கமலின் சினிமா வாழ்க்கையில் அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு புது முயற்சியில் எடுத்த படம். நடிப்பு திறமையை பல விதங்களில் காட்டும் Kamal Haasan தனது வாழ்நாளை நடிப்பிற்காக அர்பணித்துள்ளார்.
Kamal Haasan நடிப்பில் 1989-ல் வெளிவந்து 200 மேல் தியேட்டரில் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படம் அபூர்வ சகோதரர்கள். ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு படம் முழுவதும் கதையை நகர்த்தியிருப்பார். கமல் ஹாசன், கிரேசி மோகன் திரைக்கதையில், பஞ்சு அருணாச்சலம் கதை அமைக்க, இளையராஜா இசையமைக்க, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கி, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனதின் மூலம் வெளியானது அபூர்வ சகோதரர்கள் படம். தந்தை, இரண்டு மகன் என மூன்று கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார்.

படத்தின் தொடக்கத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தந்தை கமல் குற்றவாளிகளான நாகேஷ், ஜெய்சங்கர், டெல்லி கணேஷ், நாசர் ஆகியோரை சிறையில் அடிப்பார். சட்டத்தின் மூலம் வெளிவந்து சிறையில் அடைத்த கமலை பழிவாங்க கமலின் மனைவி ஸ்ரீவித்யாவிற்கு விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சிப்பார்கள். போலீஸ் அதிகாரியான கமலை கொலை செய்து விடுவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து விடுவார் ஸ்ரீவித்யா. கர்ப்பமாக இருக்கும் ஸ்ரீவித்யாவிற்கு இரட்டை குழந்தை பிறக்கும். ஒரு குழந்தையை தான் வைத்துக்கொண்டு இன்னொரு குழந்தையை மனோரமாவிடம் தந்து விடுவார்.
மனோரமா எடுத்து வந்த குழந்தையை ராஜா என்ற கார் மெக்கானிக்காக வளர்த்துவார். ஸ்ரீவித்யாவிடம் உள்ள குழந்தையை சர்க்கஸில் இருக்கும் அப்புவாக வளர்ப்பார். ஸ்ரீவித்யா கர்ப்பமாக உள்ள போது விஷம் குடித்ததன் விளைவாக அப்பு குள்ளமாக இருப்பர். படத்தின் நாயகனே குள்ளமான கமல் தான்.
சர்க்கஸில் இருக்கும் கமல் முதலாளியான மௌலியின் மகள் ரூபிணியை காதலித்து வருவார். ஆனால் வேறு ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொள்வார் ரூபிணி. பின்னர் தனது அப்பா போலீஸ் ஆபிஸர் அவரை கொலை செய்து தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான 4 பேரை பற்றி குள்ளமான கமல் அறிந்து கொள்கிறார். அந்த 4 பேரை பழிவாங்குவது தான் படத்தின் சுவாரஸ்யமே.

இன்னொரு மகனான ராஜா, கௌதமி இருவரும் காதலித்து வருகின்றனர். கௌதமி அப்பாவாக இருக்கும் ஜெய்சங்கர் ராஜா கமலை பார்த்த பின்னர் இதற்க்கு முன்பு கொலை செய்த போலீஸ் ஆபிசர் கமலை போலவே இருப்பதாக நண்பர்கள் 4 பேரிடம் தெரிவிக்கிறார்.
நாசர், டெல்லி கணேஷ் என இருவரும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். இதனை விசாரிக்க போலீஸாக ஜனகராஜ் மற்றும் ஆர்.எஸ். சிவாஜி ஆகியோர் வருகிறார்கள். விசாரிக்கும் போது ஆர்.எஸ். சிவாஜி ஜனகராஜ்யை பார்த்து “தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க” என்று கூறும் வசனம் இன்றளவும் ரசிக்கும் படியாக உள்ளது.
சர்க்கஸில் வேலை செய்யும் குள்ளமான கமல் பற்றியும், தனது அப்பா கொலை செய்தது என்று எதுவும் அறியாமல் ராஜா இருந்து வருகிறார். ஆனால் கொலை செய்தது ராஜா தான் என போலீஸ் ராஜாவை கைது செய்தது.
பின்னர் ஸ்ரீவித்யாவான தனது அம்மாவை காணும் ராஜா இதற்க்கு முன்பு நடந்த கதையை தெரிந்து கொள்கிறார். இதை அறிந்த நாகேஷ் ,ஸ்ரீவித்யா, மனோரமா ஆகியோரை கடத்தி வைத்திருப்பார். ராஜா மற்றும் அப்பு இருவரும் நாகேஷிடமிருந்து இருவரையும் காப்பாற்றி விடுவார்கள். தன் செய்த கொலைக்காக அப்பு கமல் சிறை சென்று விடுவார். இவ்வாறாக படத்தின் கதை முடிவுக்கு வரும்.

சார்லி சாப்ளின் படத்தின் மூலம் குள்ளமான கமல் கதாபாத்திரம் பற்றிய யோசனை தனக்கு எழுந்ததாகவும், அதை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதை பாலச்சந்தரிடம் கூறிய போது ஒரு சில காட்சிக்கு மட்டும் பொருந்தும் படம் முழுவதும் எடுப்பது கடினம் என கூறினார். பின்னர் பஞ்சு அருணாசலமிடம் கூறும் போது கதையின் நாயகனே குள்ளமான கமல் தான். இதை வைத்து கதை எழுதிக்கொண்டு வா படம் எடுக்கலாம் என கூறினார். இவ்வாறாக தான் இந்த குள்ளமான கமல் கதாபாத்திரம் உருவானது என கொரோனா லாக்டவுன் சமயம் வீடியோவில் விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடும் போது கமல் கூறினார்.
தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகர் கமல் மற்றும் பாடலாசிரியாருக்காக வாலி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. பிலிம்ஃபேர் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்ய முடியாத அளவில் ஒரு கதாபாத்திரத்தை செய்துள்ளார் கமல். இவரை போன்ற கலைஞர்கள் தமிழ் சினிமாவின் வரம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]