பிற மொழி படங்களின் கதைக்களத்தை எடுத்து அதை வைத்து அந்தந்த மொழி பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எடுப்பது வழக்கம் தான். அப்படி தமிழில் ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்து பல முறை ஹிட் அடித்துள்ளனர். ஆனால் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள் பல யாரும் கண்டுகொள்ளாமல் Flop ஆகியுள்ளது. அப்படி தோல்வியடைந்த ரீமேக் படங்கள், கதையாலோ, அந்த ஒரிஜினல் பாத்திரங்களின் குணாதிசியங்களை தமிழில் இயக்கமுடியாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் உண்டு.
Red Corner – தாம் தூம்

1997ல் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் நடித்து வெளியான படம் ‘Red Notice’. இயக்குனர் ஜான் அவ்னோட் பெரும்பாலும் சீன நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருப்பார். ஒரு பணக்கார தொழிலதிபர் வேலை சம்பந்தமாக சீனா செல்கிறார். அங்கு அவரின் போட்டியாளர்கள் சீன அரசாங்க அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து அவர் மேல் பொய்யாக பழி சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள். அவருக்கு அங்குள்ள ஒரு பெண் வக்கீல் மட்டுமே துணையாக நின்று வாதாடி உண்மைகளை வெளிக்கொண்டு வருவது தான் படம்.

இதே கதையை 2008ம் ஆண்டு ஜெயம் ரவி, கங்கனா ரணாவத், ஜெயராம் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் ‘தாம் தூம்’ என்று தமிழில் வெளியானது. பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்கள் இயக்கிய கடைசி படம். படத்தில் அணைத்து பாடல்களும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நல்ல வரவேற்பு பெற்றது, முதல் வாரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு அதற்கு பிறகு தொடரவில்லை.
The Reincarnation Of Peter Proud – எனக்குள் ஒருவன்

1975ல் ஒரு பிரபல ஹாரர் புதினத்தை அதே பெயரில், ‘The Reincarnation Of Peter Proud’ படமாக எடுத்தார்கள். மறுபிறவி எடுக்கும் கதாநாயகன், தான் முந்தைய பிறவியில் கொல்லப்பட்டதை தெரிந்து குழப்பத்துடன் திரிகிறார். அப்படி அவர் வாழ்ந்த ஊருக்கு சென்று முந்தைய பிறவியின் நினைவுகள் உடன் எப்படி அந்த கொலையை பற்றி தெரியவைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

இதே கதையை 1984ல் கமல் ஹாசன், ஷோபனா, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்த வெளியான படம் ‘எனக்குள் ஒருவன்’. தமிழ் ரசிகர்களுக்காக சற்றே கதைக்களத்தில் மாற்றம் செய்து எடுத்துள்ளார் இயக்குனர் எஸ். பி. முத்துராமன். பிரபலநடன கலைஞராக கமல் ஹாசன் நடித்திருப்பார். அவருக்கு திடீரென கடந்த பிறவியின் நினைவுகள் வர, அதை நோக்கி டார்ஜிலிங் செல்கிறார். அங்கு அவரின் முந்தைய பிறப்பில் அவரை கொடூரமாக கொன்றவரை தேடி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருவைத்து தான் படம்.
கமல், ரஜினி ஆகிய ஜாம்பவான்களை வைத்து Block buster வெற்றி கண்ட எஸ்.பி. முத்துராமன்
ஆங்கிலத்தில் திருப்பங்கள் மற்றும் திரைக்கதையில் நல்ல சுவாரசியமாக எடுத்த படத்தை தமிழில் படமாக மாற்றும்போது அந்த கதையின் கருவை மட்டும் எடுத்து அதில் மாற்றங்கள் செய்து எடுக்காமல், அதே கதையில் குழப்பமான திருப்பங்களை கொண்டு பெரியளவில் ஓடாத படமாக Flop ஆனது ‘எனக்குள் ஒருவன்’.
Guess Who – கண்ணாமூச்சி ஏனடா

2005ல் வெளியான அமெரிக்க ஹிட் படம் ‘Guess Who’. அஷ்டன் குட்ச்சேர் மற்றும் ஜோயி செல்டனா நடிப்பில் வெளியான படமே 1967 வெளியான ‘Guess Who’s Coming To Dinner’ படத்தின் ரீமேக் தான். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது உள்ள நிறைவேறியின் காரணமாக கலப்பு திருமணங்கள் செய்ய தடை இருந்தது. இதை மாற்றும் வகையில் எடுத்த முதல் படத்தின் இன்னொரு மாற்று சிந்தனை தான் 2005ம் ஆண்டு வந்த படம். தனது மகள் ஒரு வெள்ளையணை காதலிப்பதை தெரிந்து அவர்களை ஏற்க மறுக்கிறார். அதை ஒரு நகைச்சுவையான படமாக மாற்றி எடுத்திருப்பார்கள்.

இந்த படத்தின் கதையை தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி பெரிய வேற்றுமை இல்லாத திரைக்கதையாக இயக்கியிருப்பார் இயக்குனர் V. பிரியா. பிரித்விராஜ், காதல் சந்தியா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் நடித்த இந்த படத்துக்கு பெரியளவில் பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. பணக்கார வீட்டு பையனை காதலிக்கும் மகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தையும் ஆதரவு கொடுக்கும் அம்மாவும் என முதல் பாதி நகைச்சுவையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கதையை கூறிய விதம் மக்களை கவரவில்லை.
Dial ‘M’ for Murder – சாவி

உலக பிரபல இயக்குனரான அல்ப்பிரேட் ஹிட்ச்காக் இயக்கிய ‘Dial ‘M’ for Murder‘ படத்தின் தமிழ் தழுவல் தான் ‘சாவி’. ஒரிஜினல் அமெரிக்கன் படத்தில் நடிகை கிரேஸ் கெல்லி தன்னுடைய கணவனை ஏமாற்றி மற்றொரு நபருடன் உறவில் இருப்பார். இதை அறிந்த அவரின் கணவன், அவளை கொலைசெய்யா போடும் திட்டம் எப்படி கடைசியில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என்பது தான் படம். 1954ல் மிக புதுமையான வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான ஒரு கிரைம் திரில்லர் படம்.

தமிழில் சத்யராஜ், சரிதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வழியான படம் தான் ‘சாவி’. படத்தின் முக்கியமான திருப்பமே அந்த ‘சாவி’ தான். அதையே படத்தின் தலைப்பாக வைத்து, சற்றே மெதுவான கதைக்களத்துடன் வெளியானது. கதையில் இருக்கும் ஒரு திருப்பம் கிளைமாக்ஸ் மட்டும் தான், மற்றபடி ஒவ்வொரு திருப்பமும் காட்சியும் அப்படியே ரீமேக் செய்யப்பட்டது படத்தை Flop ஆக்கியது.
Sathyaraj நடிப்பில் என்றும் கொண்டாடப்படும் வில்லன் கதாப்பாத்திரங்கள்…
Predator – அசுரன்

1987ல் அர்னால்டு நடித்த Predator படத்தை பார்க்காதவர்கள் சிலர் தான். அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகளவில் பலராலும் கொண்டாடப்பட்ட படமாக, Science – Fiction வகை படங்களில் அதிரடியான ஆக்ஷன் படமாக அமைந்தது. ஒரு ஏலியன் விண்களத்தில் இருந்து பூமியில் தரையிறங்கிய ஒரு Predator, மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது. அவர்களை மீட்க போர் வீரர்கள் ஒரு குழுவாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த குழுவின் தலைவர் தான் ‘Dutch’ ஷேஃபர். அவர்களின் வீரமான சாகசம் தான் படத்தின் கதைக்களம்.
இதே கதையை தமிழில் ‘அசுரன்’ என்ற பெயரில் 1995ல் வெளியானது. நடிகர் அருண் பாண்டியன், ரோஜா, ராதா ரவி, விஜயகுமார் ஆகியோர் நடித்தனர். அருண் பாண்டியன் ஒரு விஞ்ஞானி ஒரு அடர்ந்த காட்டில் ஆராய்ச்சி செய்ய செல்கிறார். அங்கு ஏற்கனவே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்கும் வில்லனும் உள்ளன. அதையும் தாண்டி உயிருக்கு ஆபத்தான ஒரு predator இருப்பதை அறிந்து, எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கதை. அனால் கதையின் ஓட்டம் குழப்பமாக அமைந்து, அவ்வளவு சுவாரசியம் இல்லாமல் இந்த படமும் Flop ஆனது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]