நடிகர் Jnr.NTR ஆறு வருடங்களுக்கு பிறகு அவரை மையமாக வைத்து கதாநாயகனாக நடித்து செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள “Devara – Part 1” படத்தின் trailer நேற்று வெளியானது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்தியில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. கொரட்டல சிவா அவர்கள் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிகர் சைப் அலி கான் நடிக்கிறார்.
இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு இவர்கள் இருவரின் கூட்டணியில் “Janata Garage” என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் Jnr.NTR உடன் நடிகர் மோகன்லால், நடிகைகள் சமந்தா மற்றும் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
நடிகர் Jnr.NTR, “தேவரா” படத்தில் தேவரா மற்றும் வரதா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதே போல் இரட்டை வேடத்தில் “ஆதுர்ஸ், ஆந்திரவாளா, சக்தி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான பின்னணி இசை ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான “Fear song”, “Chuttamalle/Paththavaikkum”, “தாவூதி” பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று வெளியான trailer-ன் மூலமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
நடிகை ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். தனது தாய் நடிகை ஸ்ரீதேவிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தன்னுடைய திரை பயணம் இருக்கும் என்று ஜான்வி தெரிவித்துள்ளார். பான் இந்தியா ரசிகர்களை கவரும் விதமாக பிற மொழிகளில் முன்னணி நடிகர்களாக உள்ள பலர் இந்த திரை படத்தில் நடித்துள்ளனர்.
2018-ல் வெளியான “Aravinda Sametha Veera Raghava” பிறகு, 6 வருடம் கழித்து நடிகர் Jnr.NTR solo ஹீரோவாக நடித்து வெளியாக உள்ள தேவரா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Sl.no | தேவரா – Part 1ல் நடிக்கும் நடிகர்/நடிகை | கதாபாத்திரம் |
1 | N.T. ராமா ராவ் | தேவரா, வரதா |
2 | சைப் அலி கான் | பைரா |
3 | ஜான்வி கபூர் | தங்கம் |
4 | ஸ்ருதி மறத்தே | – |
5 | பிரகாஷ் ராஜ் | – |
6 | ஸ்ரீகாந்த் | – |
7 | கலையரசன் | – |
8 | ஷைன் டாம் சாக்கோ | – |
9 | நரேன் | – |
10 | முரளி சர்மா | – |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]