ஹீரோக்கள் இரண்டு, மூன்று கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் அந்த அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக நடித்த சில நடிகைகள் இரட்டை வேடங்களில் நடித்து வந்துள்ளன.
2000-க்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்த நடிகைகள்:
திரிஷா:

2000 காலகட்டத்தில் இருந்து நடித்து தற்போது முன்னணி ஹீரோயின் ஆக இருந்துவரும் திரிஷா 2018-ல் த்ரில்லர் படமான மோகினி-ல் வைஷ்ணவி மற்றும் மோகினி என்ற கேரக்டரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ரமணா மகேஷ் இயக்கத்தில், லக்ஷ்மண குமார் தயாரித்திருந்தார். நடிகை திரிஷா, முகேஷ் திவாரி, யோகி பாபு, ஜாக்கி பக்னானி, பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
சமந்தா:

2015-ல் விக்ரம், நடிகை சமந்தா, பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யு சிங்க் ஆகியோர் நடிப்பில் AR. முருகதாஸ் தயாரிக்க, விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 10 எண்றதுக்குள்ள. இதில் சமந்தா ஷகீலா மற்றும் காட்கி மோய் என்ற கேரக்டரில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஜாலியான சுட்டி பெண் போலவும், திமிரான, ஒரு கொடூர கூட்டத்தின் தலைவியாக உத்தரகண்ட் பகுதியில் இருப்பதை போல நடித்திருந்தார்.
ப்ரியாமணி:

ப்ரியாமணி ஒட்டி பிறந்த இரட்டையர்களாக சாருலதா படத்தில் சாரு மற்றும் லதா கேரக்டரில் நடித்திருந்தார். இதற்காக சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கு வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிக்காத வகையில் பொன் குமரன் இயக்கத்தில் இந்த கேரக்டரை உருவாக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் இதே கான்செப்ட் கொண்ட சூர்யாவின் மாற்றான் படம் வெளியானது.
சினேகா:

கருபழனியப்பன் இயக்கத்தில், TG. தியாகராஜன் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், சினேகா, விவேக், ரவி பிரகாஷ் நடிப்பில் 2003-ல் வெளியான படம் பார்த்திபன் கனவு. சினேகா சத்யா மற்றும் ஜனனி என்ற இரு கேரக்டரில் ஜாலியான பெண்ணாகவும், அமைதியான குடும்ப பெண் ஆகவும் நடித்திருந்தார்.
ஜோதிகா:

சசி ஷங்கர் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்த படம் பேரழகன். ஜோதிகா செண்பகம் மற்றும் பிரியா நாயர் கேரக்டரில் நடித்திருப்பார். செண்பகம் கேரக்டரில் கண் பார்வை தெரியாததை போலவும், பிரியா கேரக்டரில் காலேஜ் படிக்கும் பெண்ணாகவும் நடித்திருப்பார். இந்த படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகா பெற்றார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது.
நயன்தாரா:

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் 2015-ல் நடிகை நயன்தாரா, ஆரி அர்ஜுன், ரோபோ சங்கர், மைம் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாயா. அப்சரா அர்ஜுன், மாயா மேத்தியூஸ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் நயன்தாரா. இந்த படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது.
2000-க்கு முன்பு இரட்டை வேடங்களில் நடித்த நடிகைகள்:
சிம்ரன்:

V. கௌதமன் இயக்கத்தில் முரளி, சிம்ரன், டெல்லி கணேஷ், சின்னி ஜெயந்த், சார்லி ஆகியோர் நடிப்பில் 1999-ல் வெளிவந்த படம் கனவே கலையதே. பஞ்சாப் பகுதியில் வாழும் அம்ரிதா கேரக்டரிலும், மற்றொரு சிம்ரன் சென்னையில் வாழும் சாரதா கேரக்டரிலும் நடித்திருந்தனர். தேவா இசையில் “பூசு மஞ்சள்”, ” கண்ணோடு கண்ணோடு” பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.
ஐஸ்வர்யா ராய்:

மணிரத்னம் இயக்கத்தில், AR. ரஹமான் இசையில் பிரகாஷ் ராஜ், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், ரேவதி, தபு, கௌதமி, நாசர் நடிப்பில் வெளியான படம் இருவர். MGR, கலைஞர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப்படமாக எடுக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராய் கல்பனா மற்றும் புஷ்பவல்லி கேரக்டரில் நடித்திருப்பார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பிரகாஷ் ராஜ்க்கு வழங்கப்பட்டது.
மீனா:

1995-ல் மணிவாசகம் இயக்கத்தில் சரத் குமார், மீனா, செந்தில், ரகுவரன், கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நாடோடி மன்னன். மீனா அம்மா மற்றும் மகள் கேரக்டரில் நடித்திருப்பார். வயதான அம்மாவாக மீனாட்சியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்த மகள் ப்ரியாவாகவும் நடித்திருப்பார்.
பானு பிரியா:
KS. கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், பானுப்ரியா, நம்பியார், மனோரமா, மஞ்சுளா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் காவிய தலைவன். நடிகை பானுப்ரியா, இரட்டை வேடத்தில் ட்வின்ஸ் சாரதா மற்றும் பிரியாவாக நடித்திருப்பார்.
நதியா:
1986-ல் தமிழழகன் இயக்கத்தில் சத்யராஜ், நதியா, ரகுவரன், செந்தில் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியான படம் மந்திர புன்னகை. இந்த படத்தில் நடிகை நதியா, கீதா மற்றும் ஷீலா கேரக்டரில் நடித்திருப்பார். சத்யராஜூம் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1980-க்கு முன்பு இரட்டை வேடங்களில் நடித்த நடிகைகள்.
ஜெயலலிதா:

1966-ல் சத்யம் இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, ஆனந்தன் நடிப்பில் வேதா இசையில் வெளியான படம் யார் நீ. நடிகை ஜெயலலிதா சந்தியா மற்றும் மோஹினி கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் ஜெயலலிதா நடிப்பிற்காக மெட்ராஸ் பிலிம்பென்ஸ் அசோசியேசன் சார்பாக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
சாவித்ரி:
1962-ல் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, MR. ராதா நடிப்பில் வெளியான படம் காத்திருந்த கண்கள். சாவித்ரி இரட்டை சகோதரிகளாக செண்பகம் மற்றும் லலிதாவாக நடித்திருந்தார். வறுமை காரணமாக இருவரும் பிரிந்து வாழ வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.
சௌகார் ஜானகி:
தாதா மிராசி இயக்கத்தில் 1964-ல் சிவாஜி கணேசன், சரோஜா தேவி. MR. ராதா, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் புதியப்பறவை. சௌகார் ஜானகி சித்ரா மற்றும் சரசாவாக நடித்திருப்பார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. படம் 100 நாட்ட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது.
KR. விஜயா:
ஸ்ரீகாந்த் இயக்கத்தில் 1965-ல் வெளியான படம் இதய கமலம். KR. விஜயா, ருக்மணி, ஷீலா தேவி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. KR. விஜயா கமலா, விமலவாக நடித்திருப்பார்.
லட்சுமி:
1976-ல் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி, ஸ்ரீகாந்த், வரலட்சுமி நடிப்பில் வெளியான படம் வாழ்க்கை என் பக்கம். சரஸ்வதி மற்றும் உஷாவாக லட்சுமி நடித்திருப்பார்.
ஸ்ரீதேவி:
1978-ல் AC. திருலோகசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, விஜயகுமார், ஜெய சித்ரா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் வணக்கத்திற்குரிய காதலியே. ஸ்ரீதேவி சாந்தி மற்றும் ஜென்னியாக நடித்திருந்தார். எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் திறன் கொண்ட ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]