பல்துறை வித்தகரான இயக்குனர் கே. பாக்யராஜ், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக அதிகம் விரும்பப்படும் திரைக்கதை எழுத்தாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக என தன் திறமையை முழுவதும் சினிமாவில் உபயோகித்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அப்படி அவர் இயக்கிய டாப் தமிழ் படங்களின் வரிசை இது.
சுவரில்லாத சித்திரங்கள் (1979)

கே. பாக்யராஜ் இயக்கிய முதல் படம் ‘சுவரில்லா சித்திரங்கள்’. இளம் நடிகர்கள் சுதாகர் மற்றும் சுமதி நடித்த இந்த படம் வெளியாகி படத்தின் இசை, வசனத்துக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. சர்ச்சையான கதையாக இருந்தாலும் படத்தில் கூறப்பட்ட கண்ணோட்டம் மக்களின் புரிதலுக்கு விடப்பட்டது. கங்கை அமரன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
இன்று போய் நாளை வா (1981)

முக்கோண காதல் பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ‘இன்று போய் நாளை வா’ படத்தில் ஒரு பெண்ணை மூன்று ஆண்கள் காதலிப்பதும் அதில் யாருடன் அவள் சேருகிறார் என்ற கதையை நகைச்சுவையான படைப்பாக மாற்றியிருக்கிறார் கே. பாக்யராஜ். இந்த படத்தின் காமெடி காட்சிகளுக்கு இன்றும் சிரிக்காத ஆள் இல்லை. ‘ஏக் கவுன் மேன்…’ என வரும் ஹிந்தி பாடம் எடுக்கும் காட்சிக்கு இன்றளவும் ரசிக்கும்படி இருக்கிறது.
அந்த 7 நாட்கள் (1981)
கே. பாக்யராஜ் இயக்கி நடித்து கமர்ஷியல் வெற்றிப் படமாக அமைந்தது ‘அந்த 7 நாட்கள்’. நடிகர் ராஜேஷ், நடிகை அம்பிகா மற்றும் கே. பாக்யராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்த இந்த படத்தின் பின்னணி நடிகர் சந்திரபாபுவின் கதை தான். விருப்பமில்லாத திருமணத்துக்கு பின் காதலித்த வரை மறக்கமுடியாமல் இருக்கும் பெண்ணாக அம்பிகா நடித்திருப்பார். பாலக்காட்டு மாதவன் என்ற பாத்திரத்தில் கே. பாக்யராஜ் மறக்கமுடியாத வசனங்களை எழுதியிருப்பார். ‘என்ட காதலி உங்க மனைவி ஆகலாம், உங்கள் மனைவி என்ட காதலி ஆக முடியாது’ போன்ற வசனங்கள் பல ஆண்டுகள் பேசப்பட்டு நகைச்சுவையாக கூட பயன்படுத்தப்பட்டது.
தூரல் நின்று போச்சு (1982)

கே. பாக்யராஜ், சுலக்ஷனா, எம். என். நம்பியார் நடித்துள்ள படம். ஒரு கல்யாணம், பெண்ணை மிகவும் பிடித்து அவளை தன்னை விரும்ப வைத்து பின்னர் வரும் தடைகளை தாண்டி எப்படி அவளின் கரம் பிடிக்கிறார் என்பது தான் கதை. வழக்கமான நகைச்சுவை குறைந்த படமாக இருந்தாலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முந்தானை முடிச்சு (1983)

ஒருவரி கதையை ஒரு முழு படமாக மாற்றி, தெகட்டாமல் படைப்பாக மக்களுக்கு தருவதில் வல்லவர் பாக்யராஜ். அப்படி ஒரு மனைவியை இழந்து குழந்தையை வைத்து வாழும் கிராமத்து டீச்சர். அவரை காதலிக்கும் இளம் பெண் பல பொய்கள் சொல்லி அவரை மணக்கிறாள். அதன் பின் அவர்களின் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி பேசும் படம். நடிகை ஊர்வசியின் முதல் படம், சற்றும் குறையில்லாமல் அழகாக நடித்திருப்பார். நூறு நாட்கள் ஓடி கேரளத்திலும் வெற்றியடைந்த குறைவான தமிழ் படங்களில் ‘முந்தானை முடிச்சு’ படம் ஒன்று
தாவணிக் கனவுகள் (1984)

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோல்ட் மெடல் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார் பாக்யராஜ். படித்து முடித்த பின்னரும் வேலை வாய்ப்பு இல்லாமல் கிராமத்தில் உள்ளவர், சென்னைக்கு வருகிறார். சினிமா வாய்ப்பு கிடைக்க அவர் படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகிரார். புகழின் உச்சத்தில் இருப்பவர் தன் தங்கைகளுக்கு பணக்கார வீட்டு மாப்பிள்ளை களை பார்த்து திருமணம் செய்ய விரும்பும் அவர், அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பதை தெரிந்துகொள்கிறார். அதனால் தன்னுடைய பாலிய நண்பர்கள் வசதியில்லாத வர்கள் என்றாலும் நல்ல குணம் படைத்தவர்கள் என்பதால் அவர்களின் திருமணத்தை முடித்து வைப்பார். கடமை, சமூக பிரச்சினைகளான வேலையின்மை பற்றி பேசும் படம்.
சின்ன வீடு (1985)

தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றமாதிரியான ஒரு கனவு கன்னியை மனதில் நினைத்து கல்யாணம் என ஒன்று நடந்தால் அப்படியான பெண்ணுடன் தான் என் எண்ணும் நபர். குடும்பத்தின் கட்டாயத்தால் விருப்பமில்லாத பெண்ணை மணமுடித்து, விதியே என வாழ்கிறார். அப்போது அவருக்கு பிடித்த மாதிரியான பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் தான் படம். உணர்ச்சிகரமான படத்தை கே. பாக்யராஜிடம் எதிர்பார்க்காத மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இந்த படமும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர போலிஸ் 100 (1990)
எம். ஜி. ஆர், பாக்யராஜ், கௌதமி, சில்க் ஸ்மிதா நடித்த ஒரு ஆக்ஷன் காமெடி படம் தான் ‘அவசர போலிஸ் 100’. இரட்டை வேடத்தில் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் நடிக்க, 1990ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரலந்துவிடுவார். அவரின் திரை வாரிசாக பாக்யராஜை அறிவித்தார். இந்த படத்தில் மீதி காட்சிகளில் இரட்டை வேடத்தில் பாக்யராஜ் தான் நடித்திருப்பார். இந்த படத்தின் தழுவலில் பல படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
ராசுக்குட்டி (1992)
1992ல் பாக்யராஜ், ஜஸ்வர்யா, மனோரமா நடித்த காமெடி படம் ‘ராசுக்குட்டி’. படிக்காத ராசுக்குட்டி தன் திருமணத்திற்காக படித்தவர் என பொய் சொல்லி தான் ஒரு வக்கீல் என நம்ப வைக்கிறார். இதை தெரிந்த கதாநாயகி தன்னை ஏமாற்றியதால் அவரை ஏற்க மறுக்கிறார், கடைசியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. நகைச்சுவை காட்சிகளுக்கு பிரபலமான படம், இன்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகள் பல உண்டு.
சுந்தர காண்டம் (1992)
தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பல முக்கோண கதைகளில் ‘சுந்தர காண்டம்’ ஒன்று. ஆசிரியராக நடிக்கும் பாக்யராஜை தொல்லை செய்யும் மாணவி சிந்துஜா (பிரியா). தன் ஆசிரியர் மீது ஒரு காதல் ஏற்பட, அவரை எப்படியாவது தன்னை விரும்ப வைக்க வேண்டும் என துரத்தி துரத்தி காதலிக்கிறாள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அனாதை பெண்ணை திருமணம் செய்கிறார் பாக்யராஜ். அவர் எதிர்பார்த்த குணாதிசயங்கள் அவளிடம் இல்லை என்றாலும் அவளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த இரண்டு பெண்களும் சந்திக்க அதன் பிறகு நடக்கும் கதை, யாருடன் சேர்வார் பாக்யராஜ் என கதை நகரும். நல்ல கமர்ஷியல் படமாக வெற்றியடைந்தது இந்த படம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]