12 வயதில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி Love Today படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கள்வனானார் Ivana.
அலீனா ஷாஜி என்ற இயற்பெயர் கொண்ட Ivana மலையாள சினிமாவில் 2012-ல் “Masters” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

2015 மற்றும் 2016-ல் ராணி பத்மினி, அனுராகா கரிக்கின் வெல்லம் போன்ற மலையாள படங்களில் நடித்திருந்தார். பின்னர் 18 வயதில் தமிழில் முதன் முறையாக பாலா இயக்கத்தில் 2018-ல் நாச்சியார் என்ற படத்தில் “கோட்டையரசி” என்ற கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார்.

அடுத்து 2019-ல் ஹீரோ படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான Love Today படத்தின் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்றார்.
காதலையும், காதலர்களுக்கு இடையேயான புரிதலையும் அழகாக காட்டியிருப்பார். படம் பெரிய ஹிட் ஆக தமிழ் ரசிகர்களின் crush ஆக மாறினார்.
பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் LGM, மதிமாறன் போன்ற படங்களில் நடித்த நிலையில் Love Today படத்திற்க்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றி பெறவில்லை. GV. பிரகாஷ் நடிப்பில் வெளியான கள்வன் படத்தில் பாலாமணி கேரக்டரில் நடித்திருந்தார்.

Let’s Get Married படம் இந்திய முன்னாள் கேப்டன் தோனி அவர்களின் பட தயாரிப்பு நிறுவனமான “தோனி என்டர்டைன்மெண்ட்ஸ்” மூலம் தயாரித்து வெளியான முதல் படமாகும்.
2018 | நாச்சியார் (கோட்டையரசி) |
2019 | ஹீரோ (மதி) |
2022 | லவ் டுடே (நிக்கிதா) |
2023 | LGM (Lets Get Married) (மீரா) மதிமாறன் (மதி) |
2024 | கள்வன் (பாலாமணி) |

இதுவரை லவ் டுடே படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லும்படியான வெற்றியை பெறாத இவானா இனி வரும் படங்களில் கவனம் எடுத்து வேண்டிய நிலையில் உள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]