அரை நூற்றாண்டாக தனது இசையால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக இருந்து வந்துள்ளார் S. P. Balasubrahmanyam.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். ,சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் என பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு S. P. Balasubrahmanyam அவர்களின் குரலால் பாடப்பட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அத்தகைய பாடல்கள் இன்றளவும் ரசிக்கும் படியாக மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

அந்த வகையில் எஸ்.பி.பி அவர்களின் குரலால் பெரிதும் ரசிக்கப்பட்ட 1970-1980 களில் வந்த பாடல்கள்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்:
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்‘ படத்தில் “எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்” பாடல் S. P. Balasubrahmanyam அவர்களின் இசை படைப்பில் இன்றும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது. தற்போது 2007-ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்திலும் இந்த பாடலை ரிமேக் செய்து எஸ்.பி.பி. அவரின் குரலிலே பாடப்பட்டது.
இது ஒரு பொன் மாலை பொழுது:
பாரதிராஜா இயக்கத்தில் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன் மாலை பொழுது” என்ற பாடலை வைரமுத்து எழுதி S. P. Balasubrahmanyam அவர்களால் பாடப்பட்டது.
இளமை எனும் பூங்காற்றே:
ஐ.வி. சசி இயக்கத்தில் ‘பகலில் ஒரு இரவு’ படத்தில் கண்ணதாசன் வரிகளில் “இளமை எனும் பூங்காற்றே” என்ற பாடல் இடம் பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் குமார், ஸ்ரீ தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு:
ஸ்ரீதர் இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீ பிரியா ஆகியோர் நடிப்பில் ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ என்ற படத்தில் “என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையமைக்க, பாடல் வரிகளை வாலி எழுத, S. P. Balasubrahmanyam இந்த பாடலை பாடி அசத்தியுள்ளார்.
சொர்க்கம் மதுவிலே:
என். டி.பாலு இயக்கத்தில் கமல், ஸ்ரீ பிரியா, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘சட்டம் என் கையில்’. இதில் “சொர்க்கம் மதுவிலே” என்ற பாடலை இளையராஜா, கண்ணதாசன், S. P. Balasubrahmanyam கூட்டணியில் பாடப்பட்டது.
தகிட ததிமி தகிட ததிமி:

விஸ்வநாத் இயக்கத்தில் கமல், ஜெயா பிரதா, சரத் பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘சலங்கை ஒலி’ படத்தில் “தகிட ததிமி தகிட ததிமி” என்ற பாடல் எஸ்.பி.பி. அவர்களால் பாடப்பட்டது. இந்த பாடலில் கமல் கிணற்றின் மீது நின்று கொண்டு ஆடுவது போன்று படத்தில் இடம்பெற்றிருக்கும்.
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்:
முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீ பிரியா, லட்சுமி நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தில் “நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்” என்ற பாடலை எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், எஸ்.பி.பி கூட்டணியில் பாடப்பட்டது.
கடவுள் அமைத்து வைத்த மேடை:

கே.பாலசந்தர் இயக்கத்தில் விஜயகுமார், சுஜாதா, ஜெய்கணேஷ், கமல், ஸ்ரீ பிரியா ஆகியோர் நடிப்பில் ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளிவந்தது. கமல் மேடையில் படுவது போன்று இருக்கும் “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் எஸ்.பி.பி , கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் கூட்டணியில் ரசிக்கும் படியாக இருக்கும்.
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு:

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, தேங்காய் ஸ்ரீனிவாசன், நாகேஷ், சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் ‘தில்லு முல்லு’ படத்தில் “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” என்ற பாடலை எஸ்.பி.பி. பாடியிருந்தார்.
ராமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும்:
மஹேந்திரன் இயக்கத்தில் ரஜினி, சரத் பாபு, ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடிப்பில் ‘முள்ளும் மலரும்‘ படத்தில் “ராமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும்” என்ற பாடல் கங்கை அமரன் வரியில் எஸ்.பி.பி அவர்களால் பாடப்பட்டது.
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபம்:
கே. விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, ஜெய் கணேஷ், மோகன் பாபு, மனோரமா ஆகியோர் நடித்த படம் ‘அண்ணன் ஒரு கோவில்’. இதில் “அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபம்” என்ற பாடல் எஸ்.பி.பி அவர்களால் பாடப்பட்டது. அண்ணன், தங்கை பாசம் குறித்து இந்த பாடலில் அழகாக கூறியிருப்பார்.
பாடும் போது நான் தென்றல் காற்று:
நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். , மஞ்சுளா நடிப்பில் வெளிவந்த படம் ‘நேற்று இன்று நாளை’. இதில் எம்.எஸ். விசுவநாதன் இசையில் “பாடும் போது நான் தென்றல் காற்று” பாடலை எஸ்.பி.பி பாடியிருந்தார்.
அவள் ஒரு நவரச நாடகம்:

எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் “அவள் ஒரு நவரச நாடகம்” என்ற பாடல் கண்ணதாசன் வரியில் எஸ்.பி.பி அவர்களால் பாடப்பட்டது.
மடை திறந்து தாவும்:
பாரதிராஜா இயக்கத்தில் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “மடை திறந்து தாவும்” என்ற பாடலை வாலி வரியில் எஸ்.பி.பி. அவர்களால் பாடப்பட்டது.
நான் வாழவைப்பேன்:
யோகனந்த் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, ரஜினிகாந்த், ஜெய் கணேஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘நான் வாழவைப்பேன்’. வாலி வரிகளில் எஸ்.பி.பி அவர்களால் “என்னோடு பாடுங்கள்” என்ற பாடல் பாடப்பட்டது.
சம்சாரம் என்பது வீணை:
எஸ்.பி. முத்துராமன் இயக்கி நடித்த படமான ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்ற படத்தில் “சம்சாரம் என்பது வீணை” என்ற பாடலை கண்ணதாசன் வரியில் எஸ்.பி.பி அவர்களால் பாடப்பட்டது.
திருமகள் தேடி வந்தாள்:
1971-ல் புட்டன்னா இயக்கத்தில் ஏ.வி.எம். ராஜன், வாணிஸ்ரீ, முத்துராமன் நடிப்பில் வெளிவந்த படம் ‘இருளும் ஒளியும்’. மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரியில் எஸ்.பி.பி அவர்களால் “திருமகள் தேடி வந்தாள்” பாடல் பாடப்பட்டிருந்தது.
உன்னை நான் பார்த்தது:

சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா, ஸ்ரீ பிரியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘பட்டிக்காட்டு ராஜா’. இதில் சிவகுமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். “உன்னை நான் பார்த்தது” என்ற பாடல் எஸ்.பி.பி அவர்களால் பாடி பெரும் வரவேற்பை பெற்றது.
உச்சி வகுந்தெடுத்து:
சிவகுமாரின் 100வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி‘ படத்தில் இடம்பெற்ற “உச்சி வகுந்தெடுத்து” பாடல் எஸ்.பி.பி அவர்களால் பாடி ரசிக்கப்பட்டது.
பூ போல உன் புன்னகையில்:
சிவாஜி கணேசன், விஜயகுமார், ரவிசந்திரன், ஸ்ரீ தேவி நடிப்பில் வெளிவந்த படம் ‘கவரி மான்’. இதில் “பூ போல உன் புன்னகையில்” பாடல் S. P. Balasubrahmanyam அவர்களால் பாடப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]