சாமானியர்கள் கொண்டாடும் நாயகனாக மக்களின் மனதில் குடியிருந்த Ramarajan மீண்டும் சாமானியராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
80’S, 90’S காலகட்டத்த்தில் ரஜினி, கமல் ஹாசனுக்கு இணையாக கொண்டாடப்பட்ட Ramarajan அவர்கள் கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், அம்மன் கோவில் வாசலிலே, வில்லு பாட்டுக்காரன், பாட்டுக்கு நான் அடிமை என 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படம் ஒரு வருடத்திற்கும் மேல ஓடி வசூல் சாதனை செய்தது. தனது படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற விஷயங்களை தவிர்த்து வந்தார்.
2000-ஆம் ஆண்டுக்கு பிறகு படங்களில் வாய்ப்பு குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது “சாமானியன்” என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மே 23-ல் வெளியான சாமானியன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, ஆர்.ராகேஷ் இயக்கி, அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்து, ராம்கோபி எடிட்டராக பணியாற்றி ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், மீம் கோபி ஆகியோர் நடித்து வெளியானது.
வங்கிக்கடனால் ஏழை குடும்பங்கள் படும் அவஸ்தைகளை அழகாக காட்டியிருப்பார். மதுரையில் இருந்து தனது நண்பர் எம்.எஸ். பாஸ்கருடன் சென்னைக்கு வந்து மற்றுமொரு நண்பரான ராதா ரவியுடன் வங்கியில் வெடிகுண்டு வைத்து வங்கியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார். பின்னர் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு Ramarajan அவர்கள் சமூகத்திற்கு தேவையான கருத்தைக்கொண்டு நடித்தது பலரும் பாராட்டி வருகின்றனர்.