90 களில் ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக பல வெற்றிப்படங்களை தந்து மக்கள் மனதில் “கரகாட்டம்” ஆடி “மக்கள் நாயகன்” என்று Ramarajan அவர்கள் கொண்டாடப்பட்டார்.
“மண்ணுக்கேத்த பொண்ணு” என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி “நம்ம ஊரு நல்ல ஊரு” படத்தில் முக்கிய ரோலில் நடித்து, Ramarajan என்ற நடிகரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அழகப்பன்.

அதன் பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. நடித்த பெரும்பாலான படங்கள் ரசிக்கும் படியாகவும், வசூல் சாதனை செய்தும் இருந்தது. அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் இயக்குனராகவும் கலக்கியிருந்தார்.
மண்ணுக்கேத்த பொண்ணு:
முதல் படமான “மண்ணுக்கேத்த பொண்ணு” படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தாலும் அந்த படத்தை Ramarajan தான் இயக்கியிருந்தார். 1985-ல் பாண்டியன், இளவரசி, கவுண்டமணி, செந்தில், வினு சக்ரவர்த்தி, கோவை சரளா ஆகியோர் நடித்து வெளியான படம். கவுண்டமணி, செந்தில் காமெடி ரசிக்க வைத்திருக்கும். கங்கை அமரன் இசையில் PSV பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. இயக்குனரான முதல் படமே ஓரளவு வெற்றி பெற்றது.
மருதாணி:
முதல் படத்தை தொடர்ந்து அதே ஆண்டு பாண்டியன், ஷோபனா, SS. சந்திரன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் ஆகியோரை கொண்டு எடுத்த படம் “மருதாணி”. கங்கை அமரன் இசையில் “விளக்கு வெச்ச நேரத்திலே” பாடல் ரசிக்கும் படியாக இருந்தது.
ஹலோ யார் பேசறது:

1985-ல் வெற்றிகரமான இயக்குனராக எடுத்த மூன்றாவது படம் ” ஹலோ யார் பேசுறது”. நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனராக மூன்று படங்களை எடுத்திருந்தார். சுரேஷ், ஜீவிதா நடிப்பில் இளையராஜா மற்றும் கங்கை அமரன் இசையில் வெளியானது. ஒரே வருடத்தில் குறுகிய கால இடைவெளியில் 3 படங்களை இயக்கி அசத்தினார்.
ஒன்று எங்கள் ஜாதியே:
கதாநாயகனாக நடிக்க தொடங்கி நடிப்பில் கவனம் செலுத்திய Ramarajan 1987-ல் “ஒன்று எங்கள் ஜாதியே” என்ற படத்தை நடித்து, இயக்கினார். இவருக்கு ஜோடியாக நிஷாந்தினி, SS. சந்திரன், வினு சக்ரவர்த்தி, ஆகியோரும் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையில், ஜானகி, சித்ரா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடிய பாடல்கள் ரசிக்க வைத்தது.
அம்மன் கோவில் வாசலிலே:

90 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக நடிப்பில் அசத்தி வந்த Ramarajan நீண்ட இடைவெளிக்கு பிறகு 1996-ல் இயக்கி, நடித்த படம் “அம்மன் கோவில் வாசலிலே”. சங்கீதா, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், சந்தான பாரதி, R. சுந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். சிற்பி இசையில், மஹாலட்சுமி இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியானது.
நம்ம ஊரு ராசா:
1996-ல் நளினி சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் Ramarajan, சங்கீதா, வடிவேலு, சார்லி, கோவை சரளா, பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் நம்ம ஊரு ராசா. சிற்பி இசையமைக்க மனோ, சுஜாதா, சித்ரா ஆகியோர் ரசிக்கும் படியான பாடல்களை பாடியிருந்தனர்.
கோபுர தீபம்:
1997-ல் பொங்கல் சமயம் Ramarajan, சுகன்யா, செந்தில், R. சுந்தராஜன், பாண்டு, மதன் பாப், கோவை சரளா ஆகியோர் நடித்து வெளியான படம் கோபுர தீபம். சௌந்தர்யன் இசையில், வைரமுத்து வரியில் பாடல்கள் ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார்.

மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள், விவசாயி மகன், சீறிவரும் காளை போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். இயக்குனராக ஓரளவு வெற்றியை தந்த Ramarajan நடிகராக நடித்த போது புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் இதுவரை நடித்ததில்லை.
இப்படி சினிமா உலகில் ஒரு சிலர் மட்டுமே இருந்து வந்த நிலையில் 2000 காலகட்டத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது சாமானியன் என்ற படத்தில் இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்து கொண்ட கதையில் நடித்திருந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]