ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களை வைத்து அவர்களின் சினிமா வாழ்வில் பெரிதும் கொண்டாடப்படக்கூடிய படங்களை தந்தவர் K.S. Ravi Kumar.
திரையுலகில் வெற்றி என்பது ரசிகர்களை ரசிக்க வைத்து அந்த படைப்பை கொண்டாடும் வகையில் செய்வது தான். அந்த வகையில் நடிகர்கள், இயக்குனர்கள் என ரசிகர்களுக்கான படைப்பை தரும் போது அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு சேர்த்து விடுவார்கள் ரசிகர்கள். அவர்கள் விரும்பும் படைப்பை தரவில்லை என்றால் புகழின் உச்சியில் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களை மறந்து விடுவார்கள்.
ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனநிலையை அறிந்து காலத்திற்கு ஏற்ப படைப்புகளை தந்து வந்தனர். அவற்றை ரசிகர்கள் ரசித்தும் கொண்டாடியும் வந்தனர். அவ்வாறு படைப்புகளை தந்து வந்தவர்களில் ஒருவர் K.S. Ravi Kumar.
ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் உதவி இயக்குனராக பாரதி ராஜா, விக்ரமன், ராம்தாஸ் ஆகியோரிடம் பணியாற்றி வந்தார். தனது தந்தை தொழிலதிபர் என்பதால் சினிமா பயணத்தில் பொருளாதார ரீதியான பெரிதாக பாதிப்படையாமல் இருந்து வந்தார்.
பின்னர் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் “புரியாத புதிர்” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்நது சரத் குமாரை பாசிட்டிவ் ரோலில் முதல் முதலில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றியை கொடுத்த படம் “சேரன் பாண்டியன்”.
கிராமத்து சாயலில் எடுக்கும் படங்களில் கில்லாடியான K.S. RAVI KUMAR 1994-ல் சரத் குமார், விஜய் குமார் ஆகியோரை வைத்து மீண்டும் பிளாக் பாஸ்டர் ஹிட் தந்த படம் “நாட்டாமை”. அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்று இன்றளவும் ரசிக்கும் படியான படமாக இருந்து வருகிறது. பாடல்கள், கவுண்டமணி-செந்தில் காமெடி, சிறந்த கதையம்சம் போன்றவை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது.
அதன் பின்னர் கமல், ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து முத்து, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, பஞ்சதந்திரம், தசாவதாரம் என ரசிகர்கள் என்றும் கொண்டாடும் evergreen படங்களை தந்து அசத்தினார். ரஜினிக்கு ஒரு பக்கம் கமலுக்கு ஒரு பக்கம் என இருவருக்கும் மாறி மாறி பிளாக் பாஸ்டர் ஹிட் தந்தார்.
சரத்குமார், K.S. RAVI KUMAR காம்போவில் நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பாட்டாளி, சமுத்திரம் என அனைத்து படங்களும் ரசிக்க வைத்தன. இருவரின் சினிமா வாழ்விலும் இந்த படங்கள் இன்றளவும் பேர் சொல்லும் படமாக இருந்து வருகிறது.
விஜய், அஜித் ஆகிய இருவரையும் வைத்து மின்சார கண்ணா, வில்லன், வரலாறு ஆகிய படங்களை தந்தார். அஜித்தின் வரலாறு படம் முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட அஜித்தின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தது.
2010-ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த K.S. RAVI KUMAR படங்கள் பெரிதாக ரசிக்கும்படியாக அமையவில்லை. தனது ஆரம்ப படங்களில் guest ரோலில் அவ்வப்போது நடித்து வந்த ரவிக்குமார் பின்னர் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து அசத்தினார். கோமாளி, அயோக்கியா, கூகுள் குட்டப்பா, தங்க மகன், ரெமோ போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
1990, 2000 கால கட்டத்தில் பல வெற்றிப்படங்களை தந்த ரவிக்குமார் மீண்டும் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்க கூடிய வகையில் படங்களை எடுக்க வேண்டும் என பலரும் நினைத்து வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]