கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக தென்னிந்தியா சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்களை கொண்டு “லேடி சூப்பர் ஸ்டார்” என இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை Nayanthara மட்டுமே.
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான Nayanthara முதல் படத்திலேயே சுட்டி தனம் கொண்ட பள்ளி மாணவியாக இயல்பான நடிப்பு பேசும்படியாக அமைந்தது. தெலுங்கு சினிமாவில் முதல் படமான “மனசினக்கரே” படத்தில் கவனம் பெற்ற நயன்தாராவின் நடிப்பு சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கிடைத்தது.

சந்திரமுகி படத்தில் தனது பங்கிற்கு சிறப்பான நடிப்பை தந்த Nayanthara, அடுத்து கஜினி படத்திலும் இரண்டாவது ஹீரோயின் ஆக நடித்திருந்தார். கஜினி சூர்யாவுடன் பயணிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டையில் வில்லன்களை கொல்லவேண்டும் என்று சூர்யாவிடம் ஆவேசமாக கூறும் காட்சி என அசத்தினார்.
முதல் மூன்று படங்களும் சரத் குமார், ரஜினி, சூர்யா என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஹிட் தந்து தன்னை ராசியான ஹீரோயின் என பதிவு செய்தார். அடுத்து வந்த சில படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹிட் தந்து மாஸ் காட்டினார்.
பில்லா:

2007-ல் அஜித்குமார், பிரபு, நமீதா, Nayanthara, ரஹ்மான் ஆகியோரை கொண்டு ரஜினிகாந்த்-ன் “பில்லா” படத்தை ரீமேக் செய்து மாஸ் ஹிட் செய்தார் விஷ்னுவர்தன். அஜித் குமார் சினிமா வாழ்வில் டாப் 5 படங்களை எடுத்துக்கொண்டால் பில்லா படம் கண்டிப்பாக அந்த லிஸ்டில் இருக்கும். அஜித் குமார் என்ற மாஸ் ஹீரோக்கு இணையாக அதே மாஸில் நயன்தாராவின் நடை, பேச்சு, ஸ்டைல் என படம் முழுவதும் நயன்தாரா அசத்தியிருப்பார். இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவை “லேடி சூப்பர் ஸ்டார்” என கொண்டாடி வந்தனர். சாஷா கேரக்டரில் வேறு யாரு நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு வரவேற்பு இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். பில்லா படத்தில் நயன்தாராவின் நடிப்பு அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
யாரடி நீ மோகினி:
பில்லா படத்தில் நயன்தாராவின் கேரக்டரை கொண்டாடி முடிப்பதற்குள் தனுஷ் உடன் “யாரடி நீ மோகினி” படத்தில் இருவேறு சூழ்நிலையில் Nayanthara நடித்து கலக்கியிருப்பார். சென்னையில் IT கம்பெனியில் வேலை செய்யும்போது மார்டன் ஆகவும், அவரது சொந்த ஊரில் கிராமத்து பெண் போல அமைதியாகவும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பார். “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடலில் இவர் செய்யும் சில விஷயங்கள் தனுஷை மட்டுமல்ல தமிழ் ரசிகர்கள் அனைவரையும் மெய்மறக்க வைத்தார்.
ராஜா ராணி:

அட்லீ இயக்கத்தில் 2013-ல் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இரண்டாவது காதலின் அருமையையும், முதல் காதல் பிரிவின் வலியையும் கண்ணீர் வரும் படியான கதைக்களத்தில் தந்திருப்பார் இயக்குனர். Nayanthara ஜெய் உடனான காதல் காட்சிகளிலும் சரி, ஆர்யா உடனான வெறுப்பை காட்டும் காட்சிகளிலும் சரி எதார்த்த நடிப்பில் கலக்கியிருப்பார். ஜெய்யின் அப்பாவித்தனத்தை கண்டு காதலிக்கும் நயன்தாரா, ஆர்யாவின் முதல் காதல் கதையை கேட்ட பின் ஆர்யாவிடம் அன்பை காட்டும் நயன்தாரா என வேறு வேறு சூழ்நிலையில் காதலை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
தனி ஒருவன்:

மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் தனித்துவ படைப்பான தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி, Nayanthara, அரவிந்த் சாமி, தம்பி ராமையா ஆகியோரை கொண்டு மெகா ஹிட் ஆனது. ஜெயம் ரவியை காதலித்து அவர் கூடவே பிரச்சனைகளை சமாளிக்கும் மஹிமா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். காதலை எழுதி வெளிப்படுத்தும் ஜெயம் ரவியை புரிந்து கொண்ட நயன்தாராவின் செயல் ரசிக்கும் படியாக இருக்கும்.
நானும் ரௌடி தான்:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, RJ. பாலாஜி, பார்த்திபன் ஆகியோரை கொண்டு காமெடி, லவ், ஆக்சன் என படம் முழுவதும் என்டேர்டைன்மெண்ட் செய்திருப்பார்கள். இப்படியான படம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்டு எல்லா வயதினரையும் ரசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக கலக்கிவரும் நயன்தாரா காது கேக்காமல் இந்த படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் படத்தின் கதை தான். கதை சிறப்பாக அமைந்ததால் கதைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளுவதில் தவறில்லை என நயன்தாரா நினைத்தார். நயன்தாரா, RJ. பாலாஜி காமெடி வேற லெவல் என்றே சொல்லலாம்.
கோலமாவு கோகிலா:

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை கொண்டு வித்தியாசமான கதையில் வெளியான படம் ” கோலமாவு கோகிலா“. நயன்தாராவின் இன்னசென்ட் நடிப்பு, பேச்சு, நடத்தை என படம் முழுவதும் கதைக்கு தேவையானதை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். யோகி பாபு காமெடி படத்திற்கு கூடுதல் பலம்.
மூக்குத்தி அம்மன்:

2020-ல் RJ. பாலாஜி இயக்கத்தில் இதுவரை நயன்தாரா பண்ணாத கேரக்டரான அம்மன் அவதாரமாக “மூக்குத்தி அம்மன்” என்ற கடவுள் ரோலில் நடித்து அசத்தினார். இந்த கேரக்ட்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ததாக கூறியிருந்தார்.

தொடர்ந்து ஹீரோயின் ஆக நடித்து வந்த நயன்தாரா டோரா படத்தில் முக்கிய லீட் ரோலில் நடித்து அசத்தினார். அதை தொடர்ந்து அறம் படத்தில் கலெக்டர் ஆக நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். கலெக்டர் ஆக ஒரு சில முடிவுகளை மக்களின் நலனுக்காக எடுக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை காட்டியிருப்பார். அதனை சமாளித்து மக்களின் நண்பனாக இருக்க வேண்டும் என அழகாக கூறியிருப்பார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா, சந்தானம் அவர்களின் காமெடி சரவெடியில் நயன்தாராவும் ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஆர்யாவை கலாய்ப்பது, காதலிப்பது என படம் முழுவதும் ரசிக்கும்படியான நடிப்பை தந்திருப்பார்.

விஸ்வாசம் படத்தில் முதல் பாதியில் சேவை செய்யும் டாக்டராகவும், இரண்டாவது பாதியில் பரபரப்பான தொழிலதிபராகவும், மகளை காப்பாற்றும் தாயாகவும் நடிப்பில் வேரியேஷன் காட்டியிருப்பார்.

ஆரம்பம் படத்தில் அஜித்துடன் 3-வது முறை ஜோடி சேர்ந்த நயன்தாரா பில்லா படத்தில் இருந்த மாஸ் குறையாமல் ஆக்ஷன் ஹீரோயின் ஆக கலக்கியிருப்பார். ஜவான் படத்திலும் ஷாருக்கானதுக்கு ஜோடியாக மாஸ் காட்டியிருப்பார்.
இமைக்க நொடிகள் படத்தில் மாஸ் ஆக அஞ்சலி விக்ரமாதித்தன் கேரக்டரிலும், அன்னபூரணி படத்தில் சமையல்கலை வல்லுனராக அன்னபூரணி கேரக்டரில் நடித்திருப்பார். கத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியின் மாறுபட்ட காதல் கதையில் சமந்தா, நயன்தாரா இருவரும் நடித்திருந்தனர். கண்மணி என்ற கேரக்டரில் ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இரண்டு தசாப்தங்களாக 80 படங்களுக்கு மேலாக நடித்துள்ள நயன்தாரா பிலிம்பேர், நந்தி, தமிழ்நாடு அரசு விருது, SIIMA போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 2018-ல் போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட 100 நபர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
நயன்தாரா அளவிற்கு தற்போதைய தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான மாஸ் காட்சிகள் செய்யும் ஹீரோயின் இல்லை என்றே கூறலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]