படபடவென்று பேசும் பேச்சு, சமூக பிரச்சனைகளுக்கு முன் நின்று குரல் கொடுப்பது என தமிழக மக்கள் மத்தியில் தனது செயல்கள் மூலம் நீங்க இடம் பிடித்தவர் RJ Balaji.
ஒரு மனிதனுக்கு சிறு வயதில் எத்தனை கஷ்டங்கள் தான் வரும் என எண்ண முடியாத அளவிற்கு பல கஷ்டங்களை சந்தித்துள்ளார் RJ. பாலாஜி. சுமாராக படிப்பது, ஏழை குடும்பத்தில் 4,5 பேர் கூட பிறந்தவர்கள், சிறு வயதிலேயே பல அவமானம், 11 பள்ளிகள் மாறியது, நிலையான வேலை இல்லாமல் இருப்பது, தந்தை குடும்பத்தை விட்டு சென்ற பின் குடும்பத்தை கவனிப்பது என பிரச்னை மேல் பிரச்சனையில் தனது இளமை பருவத்தை கடந்து வந்துள்ளார்.
“பாலாஜி பட்டுராஜ்” என்ற இயற்பெயர் கொண்ட பாலாஜி பள்ளியில் ஓரளவு மட்டுமே படிக்கும் சுமாரான மாணவன் தான். ஸ்கூல் படிக்கும் போது 1,2 பள்ளியில் படிக்கவில்லை, சுமார் 11 பள்ளியில் படித்தும் 12-வது முடிக்காமல் இருந்துள்ளார். கிடைத்த வேலையை செய்து வந்த பாலாஜி சுமார் 27 வீடுகள் மாறியுள்ளார். இவை அனைத்திற்கும் காரணம் அவமானம் என்னும் ஒரே செயல் தான்.
அவமானம் என்ற அடியை வாங்கிய பின் கிடைத்த வேலையை பிடிக்காமல் செய்யும் போது மீண்டும் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு 12-வது முடிக்கிறார். பின்னர் BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து மேற்படிப்பிற்கு கோவையில் உள்ள அமிர்தா ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷனில் Journalism-ல் முதுகலை படிப்பில் சேர்கிறார்.
அவரது உறவினர் NDTV -ல் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை போல ஆக வேண்டும் என்று Journalism எடுத்தார். ஆனால் அது தனக்கு செட் ஆகாது என தெரிந்த பின்னர் அதனை விட்டு விட்டார். ஒரு சமயம் ரேடியோ ஜாக்கி வேலைக்கு ஆள் எடுப்பதாக இவருக்கு தகவல் வருகிறது.

கல்லூரி படிக்கும் போது மேடைப்பேச்சுகளில் அதிகம் ஈடுபட்டிருந்த RJ பாலாஜிக்கு இந்த வேலை மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து வரும் பாலாஜிக்கு வேலை கோயம்பத்தூரில் கிடைத்தது. கிடைத்த வேலையை விட்டு விடாமல் கோயம்பத்தூர் சென்று 9,500 சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.
ஒரு வழியாக நல்ல வேலை கிடைத்து விட்டது இனி குடும்ப கஷ்டம் குறைந்து விடும் என்று பெருமூச்சு விடும் முன்பு பாலாஜிக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அது இவரது காதலி மூலம் வந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாலாஜி அவரது காதலி வீட்டில் விஷயம் தெரிந்து பிரச்னை ஆக, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டனர்.
அப்போதே மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது, பாலாஜியின் அப்பா யாருக்கும் சொல்லாமல் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. 4,5 பேர் கூட பிறந்தவர்கள், மனைவி என பாலாஜிக்கு மேலும் குடும்ப சுமை ஏற்பட்டது. இவர்களை தனது வருமானத்தில் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் பாலாஜி.

கோயம்பத்தூரில் “ஹலோ கோயம்பத்தூர்” என்று நிகழ்ச்சியில் 3 மணி நேர program செய்து வருகிறார். பின்னர் 4 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்து 92.7 Big FM-ல் cross talk என்ற ஷோவை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது விருப்பப்படி வேலை செய்யுமாறு Big FM நிறுவனத்தில் பாலாஜிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
cross talk ஷோவில் “ரேடியோ மிர்ச்சி சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் குமார்” உடன் காமெடி உரையாடல் வரவேற்பை பெற்றது. இதனை soundcloud என்ற youtube பக்கத்தில் பதிவிட்டார் பாலாஜி. சில நாட்களில் மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டு வைரல் ஆனது. இந்த நிகழ்வுக்கு பிறகு “கிராஸ் டாக் பாலாஜி” என்றும் கூறப்பட்டுவந்தார்.
அந்த பேச்சு திறன் மூலம் தற்போது வரை அனைவரையும் ரசிக்க வைத்துக்கொண்டே உள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக IPL மற்றும் இன்டர்நேஷனல் போட்டிகளில் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இருந்து வருகிறார்.
மேலும் சினிமா பக்கம் வந்த பாலாஜி காமெடி ரோல்களில் நடித்து அசத்தி வந்தார். LKG என்ற அரசியல் படமும், முக்குத்தி அம்மன் என்ற ஆன்மிக படமும் எடுத்து கலக்கியிருந்தார். காமெடியன், ஹீரோ என மாறி மாறி படங்களில் நடித்தும் வந்தார்.
கஷ்டப்படும் பல இளைஞர்களுக்கு RJ. பாலாஜியின் கதை பெரிய இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருந்து வருகிறது. எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விட கூடாது என பாலாஜியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]