நல்ல நண்பர்கள் கூட இருந்தால் வாழ்வில் எந்த கஷ்டத்தையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு Nelson Dilipkumar ஒரு எடுத்துக்காட்டு.
1984-ல் ஜூன் 21-ஆம் தேதி பிறந்த நெல்சன் சென்னை நியூ காலேஜில் விஸ்காம் டிகிரி முடித்தார். எப்போதும் ஜாலியாக இருப்பவர் Nelson Dilipkumar. அவர் இருக்கும் இடத்தையும் ஜாலியாக வைத்திருப்பார்.
சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடப்பு விஜய் டிவியில் வேலை செய்யும் போது கிடைத்தது. விஜய் டிவியில் ஜோடி நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக இருக்கும் போது அதே நிகழ்ச்சியில் வேலை செய்து வந்தார் நெல்சன்.

பின்னர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது ஷோவிலும் வேலை செய்துள்ளார் நெல்சன். விஜய் டிவிக்கு மிகவும் பரிச்சயமான முகம் என்பதால் சினிமாவில் வாய்ப்பு தானாக அமையும் என்பதை போல நெல்சனுக்கும் அது நடந்தது.
சிம்புவை வைத்து “வேட்டைமன்னன்” என்ற படத்தை 2010- எடுக்க ஆரம்பித்தார் நெல்சன். அதில் ஜெய், ஹன்சிகா மொத்தவனி, தீக்ஷா சேத் நடித்தும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்தும் இருந்தார்.
தயாரிப்பாளர் தரப்பில் பிரச்சனை வர படம் முதல் பாதி மட்டும் எடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் பாதி எடுக்காமல் கைவிடப்பட்டது. முதல் படமே சரியாக அமையாமல் தோல்வியடைந்தார் நெல்சன்.
பின்னர் விடாமல் தனது முயற்சியை செய்து வந்த Nelson Dilipkumar 2017-ல் அனிருத் இசையில் மீண்டும் “வேட்டைமன்னன்” படத்தை கையில் எடுத்தார். ஆனால் மீண்டும் படத்தை முடியாமல் தோல்வியடைந்தது. அனிருத் நட்பு கிடைக்க “ஏன் நெல்சா நீ ஒரு புது கதை எழுத கூடாது என்று அனிருத் கூற” சரி எழுதித்தான் பார்க்கலாம் என எழுதப்பட்ட கதை தான் “கோலமாவு கோகிலா”.

வித்தியாசமான கதையை நயன்தாராவிடம் அனிருத் மூலம் கொண்டு சேர்க்கிறார் நெல்சன். கதை பிடித்துப்போக படப்பிடிப்பு வேலை தொடங்கினர் படக்குழு. படம் எதிர்பார்த்ததை விட ஹிட் ஆக கோலிவுட்டில் மற்றுமொரு வித்தியாசமான சிந்தனை கொண்ட இளம் இயக்குனர் கிடைத்து விட்டார் என கொண்டாடினர்.
முதல் படமே ஹிட் அடிக்க அடுத்த படத்தை கொரோனா முடிந்து வெளியிட கொரோனா சமயத்தில் மன நிம்மதி இல்லாமல் இருந்த அனைவருக்கும் அதற்க்கு மருந்து போடும் “டாக்டர்” ஆக வந்தது.
நண்பரான சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் போன்றோர் நடிப்பில் மற்றுமொரு வித்தியாசமான கதைக்களத்தை தமிழ் சினிமாவிற்கு தந்தார். இதுவும் வெற்றியடைய நெல்சன் ராசியான இயக்குனராக மாறினார்.
அடுத்த படத்தை தளபதி விஜய்யை கொண்டு எடுக்க வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் வந்தது. உச்சிக்கு கொண்டு சென்று கொண்டாடிய ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் நெல்சனை ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
சினிமா என்றால் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை ஆரம்ப சினிமா வாழ்க்கையிலேயே பார்த்த நெல்சனுக்கு இது ஒன்று புதிது இல்லை என்பது போல விமர்சனங்களை தவிர்த்தார்.
தன்னை நிரூபித்தே ஆகவேண்டும் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” படத்தை எடுத்தார். படம் மாஸ் ஹிட் ஆனது. உலகம் முழுவதும் 600 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இதுவரை 4 படம் மட்டுமே இயக்கியிருக்கும் நெல்சன் ரஜினிகாந்த், விஜய் என இரண்டு தலைமுறை சூப்பர் ஹீரோவை வைத்தும், இந்த தலைமுறை சூப்பர் ஹீரோவான சிவகார்த்திகேயனை வைத்தும் எடுத்துள்ளார்.
இயக்குநராக கலக்கி வந்த நெல்சன் திலீப்குமார் Filament Pictures என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதற்கான அப்டேட் வெளியாகியிருந்தது.
நல்ல நண்பர்கள் இருந்தால் அவமானம் என்ற முட்படிகளையும் ஏணி படிக்கட்டுகளாக ஏறி கடந்து செல்லலாம் என்பதை நெல்சன் வாழ்க்கை மூலம் இளைஞர் அறிந்துகொள்ளலாம்.
2018 | கோலமாவு கோகிலா |
2021 | டாக்டர் |
2022 | பீஸ்ட் |
2023 | ஜெயிலர் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]