா கஃபே(anthology film) என்ற மலையாள படத்தில் 10 இயக்குனர்கள் இணைந்து எடுத்த ஷார்ட் பிலிம் ஒன்றாக இணைக்கப்பட்டு வெளியானது. இதில் மம்முட்டி, சுரேஷ் கோபி, திலீப், பிருத்விராஜ் சுகுமாரன், ரஹ்மான். பகத் பாசில், ஜெயசூர்யா, நவ்யா நாயர், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த பகத் ஆர்ட்டிஸ்ட், நார்த் 24 காதம் படத்திற்காக கேரளாவில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.
தனது நடிப்பை விமர்சனம் செய்து அவமானப்படுத்தப்பட்ட இடத்தில் தனது நடிப்பின் மூலம் “பகத் எனும் நடிகனை” பாராட்டும் படியாக உயர்ந்தார். பெங்களூரு டேஸ், தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் போன்ற பாடங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

மோகன் ராஜா இயக்கத்தில் 2017-ல் வெளியான “வேலைக்காரன்” படத்தில் தமிழில் முதன் முதலில் எண்ட்ரி ஆனார். முதல் எண்ட்ரியே மாஸ் ஆக இருந்தது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக சாதுவாக தனது இன்ட்ரோ காட்சியில் இன்டெர்வியூ எடுக்கும் அவரது எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்பதை விட “கதையின் நாயகனே பகத் பாசில்” தான் என்ற அளவில் தனது கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருப்பார். சூப்பர் மார்க்கெட்டில் எந்த எந்த பொருட்கள் எங்கு இருக்க வேண்டும் என்றும், மக்களிடம் எப்படி ஒரு பொருளை எப்படி விற்க வேண்டும் என்றும், மக்களின் அறியாமையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறும் காட்சிகள் எதையும் அறியாத பாமர மக்கள் கூட புரிந்து கொள்ளும் படி அவ்வளவு எளிமையாக கூறியிருப்பார்.

ஒவ்வொரு காட்சியிலும் தனது கண் அசைவு, பேச்சு, நடிப்பின் மூலம் படத்தை விட்டு வெளியே சென்றாலும் அவரது பேச்சும், நடிப்பும் ஒரு வித நினைவாக வந்து வந்து சென்றது என்றே கூறலாம்.
அடுத்து விஜய் சேதுபதியின் சூப்பர் டிலெஸ் படத்தில் சமந்தாவுடன் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். புஷ்பா படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு இணையாக இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது. பன்வர் சிங் ஷெகாவத் IPS கேரக்டரில் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரைன், காளிதாஸ் ஜெய்ராம், காயத்ரி ஆகியோர் நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. அமர் கேரக்டரில் அண்டர் கிரௌண்ட் ஆஃபீஸ்ர் ஆக நடித்திருப்பார்.

கமல், விஜய் சேதுபதி அளவிற்கு பகத் இந்த படத்தில் தனது நடிப்பால் ரசிக்க வைத்திருப்பார். கமலை பற்றிய தகவலை சேகரிக்கும் போலீஸ் ஏஜென்ட் ஆக ரசிக்க வைத்திருப்பார்.
2023-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேலு கேரக்டரில் நடிப்பது என்பதை தாண்டி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். அந்த படத்தில் ரத்தினவேலு என்பது ஒரு நெகட்டிவ். இந்த கேரக்டருக்கு தந்த வரவேற்ப்பு தமிழ் சினிமாவில் ஹீரோ கேரக்டருக்கு தந்த வரவேற்பை விட அதிகம் என்றே கூறலாம்.

கண் அசைவு, நடை, பேச்சு, பார்வை, உடல் மொழி என அனைத்திலும் நடிப்பை காட்டி மிரட்டியிருப்பார். இவர் நடித்த ரத்தினவேலு கேரக்டர் படம் ரிலீஸ் ஆன சமயம் ரீல்ஸ் மூலம் பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

மலையாள மொழியில் வெளியான ஆவேசம் படம் இவரது நெகட்டிவ் கேரக்டருக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்றே கூறலாம். இவர் நடித்த நெகட்டிவ் கேரக்டர்கள் இவரால் மட்டுமே பிரபலமானது என்றே சொல்லும்படி இவரது நடிப்பு இருந்தது.

இயக்குனரின் மகனாக அறிமுகமாகி விமர்சனத்திற்கு ஆளானார். நடிகை நஸ்ரியாவை மணந்தபோது பல கிண்டல் பேச்சுக்கு ஆளானார். ஆனால் நான் பல தோல்விகளை பார்த்தவன் வெற்றி என்னை தேடி வரும் என்பதை போல விமர்சிக்கப்பட்ட, கிண்டல் செய்யப்பட்டவர்களால் இவரை போன்ற நடிகரை கண்டதில்லை என கொண்டாடும் படியான நடிகராக இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்.
நெகட்டிவ் கேரக்டர் என்றால் ரசிகர்களால் வெறுக்கப்பட்ட சினிமாவில் நெகட்டிவ் கேரக்டரை கொண்டாடும் படியான நடிப்பை தந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் பகத் பாசில் முக்கியமானவர். தேசிய விருது, கேரளா பிலிம்பேர் விருது போன்றவை பெற்றுள்ளார்.
Our Birthday Boy Fahadh Faasil 🥳 with the two pillars of Indian cinema, Superstar @rajinikanth & Shahenshah @SrBachchan 🤩 from the sets of #Vettaiyan 🕶️#HBDFahadhFaasil #FahadhFaasil #வேட்டையன் 🕶️ pic.twitter.com/ync10wAsug
— Lyca Productions (@LycaProductions) August 8, 2024
இவரது நடிப்பில் புஷ்பா 2, வேட்டையன் போன்ற படங்கள் வெளிவர காத்திருக்கிறது. இவரது பிறந்தநாளான இன்று வேட்டையன் படக்குழு இவருக்கு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பட்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கூறியுள்ளது.
பாண்டிச்சேரியில் Rajini… ஆவேசத்தில் Fahadh Faasil… ‘Vettaiyan’ வேட்டைக்கு ரெடியா?!
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் | இயக்குனர்கள் | கதாபாத்திரம் |
வேலைக்காரன் | 22 டிசம்பர் 2017 | சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, ரோபோ சங்கர், சினேகா, பிரகாஷ்ராஜ் | மோகன் ராஜா | அதிபன் மாதவ் (ஆதி) |
சூப்பர் டிலெஸ் | 29 மார்ச் 2019 | விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் | தியாகராஜன் குமாரராஜா | முகில் |
விக்ரம் | 3 ஜூன் 2022 | கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரைன், காளிதாஸ் ஜெயராம். | லோகேஷ் கனகராஜ் | அமர் |
மாமன்னன் | 29 ஜூன் 2023 | உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் | ரத்தினவேலு |
புஷ்பா 1 | 17 டிசம்பர் 2021 | அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில். | சுகுமார் | பன்வர் சிங் ஷெகாவத் IPS |
வேட்டையன் | —– | ரஜினிகாந்த், அமிதாப் பட்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், அபிராமி, துஷார விஜயன், ரித்திகா சிங்க் | TJ. ஞானவேல் | —– |
புஷ்பா 2 | ——- | அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் | சுகுமார் | பன்வர் சிங் ஷெகாவத் IPS |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]