Home Movies மாதம்பட்டி ரங்கராஜ் – சமையல் மற்றும் சினிமாவில் வெற்றி பயணம்! 

மாதம்பட்டி ரங்கராஜ் – சமையல் மற்றும் சினிமாவில் வெற்றி பயணம்! 

சமையல் கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறிய மாதம்பட்டி ரங்கராஜ் கடந்து வந்த பாதை. 

by Vinodhini Kumar

மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக பலருக்கு தெரிந்தவர். ஆனால் அவரின் வித்தியாசமான வாழ்க்கை பயணம் பெரும்பாலான மக்களுக்கு புதிதாக இருக்கும். குடும்ப தொழிலான கேட்டரிங் அதாவது சமையலை தற்போது இந்தியா முழுதும் தெரியும்படி உயர்த்திய மாதம்பட்டி ரங்கராஜ், ஆரம்பத்தில் அவரின் அப்பா மாதம்பட்டி தங்கவேலு சொன்னதால் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 

மாதம்பட்டி ரங்கராஜ்

2002ல் அவர் தந்தையே அவரை சமையல் தொழிலுக்கு அழைக்க, முழுமையாக தன்னுடைய குடும்ப தொழிலுக்குள் நுழைந்தார். முதலில் சின்ன சின்ன கல்யாணங்கள் உனக்கு சமைக்க தொடங்கி படிப்படியாக வசதியான தெழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு சமைக்க ஆரம்பித்தார்கள். 2016ல் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி அதன் CEOவாக அமர்ந்தார் ரங்கராஜ். 

Madhampatty Rangaraj with family

தன் தந்தையின் உழைப்பை பார்த்தும், சிறு வயது முதலே சமையல் மீது கொண்ட ஆர்வத்தால் இந்த தொழிலை எப்படி வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து அதை இப்போது நிகழ்த்தியும் உள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள். ஆனால் நம்மில் பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் இருப்பது அவரின் சினிமா வருகை. 

Mehandi Circus poster

2019ல் ‘மெஹந்தி சர்கஸ்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் மாதம்பட்டி ரங்கராஜ். இயக்குனர் ராஜு முருகன் எழுதி சரவண ராஜேந்திரன் இயக்கிய படத்தில் அறிமுகமான ரங்கராஜ், முதல் படத்திலேயே நல்ல பாராட்டை பெற்றார்‌. ஒரு நல்ல காதல் கதையில் தேவையான உணர்ச்சிகளை வெளிபடுத்தி பொறுப்பாக நடித்திருப்பார். 

Penguin movie poster

2020ல் ‘பெண்குயின்’ என்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடித்திருப்பார் ரங்கராஜ். படத்தின் முக்கிய பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், கௌதம் என்ற பாத்திரத்தில் முக்கியமான திருப்பத்தை தரும் நேரங்களில் சிறப்பாக நடித்திருப்பார் மாதம்பட்டி ரங்கராஜ். நடிகர் யோகி பாபு, நடிகை ஆத்மீகா நடிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக நடித்து வெளியேராமல் இருக்கும் படம் ‘மிஸ் மேகி’. 2023ல் ஹன்டர் என்ற படமும், படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி அரவிக்காமல் உள்ளது படக்குழு.

Madhampatty rangaraj at Shankar's daughter wedding

இரண்டு படங்களில் நடித்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், நடிப்பதை சற்றே ஓரம் தள்ளி தன்னுடைய கேட்டரிங் தொழிலை பிரபல படுத்தி பல முன்னணி பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பிரம்மாண்டமாக சமையல் செய்து அசத்தி வருகிறார். மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜை திரையில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக வந்து சின்னத்திரையில் தோன்றி வருகிறார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.