Kamal Hassan – Sridevi காம்போ அன்றைய காலகட்டத்தில் பெரிதும் ரசித்து கொண்டாடப்பட்டது. இருவருக்கிடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளனர்.
கமல், ஸ்ரீதேவி இணைந்து 25 படங்களுக்கு மேலாக நடித்துள்ளனர். மற்ற மொழிகளில் நடித்த படங்களும் அளவில் ஹிட் அடித்தது.
மூன்று முடுச்சு:
K. பாலசந்தர் இயக்கத்தில் MS. விஸ்வநாதன் இசையில் Kamal Hassan – Sridevi விஜயா, ரஜினி, விஸ்வநாத் ஆகியோர் நடிப்பில் 1976-ல் வெளியானது. 1974-ல் எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படமான ஓ சீதா கதாவை அடிப்படையாகக் கொண்டது. கல்லூரி செல்லும் பெண்ணை காதலிக்கும் இரண்டு ஆண்கள் (ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்) ஆகிய மூன்று பேரைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.
பதினாறு வயதினிலே:

16 வயதில் மயில் என்ற கேரக்டரை மையமாக வைத்து 1977-ல் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான படம் 16 வயதினிலே. கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், கவுண்டமணி நடிப்பில் சூப்பர் ஹிட் ஆனது. ரஜினியின் “இது எப்படி இருக்கு” டயலாக், கவுண்டமணியின் “பத்த வெச்சுட்டாயே பரட்டை” டயலாக் போன்றவை படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்தது.
உன்னை சுற்றும் உலகம்:
G. சுப்ரமணிய ரெட்டியர் இயக்கத்தில் ஜெயலலிதா லீட் ரோலில் நடித்து 1977-ல் வெளியான படம் “உன்னை சுற்றும் உலகம்”. ஸ்ரீதேவி ஒரு சிறிய கேரக்டரில் மட்டும் நடித்திருப்பார். கமல், ஜெயலலிதா, பிரமீலா, விதுபாலா, உஷாராணி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர்- கணேஷ் இசையில், ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.
சிகப்பு ரோஜாக்கள்:

1978-ல் பாரதிராஜாவின் மாறுபட்ட கதைக்களத்தில் சைக்கோ திரில்லர் படமாக கமலை வைத்து வரவேற்பை பெற்ற படம் சிகப்பு ரோஜாக்கள். பெண்களை கொல்லும் சைக்கோ கேரக்டரில் கமல் சிறப்பாக நடித்திருப்பார். ஸ்ரீதேவி,கவுண்டமணி, வடிவுக்கரசி போன்றோரும் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவிற்கு மாதிரியான கதை காலகட்டத்தில் புதிதாக இருந்தது.
மனிதரில் இத்தனை நிறங்களா:
R C. சக்தி இயக்கத்தில் ஷியாம் இசையில், VDS தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் 1978-ல் வெளியான படம் மனிதரில் இதனை நிறங்களா. கமல், ஸ்ரீதேவி, முரளி மோகன், மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன், மனோரமா போன்றோர் நடித்திருந்தனர்.
சிகப்புக்கல் மூக்குத்தி:
1979-ஆம் ஆண்டு வலம்புரி சோமநாதன் இயக்கத்தில், விஸ்வநாதன் அவர்களின் இசையில் Kamal Hassan – Sridevi, விஜயகுமார், ரோஜா ரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். எம். எஸ். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் வரியில் “அம்பிகையே நாயகியே” பாடல் அடித்தது.
தாயில்லாமல் நான் இல்லை:
R. தியாகராஜன் இயக்கத்தில், சங்கர்-கணேஷ் இசையில், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1979-ல் வெளியான படம் “தாயில்லாமல் நான் இல்லை”. Kamal Hassan – Sridevi, ஜெய் கணேஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் ரஜினி, நாகேஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தனர். கண்ணதாசன், வாலி வரியில் TM. சௌந்தரராஜன், SP. பாலசுப்ரமணியம் குரலில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது.
கல்யாணராமன்:

ஒரு பணக்காரனின் அப்பாவி மகனான கல்யாணசுந்தரத்தின் சொத்தை அவனது எஸ்டேட் மேனேஜர் ஏமாற்றி கல்யாணசுந்தரத்தை(கமல்) கொலை செய்கின்றனர். கல்யாணத்தின் சகோதரர் உண்மையை அறிந்து பழிவாங்குவது மீதி கதை. 1979- ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல், ஸ்ரீதேவி, மனோரமா, VK. ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், மாஸ்டர் ஜப்பான் குப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
நீல மலர்கள்:
1979-ஆம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், MS. விஸ்வநாதன் இசையில் Kamal Hassan – Sridevi, KR. விஜயா, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தி படமான அனுராக் படத்தின் ரீமேக் ஆகும்.
குரு:
IV. சசி இயக்கத்தில், இளையராஜா இசையில், தெலுங்கு, தமிழில் அடுத்தடுத்த நாளில் வெளியான படம் குரு. Kamal Hassan – Sridevi, முத்துராமன், நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், மோகன் பாபு, YG. மஹேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் வெளியான படம் 365 நாட்கள் வரை ஓடி பாக்ஸ் ஆஃபீசில் கலக்கியது.
வருமையின் நிறம் சிவப்பு:

அன்றைய காலகட்டத்தில் டெல்லியில் வறுமை மற்றும் வேலையின்மையால் போராடும் தமிழர்களின் நிலையை சுற்றியே இப்படம் உருவானது. 1980- ஆம் ஆண்டு K.பாலச்சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கமல், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், R.திலீப், எஸ்.வி. சேகர் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிய அளவில் ஹிட் அடித்தது.
மீண்டும் கோகிலா:
1981-ஆம் ஆண்டு ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில், இளையராஜா இசையில் கமல், ஸ்ரீதேவி, தீபா, எம். கிருஷ்ணமூர்த்தி, தேங்காய் சீனிவாசன் மற்றும் ஓமக்குச்சி நரசிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
சங்கர்லால்:
1981-ல் டி.என். பாலு இயக்கம் மற்றும் தயாரிப்பில், இளையராஜா, கங்கை அமரன் இசையில், கமல், ஸ்ரீதேவி, சுருளி ராஜன், சீமா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
வாழ்வே மாயம்:
ராஜாவும் தேவியும் ஒருவரையொருவர் காதலித்து வருவார்கள். ஒரு கட்டத்தில் ராஜாவிற்கு புற்றுநோய் இருப்பதை அறிந்தா ராஜா தேவியை வெறுத்து ஒதுக்குவதை போல நடிப்பார். இறுதியில் விஷயம் தெரிந்த தேவி ராஜாவை காண வருவார். 1982- ஆம் ஆண்டு ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், கங்கை அமரன் இசையில், சுரேஷ் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, பிரதாப் போத்தன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இது 1981-ல் வெளியான பிரேமாபிஷேகம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.
மூன்றாம் பிறை:

பாலு மகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 1982-ல் வெளியான படம் மூன்றாம் பிறை. கமல், ஸ்ரீதேவி, YG. மகேந்திரன், சில்க் சுமிதா, காந்திமதி ஆகியோர் நடித்திருந்தனர். பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. “கண்ணே கலைமானே” பாடல் இன்றுவரை பலரது போனில் கலர் டோன் ஆக இருந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]