பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன Shankar மக்களுக்கு நல்ல அரசியலை கொண்டு போகும் நோக்கில் தனது படங்களில் எதாவது ஒரு வகையில் அரசியலை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருப்பார்.
ஜென்டில்மேன்:

1993-ல் இயக்குனராக அறிமுகமான Shankar-ன் முதல் படம் “ஜென்டில்மேன்”– ல் மருத்துவ துறையில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து கதையை கொண்டு செல்வார். நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிய பல மாணவர்களின் ஏக்கத்தை கண்முன்னே நிறுத்தியிருப்பார். அரசியலாலும், அரசியல்வாதிகளாலும் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களை பலி வாங்க அரசியல்வாதிகளிடம் பணத்தை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கல்லூரி, மருத்துவமனை கட்டி உதவி செய்பவரை கதாநாயகனாக காட்டியிருப்பார்.
இந்தியன்:

1996-ல் வெளியான இந்தியன் படத்தில் முழுக்க முழுக்க அரசியலை மட்டுமே கதைக்கருவாக கொண்டு எடுத்திருப்பார் Shankar. நேர்மையான அப்பா, அரசு வேலை வாங்க எதையும் செய்யும் மகன் என இருவேறு கேரக்டரை மையப்படுத்திய எடுத்துள்ளார். நாட்டிற்க்காக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் தனது மகளுக்கு ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற லஞ்சம் கேட்கும் போது தர மறுத்ததால் மகளை இழக்கும் அப்பா. அதே சமயம் அரசு வேலை வாங்க லஞ்சம் கொடுத்து வேளையில் அமரும் மகன்.
இதனை பொறுத்துக்கொள்ளாமல் “இந்தியன் தாத்தாவாக” அவதரிக்கும் அப்பா. ஒருபுறம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை களையெடுக்கும் அப்பா. மறுபுறம் மகனின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியாக சொந்த மகனையே கொலை செய்யும் அப்பா. லஞ்சம், ஊழல் நாட்டில் இருக்க கூடாது என்றும், அப்படி வாங்கினால் தைரியமாக தட்டி கேளுங்கள் என்றும் மக்களுக்கு இந்தியன் படத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வன்:

இதுவரை அரசியலில் நடக்கும் தவறுகளை சுட்டிக்கண்டி படம் எடுத்து வந்த Shankar முதன் முதலில் அரசியலில் மாற்றம் என்பது மக்களுக்காக வேலை செய்யும் நேர்மையான அரசியல்வாதியை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருப்பார்.
முதல்வரை கேள்வி கேட்கும் அதிகாரம், ஒரு நாள் முதல்வர், நேர்மையான படித்த இளைஞர் முதல்வராவது, மக்கள் விரும்பும் ஆட்சியை தருவது என முழுக்க முழுக்க அரசியலை மட்டுமே வைத்து படத்தை எடுத்திருந்தார். இப்படியான படங்கள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிவாஜி தி பாஸ்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், Shankar கூட்டணியில் மெகா ஹிட் அடித்த படம் சிவாஜி. இந்தியாவில் வளர்ந்து, படித்து வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் தன் நாட்டிற்கு நல்லது செய்யும் நோக்கில் மக்களுக்கு உதவும் வகையில் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை தொடங்க நினைக்கிறார். அதற்க்கு அரசியல்வாதிகள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் அரசியல் செல்வாக்கை கொண்டு தடுக்க நினைக்கின்றனர்.
சாதாரண நபர் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் தடையை தாண்டி தான் நினைத்த இலக்கை அடைவது தான் கதை. பெரிய தொழிலதிபர்கள் தான் எந்த அரசு வேண்டும் என தீர்மானிக்கின்றனர் என வெளிப்படையாக தனது படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினார்.
இவ்வாறாக மக்களுக்கு தனது படத்தின் மூலம் அரசியல் புரிதலை அன்று முதல் இன்றுவரை செய்து வருகிறார் சங்கர். தற்போது இந்தியன் 2 படத்தில் கூட அரசியல் என்பது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது என ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com