லொள்ளு சபா மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி நக்கல், கிண்டல் பேச்சு மூலம் வெள்ளி திரையில் காமெடி ஸ்டார் ஆக வலம்வந்து, தற்போது ஹீரோவாக ஒரு சில படங்களில் மாஸ் காட்டி வருகிறார் Santhanam .
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோ மூலம் தமிழ் படங்களின் ஸ்பூப் வீடியோவில் காமெடி செய்து வந்தார் Santhanam. முதலில் சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் சினிமா பக்கம் வந்தார். முதல் படத்திலேயே தனது காமெடியால் தமிழ் சினிமா தன்னை பற்றி பேசும்படியாக கவனிக்க வைத்தார்.

அடுத்து சச்சின், பொல்லாதவன் போன்ற படங்களில் இவரது காமெடி ரசிக்கும் படியாக அமைந்தது. காமெடியில் கலக்கி வந்த போது அறை எண் 305-ல் கடவுள் என்ற காமெடி கலந்த கற்பனை கதைக்களத்தில் கஞ்சா கருப்பு, Santhanam இருவரும் லீட் ரோலில் நடித்திருந்தனர். கடவுளை கூட வைத்துக்கொண்டு நினைத்ததை அனுபவிக்கும் கேரக்டரில் இருவரும் காமெடி கலந்து, சில கருத்துக்களை கூறியிருப்பார்கள்.
அதனை தொடர்ந்து காமெடியில் கலக்கிவந்த Santhanam காமெடி ஸ்டார் ஆக தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் லீட் ரோலில் பவர் ஸ்டார் உடன் இவரது காமெடி அல்டிமேட் ஆக இருந்தது.
காமெடியில் லீட் ரோலில் நடித்து வந்த Santhanam ஆக்சன் பக்கம் திருப்பி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, இனிமேல் இப்படித்தான் போன்ற படங்களில் நடித்த போது சுமாரான வரவேற்பை பெற்றது.
கவுண்டமணி பாணியில் ஹீரோ, வில்லன், ஹீரோயின் என யாராக இருந்தாலும் கிண்டல் செய்து அவர்களை கலாய்த்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தமிழில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு காமெடி ரோலில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுடன் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை என்று கூறலாம். அதே போல பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் வெற்றிக்கு Santhanam காமெடி தான் முக்கிய காரணம் என்றே கூறலாம்.

உதயநிதி ஸ்டாலின் அறிமுக படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனே Santhanam செய்யும் காமெடி தான். சிறந்த காமெடிக்காக விஜய் டிவி விருது, SIIMA, ஆனந்த விகடன் விருது போன்றவை பெற்றார்.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு முன்பு win டிவியில் டீ கடை பென்ச், விஜய் டிவியில் சகல vs ரகளை போன்ற ஷோக்களில் நடித்திருந்தார்.
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள்.
படங்கள் | வெளியான தேதி | கேரக்டர்கள் | நடிகர்கள் | தயாரிப்பாளர், இயக்குனர்கள். |
---|---|---|---|---|
அறை எண் 305-ல் கடவுள் | 18 ஏப்ரல் 2008 | ராசு கிருஷ்ணமூர்த்தி | பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, Santhanam , மதுமிதா, மதன் பாப், இளவரசு. | சங்கர், சிம்பு தேவன். |
கண்ணா லட்டு தின்ன ஆசையா | 13 ஜனவரி 2013 | கால்கட்டு கலியபெருமாள் (KK) | சந்தானம், பவர் ஸ்டார், சேது, VTV கணேஷ், கோவை சரளா, விஷாகா | சந்தானம், KS. மணிகண்டன், |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | 9 மே 2014 | சக்தி | Santhanam , ஆஷ்னா சவேரி, ரவி பிரகாஷ், VTV கணேஷ் | சந்தானம், ஸ்ரீநாத், |
இனிமேல் இப்படித்தான் | 12 ஜூன் 2015 | சீனு | சந்தானம், ஆஷ்னா சவேரிஅகிலா கிஷோர், தம்பி ராமைய்யா, VTV கணேஷ், நரேன். | சந்தானம், முருகானந்த். |
தில்லுக்கு துட்டு | 7 ஜூலை 2016 | குமார் | Santhanam , அஞ்சல் சிங்க், கருணாஸ், ஆனந்தராஜ். | சந்தானம், ராம்பாலா |
சக்க போடு போடு ராஜா | 22 டிசம்பர் 2017 | சாண்டா | சந்தானம், வைபவி, விவேக், சம்பத், சஞ்சனா சிங்க். | VTV. கணேஷ்VL. சேதுராமன் |
தில்லுக்கு துட்டு 2 | 7 பிப்ரவரி 2019 | விஜி | Santhanam , ஸ்ரீதா சிவதாஸ், ராஜேந்திரன் | சந்தானம், ராம்பாலா. |
A 1 | 26 ஜூலை 2019 | சரவணன் | சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, மனோகரன், ராஜேந்திரன் | S. ராஜ் நாராயணன், ஜான்சன் K. |
டகால்டி | 31 ஜனவரி 2020 | குரு | Santhanam , ரித்திகா சென், ராதா ரவி, யோகி பாபு | சந்தானம், விஜய் ஆனந்த் |
பிஸ்கோத் | 14 நவம்பர் 2020 | ராஜா | சந்தானம், தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆனந்த் ராஜ், ராஜேந்திரன் | R. கண்ணன் |
பாரிஸ் ஜெயராஜ் | 12 பிப்ரவரி 2021 | ஜெயராஜ் | Santhanam , அனைகா சோதி, ராஜேந்திரன், மனோகரன். | ஜான்ஸன் K,K.குமார் |
டிக்கிலோனா | 10 செப்டம்பர் 2021 | மணி | சந்தானம், அனகா, யோகி பாபு, ராஜேந்திரன் ஆனந்தராஜ், ஹர்பஜன் சிங்க்(கேமியோ). | கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ், கார்த்திக் யோகி |
சபாபதி | 19 நவம்பர் 2021 | சபாபதி | Santhanam , ப்ரீதி வர்மா, | R. ஸ்ரீனிவாச ராவ், ரமேஷ் குமார் R, |
குலுகுழு | 29 ஜூலை 2022 | மரியோ | சந்தானம், அதுல்யா சந்திரா, பிரதீப் ராவத், ஜார்ஜ் மரியான் | ரத்னா குமார், ராஜ் நாராயணன் |
ஏஜென்ட் கண்ணாயிரம் | 25 நவம்பர் 2022 | Detective கண்ணாயிரம் | Santhanam , ரியா சுமன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ். | மனோஜ் பீதா |
DD returns | 28 ஜூலை 2023 | சதிஷ் | Santhanam , சுரபி, பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி. | ரமேஷ் குமார், பிரேம் ஆனந்த் |
கிக் | 1 செப்டம்பர் 2023 | சந்தோஷ் | Santhanam , தான்யா ஹோப், தம்பி ராமய்யா, செந்தில், கோவை சரளா | பிரசாந்த் ராஜ், நவீன் ராஜ் |
80s பில்டப் | 24 நவம்பர் 2023 | கதிர் | Santhanam , ராதிகா ப்ரீதி, ஆனந்தராஜ் | ஞானவேல் ராஜா, கல்யாண் |
வடக்குப்பட்டி ராமசாமி | 2 பிப்ரவரி 2024 | ராமசாமி | Santhanam , மெகா ஆகாஷ். | TG. விஸ்வ பிரசாத், கார்த்திக் யோகி. |
இங்க நான் தான் கிங்கு | 17 மே 2024 | வெற்றிவேல் | Santhanam , பிரியலயா | அன்புசெழியன், ஆனந்த் நாராயணன் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]