வங்கி ஊழியராக இருந்த போது தனக்கான வேலை இது இல்லை என அறிந்து சினிமா பக்கம் திரும்பிய Lokesh Kanagaraj, தற்போது தன் மீது ஒட்டுமொத்த சினிமா உலகமும் திரும்பி பார்க்கும்அளவிற்கு வளர்த்துள்ளார்.
கோயம்பத்தூரில் கிணத்துக்கடவு பகுதியில் பிறந்து, PSG ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் ஃபேஷன் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார் Lokesh Kanagaraj. பின்னர் MBA படித்து சென்னையில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சில காலம் பணியாற்றிவந்த Lokesh Kanagaraj தனக்கான வேலை இது இல்லை என்ற எண்ணம் ஏற்பட, கல்லூரி படிக்கும்போது முதல் சினிமா பார்த்து கமலின் தீவிர ரசிகனாக இருந்து வந்த லோகேஷ் சினிமா பக்கம் திரும்பினார். ஒரு கட்டத்திற்கு மேல் நண்பர்களோடு ஷாட் பிலிம் எடுத்துவந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் நடுவராக கலந்து கொண்ட நிகழ்வில் தான் எடுத்த ஷாட் பிலிம் திரையிடப்பட்டு சிறந்த ஷாட் பிலிம்மாக லோகேஷ்-ன் பிலிம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது லோகேஷை அழைத்து கதை நன்றாக உள்ளது, தொடர்ந்து நல்ல கன்டென்ட் கொண்ட ஷாட் பிலிம்ஸ் எடுங்கள் என பாராட்டு பெற்றார்.
கார்த்திக் சுப்புராஜின் பாராட்டை பெற, தொடர்ந்து ஷாட் பிலிம் எடுத்து வந்த லோகேஷ் “களம்” என்ற ஷாட் பிலிம் கன்டென்ட் அதை தயாரித்தவர்க்கு பிடித்துப்போக நாம் இருவரும் இணைந்து ஒரு படம் எடுக்கலாம் என்று கூற “மாநகரம்” என்ற கதையை எழுதினார் லோகேஷ்.

SR. பிரபு தயாரிக்க, லோகேஷ் கதை எழுதி, இயக்க நல்ல வரவேற்பை பெற்றது மாநகரம் படம். பின்னர் வித்தியாசமான சிந்தனை கொண்டு பெரிய ஹீரோக்களை வைத்து கதையை யோசிக்காமல் மன்சூர் அலி கானை மனதில் வைத்து ஒரு கதையை எழுதினார்.

அப்படி யோசித்து கதை எழுதிய படம் தான் “கைதி“. கார்த்தி அவர்களிடம் கைதி படத்தின் கதையை கூற வாய்ப்பு கிடைக்க சில மாற்றங்கள் கொண்டு கதையை படமாக்கினார் லோகேஷ். பாடல், ரொமான்ஸ், காதல் காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றார்.

கைதி படத்தின் ஹிட்டை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜய்யை வைத்து லியோ என டாப் ஹீரோக்களை வைத்து இயக்கி மாஸ் ஹிட் தந்தார். இவை அனைத்தையும் ஒரு புள்ளியில் சேரும் படியாக “சினிமாடிக் யுனிவர்ஸ்” என்ற கான்செப்ட்டில் தான் எடுக்கும் படங்களின் கதையை அமைத்து வருகிறார்.
இப்படிப்பட்ட கான்செப்ட் ஹாலிவுட்டில் மட்டுமே இருந்து வந்தது, சூப்பர் ஹீரோ யூனிவெர்ஸ் என “மார்வெல்” போன்று தமிழில் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) என்று தான் எடுக்கும் படங்களில் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுமையை கொண்டு வந்தார்
இதற்கு முன்பு வரை தமிழ் சினிமா இப்படிப்பட்ட கான்செப்ட்டை பார்த்ததில்லை. இதனால் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் இவரை குறுகிய காலத்தில் மிக பெரிய புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

Lokesh Kanagaraj அடுத்தடுத்து யோசித்து வைத்திருக்கும் படங்களின் கதைகள் இவர் தமிழ் சினிமாவிற்கு பெரிய படைப்பை தர போகிறார் என்று தெரிகிறது.
2016 | அவியல் (Anthology film) |
2017 | மாநகரம் |
2019 | கைதி |
2021 | மாஸ்டர் |
2022 | விக்ரம் |
2023 | லியோ |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]