இசை குடும்பத்தில் பிறந்தாலும் தனது சொந்த உழைப்பில் பல சிரமங்களை கடந்து “வெயிலை” ரசித்து “ஆயிரத்தில் ஒருவன்” என்ற “அசுரனாக” தன்னை நிரூபித்து காட்டியுள்ளார் GV Prakash kumar.
ஆஸ்கர் நாயகன் AR. ரஹ்மான் சகோதரியான ஏ.ஆர். ரெய்ஹானாவின் மகன் தான் GV Prakash kumar. 1987-ல் ஜூன் 13-ஆம் தேதி பிறந்த GV Prakash kumar. பின்னாளில் இசை உலகில் இளவரசனாக பவனி வருவார் என யாரும் அப்போது நினைத்திருக்கமாட்டார்கள். சென்னையில் பள்ளிப்படிப்பை படிக்கும் போது சில காரணங்களால் GV-ன் அப்பா, அம்மா இருவரும் பிரிந்து விட்டனர். தந்தையிடம் வளர்ந்த GV கிரிக்கெட் அல்லது கம்ப்யூட்டர் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றே நினைத்தார்.

சிறு வயதில் AR. ரஹ்மான் இசையில் 1993-ல் வெளியான ஜென்டில்மேன் படத்தில் “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” என்ற பாடலிலும், 1995-ல் வெளியான பம்பாய் படத்தில் “குச்சி குச்சி ராக்கம்மா” என்ற பாடலிலும் ஆரம்ப வரிகள் GV பாடியதே. மேலும் “சிம்பா” என்ற கார்ட்டூனிலும் சிம்பாவுக்கு குரல் கொடுத்திருந்தார். பள்ளி விழாவில் ஒரு சில காரணங்களால் GV-க்கு கீபோர்ட் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
குறுகிய காலத்தில் கீபோர்டு வசித்து பழகி பள்ளியில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதற்க்கு காரணம் GV Prakash kumar-ன் ரத்தத்திலேயே இசை ஊறியுள்ளது என்றே கூறலாம்.
பின்னர் எனக்கு இசையின் மீது ஆர்வம் என வீட்டில் கூற அதற்கு துணையாக அவரது அப்பா இருந்தார். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இசையின் பக்கம் தன்னை அர்ப்பணித்தார் GV. லண்டனில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் விளம்பரம் போன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயம் இசையமைப்பாளர் பரத்வாஜ் இடம் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
ஒரு முழு படத்திற்கும் இசையமைக்கும் அளவிற்கு வளர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டார். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என முன்னனி இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஒரு சில நிகழ்ச்சிகளில் இசையமைத்து இருந்தார்.

ஒரு வழியாக வசந்தபாலன் மூலம் ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படம் தான் “வெயில்”. படத்தின் பெயரில் இருக்கும் வெயில் போல இல்லாமல் ஐஸ் வைத்தது போல இனிமையாக இசையமைத்திருந்தார். “வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி” என 90’s கிட்ஸ் கோடைவிடுமுறை வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தியிருப்பார்.
பின்னர் ஒரு சில படங்களில் ஒன்னு இரண்டு பாடியிருந்தார். பொல்லாதவன் படத்தில் GV-ன் இசை தனித்துவம் பெற்றது. பாடல், தனுஷ்-ன் பைக்கிற்கு bgm என கலக்கியிருப்பார்.
2009-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. தனது மற்றொரு மாஸ்டர் பீஸ்ஸை தந்தார் GV. படத்தில் இசை தான் இரண்டாவது கதாநாயகன் என்பதை போல அவரது இசை இந்த படத்தில் இருந்தது.
மதராசபட்டினம், அங்காடி தெரு, ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, சகுனி, பரதேசி,உதயம் NH 4, தலைவா, ராஜா ராணி, நிமிர்ந்து நில், அசுரன், சூரரை போற்று, போன்ற படங்களின் மூலம் இசையில் தன்னை இந்திய சினிமாவிற்கு நிரூபித்தார்.
இசையில் ஒரு பக்கம் கலக்கிக்கொண்டு இருக்கும் போதே நடிப்பின் பக்கம் வந்தார் GV. முதல் படமான “டார்லிங்” படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார். பின்னர் தொடர்ந்து இசை, நடிப்பு என இரண்டிலும் செலுத்தி வந்தார்.
2015 | டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா |
2016 | பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்க குமாரு |
2017 | புரூஸ் லீ |
2018 | நாச்சியார், செம |
2019 | சர்வம் தாள மாயம், குப்பத்து ராஜா , வாட்ச் மேன், 100% காதல், சிவப்பு மஞ்சள் பச்சை, |
2021 | வணக்கம் டா மாப்ள, பேச்சுலர், ஜெயில், |
2022 | செல்ஃபி, ஐங்கரன் |
2023 | அடியே |
2024 | டியர், கள்வன்,ரெபெல் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]