“இயக்குனர் சிகரம்” என்று சினிமா உலகில் அன்றும் முதல் இன்றுவரை போற்றப்படும் K. பாலசந்தர் அவர்களால் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் வகையில் சில பிரபலங்கள் அறிமுகமாகியுள்ளனர்.
ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என தனது படங்களில் தன்னால் அறிமுகம் செய்து வைத்தவர்களின் நடிப்பு தனித்துவமாக தெரியும். அவர்கள் பிற்காலத்தில் திரையுலகில் முன்னணி நபராகவும் இருந்துள்ளனர்.
முதன் முதலில் திரைத்துறையில் வசனம் எழுதுபவராக எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமானார். பின்னர் 1965-ல் நாகேஷ் அவர்களை லீட் ரோலாக வைத்து நீர்க்குமிழி என்ற படத்தை இயக்கி வெற்றிகண்டார். அன்றைய காலகட்டத்தில் நடிப்பில் ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர் இவருடைய இயக்கத்தில் எந்த படத்திலும் நடித்ததில்லை என்பது ஆச்சரியம் தான். சிவாஜி அவர்கள் கூட “எதிரொலி” என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.
ஹீரோ, ஹீரோயின்களை நம்பாமல் கதையை மட்டுமே நம்பி திரை துறையில் 50 ஆண்டுகாலமாக தனக்கென்று தனி ரூட்டில் பயணம் சேந்து வந்தார் K. பாலசந்தர்.
மேஜர் சுந்தராஜன்:

1966-ல் மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தில் “சுந்தராஜன்” அவர்களை லீட் ரோலில் நடிக்க வைத்து நாகேஷ், முத்துராமன், AVM. ராஜன், ஜெயலலிதா ஆகியோரும் நடித்திருந்தனர். சுந்தராஜன் அவர்களின் அறிமுக படத்திலேயே தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்கு பின்னர் “மேஜர் சுந்தராஜன்” என்று சினிமா உலகம் இவரை கொண்டாடியது.
கமல் மற்றும் ரஜினி:

5 வயது முதல் திரையுலகில் நடித்து வரும் கமல் தனது 19-வது வயதில் K. பாலசந்தர் அவர்களின் வழிகாட்டுதலில் 1972-ல் பாலச்சந்தரால் இயக்கப்பட்ட “அரங்கேற்றம்” படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தினார். பின்னர் சினிமா உலகில் ஆசானாக பாலச்சந்தர் வழிகாட்டுதலில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். பாலச்சந்தர் என்ற ஆசிரியரால் போடப்பட்ட விதை இன்று “உலக நாயகன்” என்று சினிமா உலகம் கொண்டாடி வருகிறது.

1975-ல் 25 வயதுமிக்க ஒருவரை “அபூர்வ ராகங்கள்” படத்தில் அறிமுகம் செய்து வாய்த்த போது பாலச்சந்தர் அவருக்கே தெரியாமல் இருந்திருக்கும் இவர் தான் பின்னாளில் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வருவார் என்று. படத்தில் நெகட்டிவ் ரோலில் குறைவான நேரம் வந்தாலும் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் நடித்து வர ரஜினி என்ற வைரத்தை பட்டை தீட்டினார்.
கமல் மற்றும் ரஜினி என இருவரையும் வைத்து K. பாலசந்தர் 7 படங்கள் இயக்கியுள்ளார். தற்போது “உலக நாயகன், சூப்பர் ஸ்டார்” என சினிமா உலகம் கொண்டாட முக்கிய காரணமாக இருந்தது பாலசந்தர் என்ற ஆளுமை தான்.
சுஜாதா:

1974-ல் K. பாலசந்தர் இயக்கத்தில் கமல், ஜெயலட்சுமி, ஜெய் கணேஷ், சோமன், சுஜாதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “அவள் ஒரு தொடர் கதை”. கவிதா (சுஜாதா) என்ற கேரக்டரை மையமாக கொண்டு படம் முழுவதும் நகரும். சுஜாதாவின் நடிப்பு முதல் படம் போல் இல்லாமல் தனது நடிப்பை சிறப்பாக காட்டியிருப்பார். பாலச்சந்தரால் அறிமுகம் செய்து வைத்து பின்னாளில் ஹீரோயின் ஆக பல படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
விவேக்:

மக்களுக்கு தேவையான கருத்துக்களை தனது நகைச்சுவை பாணியில் கூறிவரும் விவேக் 1987-ல் K. பாலசந்தர் இயக்கத்தில் “மனதில் உறுதி வேண்டும்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து “புது புது அர்த்தங்கள்“, “ஒரு வீடு இரு வாசல்” போன்ற படங்களில் பாலசந்தர் இயக்கத்தில் நடித்தார். விவேக் அவர்களுக்கு ஒரு நகைச்சுவை கலைஞராக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அடைய பாலசந்தர் வழிகாட்டுதலாக இருந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ்:

ரசிக்கும் படியான வில்லனாக சினிமா உலகில் கொண்டாடப்படும் பிரகாஷ் ராஜ் K. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “டூயட்” என்ற படத்தில் ஸ்டார் ஹீரோ சிற்பி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி, சரத் பாபு ஆகியோரும் நடித்திருந்தனர். வில்லனுக்கு ஏற்ற பேச்சு, நடிப்பு என வில்லனாக ஆசை, சொக்க தங்கம், கில்லி, வசூல் ராஜா MBBS போன்ற படங்களில் நடித்து அசத்தினார். அதே போல குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து கலக்கியுள்ளார்.
நாசர்:

1985-ல் கல்யாண அகதிகள் என்ற படத்தில் நாசர் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகம் செய்து வைத்தார் K. பாலசந்தர். வில்லன், சப்போர்டிங் ரோல் என சினிமாவில் இரு வரை முக்கிய நடிகராக இருந்தது வருகிறார்.
K. பாலசந்தர் இயக்கிய படங்களில் சரத் பாபு, ஷோபா, சரிதா போன்றவர்களும் சினிமா உலகில் முக்கியமானவர்களாக இருந்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]