வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை என்பதை போல ரஜினிகாந்த் Jailer படத்தில் செய்த சம்பவம் அந்த ஆண்டின் box office -ல் கலக்கியது. அதில் நடித்த நடிகர்கள் பற்றிய தகவல்.
கோலமாவு கோகிலா, Doctor படத்தின் வெற்றியை தொடர்ந்து Beast படத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றார் நெல்சன். பல Troll, நெகடிவ் கமெண்ட்களுக்கு ஆளானார். அடுத்து ரஜினிகாந்த் உடன் வெளியான Jailor படத்தில் விட்டதை பிடிக்கவேண்டும் என்று ஒரு தரமான சம்பவத்தை செய்தார்.
ரஜினிகாந்த் 2000 ஆண்டுக்கு பிறகு நடித்த பெரும்பாலான படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில், சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார் தான் என ரஜினிகாந்த்தை கொண்டாடிய படம் Jailer. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஆகஸ்ட் 10, 2023 -ல் வெளியாகி அந்த ஆண்டில் 650 கோடி வரை வசூல் செய்து box office -ல் கலக்கிய படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தது.
ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக ஓய்வு பெற்ற jail அதிகாரி கேரக்டரில் நடித்திருப்பார். முதல் பாதியில் அமைதியாகவும், இரண்டாவது பாதியில் பிளாஷ்பேக்கில் “டைகர் முத்துவேல் பாண்டியனாக” அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் விஜயா கேரக்டரில் நடித்திருப்பார்.
ரஜினிகாந்த்தின் மகனாக வசந்த் ரவி ACP அர்ஜுன் பாண்டியனாகவும், அவருக்கு மனைவியாக மிர்ணா மேனன் ஸ்வேதா பாண்டியனாக நடித்திருப்பார். வில்லனாக விநாயகன் வர்மா கேரக்டரில் கலக்கியிருப்பார். அவருடன் மாரிமுத்து அவர்கள் பன்னீர் கேரக்டரிலும், ஹர்ஷத் தன்ராஜ் கேரக்டரிலும் நடித்திருப்பார்கள். ரஜினிகாந்த்திற்கு உதவியாக மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்றோர் கேமியோ ரோலில் வந்து அரங்கத்தை அதிரவைத்தனர்.
Jailer படத்தில் நடித்த நடிகர் நடிகைகள்.
ரஜினிகாந்த் – முத்துவேல் பாண்டியன்

ரம்யா கிருஷ்ணன் – விஜயா (விஜி)

விநாயகன் – வர்மா

வசந்த் ரவி – அர்ஜுன் பாண்டியன், மிர்ணா மேனன் – ஸ்வேதா பாண்டியன்

யோகி பாபு – விமல் (டாக்ஸி ட்ரைவர்), VTV கணேஷ் – DR. தண்டபாணி

ரெடின் கிங்ஸ்லி – திவ்யா நாதன்

மோகன் லால் – மேத்யூ, ஜாக்கி ஷெராஃப் – காம்தேவ்

சிவராஜ் குமார் – நரசிம்மா

தமன்னா – காம்னா

ஜாஃபர் சாதிக் – டேப்நாத்
ரித்விக் – ரித்து
சுனில் – ப்ளாஸ்ட் மோகன்
சரவணன் – சீனு
G. மாரிமுத்து – பன்னீர்
ஹர்ஷத் – தன்ராஜ்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com