K. Bhagyaraj தனது படங்களில் காமெடிக்கு எந்த அளவில் முக்கியத்துவம் தருகிறாரோ அதே அளவில் எதார்த்தமான சில உண்மைகளை தெரியப்படுத்துவார். அந்த வகையில் அந்த 7 நாட்கள் படத்தில் தமிழ் பெண்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களது பாரம்பரியம் என்பதை விட்டுத்தர மாட்டார்கள் என கூறியிருப்பார்.
K. Bhagyaraj, அம்பிகா, ராஜேஷ், மாஸ்டர் ஹாஜா ஷெரிப், கல்லாப்பெட்டி சிங்காரம் ஆகியோர் நடிப்பில் பி.எஸ். ஜெயராமன், எம்.நாச்சியப்பன் தயாரிப்பில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் 1981-ல் வெளிவந்த படம் அந்த 7 நாட்கள். தீபாவளி சமயத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் நாடு அரசின் சிறந்த எடிட்டர் விருது ஆர். பாஸ்கரன் அவர்களுக்கு இந்த படத்திற்காக வழங்கப்பட்டது. தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது.

பாக்கியராஜ் மற்றும் ஹாஜா ஷெரிப் இருவரும் பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு வந்து பெரிய மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் வருவார்கள். அம்பிகா வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்று சாதிக்க துடிக்கும் எண்ணம், எதார்த்தம், வறுமை போன்றவை பாக்கியராஜ் மீது அம்பிகாவிற்கு காதல் ஏற்படுகிறது. நேர்மையாகவும், எதார்த்தமாகவும் இருக்கும் பாக்கியராஜ் இதை தெரியாமல் நடித்துக்கொண்டு இருப்பர்.
ஹாஜா ஷெரிப் காமெடி, கல்லாப்பெட்டி சிங்காரம் எதார்த்தமான பேச்சு என படத்தில் ஒவ்வொரு இடத்திலும் ரசிக்கும் படியாக இருந்தது. தனது சூழ்நிலை, பொருளாதார காரணம் போன்றவை காரணமாக அம்பிகா மீது காதல் கொண்டதை பாக்கியராஜ் மறைத்ததாக ஹாஜா ஷெரிஃபிடம் பேசும்போது அம்பிகா அதை கேட்டுக்கொண்டிருப்பார். அம்பிகாவின் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜேஷுக்கு திருமணம் செய்ய அம்பிகாவின் சம்மதமின்றி முடிவு எடுத்திருப்பார்கள்.
பின்னர் பாக்கியராஜ், அம்பிகா இருவரும் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவார்கள். இதை அறிந்த அம்பிகா குடும்பத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாக்கியராஜை தாக்கிவிட்டு அம்பிகாவை ராஜேஷுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
திருமணம் முடிந்த பின்னர் ராஜேஷ் தனது அம்மா இன்னும் 7 நாட்களில் இறந்து விடுவார்கள் அவர்களின் ஆசைக்காக இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாக அம்பிகாவிடம் கூறுவார். ராஜேஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இறந்து விடுவார். குழந்தையை பார்த்துக்கொள்ளவும், தனது அம்மாவின் ஆசைகாக்கவும் அம்பிகாவிடம் தனது வீட்டில் இருக்குமாறு ராஜேஷ் கூறுவார்.
பாக்கியராஜை காதலித்ததை அறிந்த ராஜேஷ் தான் தயாரிக்க போகும் படத்திற்கு மியூசிக் டைரக்டர் தேவை என பாக்கியராஜை சந்தித்து அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி அவரிடம் சகஜமாக பழகுவார். K. Bhagyaraj , அம்பிகா ஆகியோர் பழகி காதலித்த கதையை படமாக எடுக்கப்போவதாக கூறுவார். இதை எதுவும் கடைசி வரை அறியாத பாக்கியராஜ் மியூசிக் போடுவதில் மட்டும் கவனம் செலுத்திவருவார். இறுதியில் கிளைமேக்ஸ் கதையை கூற வேண்டும் என தனது வீட்டிற்கு பாக்கியராஜ்யை வரச்சொல்லுவார் ராஜேஷ்.
அந்த பெண் கணவரோடு திருந்தி வாழ வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என கிளைமேக்ஸ் கதையை பாக்கியராஜ் கூறுவார். ஆனால் ராஜேஷ் அதை மறுத்து அந்த பெண்ணை காதலருடன் சேர்த்து வைப்பது போல கிளைமேக்ஸ் கதையை கூறுவார்.
ராஜேஷ் கூறும் கிளைமேக்ஸ் கதைக்கு சம்மதம் தெரிவித்த பாக்கியராஜ்-க்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தனது மனைவியான அம்பிகாவை முன்னாள் காதலனான பாக்கியராஜ் உடன் சேர்த்து வைப்பது என ராஜேஷ் தனது முடிவை கூறுவார். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத பாக்கியராஜ் இதை மறுத்து விடுவார்.
அப்போது “சாரே என்னோட காதலி உனக்கு மனைவி ஆகலாம், ஆனால் உன்னோட மனைவி எப்போதும் எனக்கு காதலி ஆக முடியாது” என பாக்கியராஜ் பேசும் டயலாக் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதார்த்த உண்மையாக இருந்து வருகிறது.
இந்த படத்தில் பாக்கியராஜ் “பாலக்காட்டு மாதவன்” கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் கலாச்சாரம், பெண்மை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறைத்து என கதையை முடித்திருப்பார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]