ஒருவருடைய ஈகோ தமக்கு பிடித்தவர்களையும் பிரிந்து செல்ல வைக்கும் என்பதை Kushi படத்தின் மூலம் அழகாக காட்டியிருப்பார் SJ. SURYA .
2000-ஆம் ஆண்டில் வெளிவந்து தமிழ் சினிமாவில் காதல் கதையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் ரசிக்க வைத்த படம் குஷி. விஜய் மற்றும் ஜோதிகாவின் திரை வாழ்வில் மிக முக்கிய படமாக அமைத்தது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து S.J. சூர்யா இயக்கிய இரண்டாவது படம் குஷி. தனது இரண்டாவது படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். வாலி, குஷி என முதல் இரண்டு படங்களும் ப்ளாக் பாஸ்டர் ஹிட் தந்து அசத்தினார் S.J. சூர்யா.
S.J. SURYA இயக்கத்தில், AM ரத்னம் தயாரிப்பில், தேவா இசையில் வெளியானது Kushi. இருவேறு நகரங்களில் ஒரே நாளில் பிறந்த விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோர் எந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்து ஒன்று சேர்க்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார். குழந்தையாக இருவரும் சென்னையில் ஒரு முறை சந்திக்கும் தருணம், மாணவ பருவத்தில் பெங்களுருவில் ஒருமுறை சந்திக்கும் தருணத்தை மிக அழகாக காட்டியிருப்பார். குற்றாலத்தில் ஜோதிகா தரும் இரத்தம் கொல்கத்தாவில் விபத்தில் சிக்கிய விஜய்க்கு வந்து செலுத்தப்படுகிறது. இந்த காட்சிகளில் இருவரும் ஒருவருக்கொருவர் யார் என்றே தெரியாமல் நடந்து இருக்கும். படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடத்திற்கு பிறகுதான் ஹீரோ, ஹீரோயின் இருவரும் பார்த்துக்கொள்வார்கள்.

தங்களது நண்பர்களை சேர்த்து வைக்கும்போது ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் போது இருவரும் தங்களை பற்றி தெரிந்து கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் அறியாமலே நேசிக்கின்றனர். தன்னை பிடித்திருக்கா என்று விஜய் ஜோதிகாவிடம் எதார்த்தமாக கேட்கும் கேள்விகள், தன்னை தவிர வேறு ஒரு பெண்ணிடம் அன்பாக பேசும் விஜய்யிடம் யார் என்று கேட்டு போஸாஸிவ் ஆகும் ஜோதிகா, பின்னர் விஜய்யின் அம்மா என தெரிந்ததும் சாந்தமாகும் ஜோதிகா, ஸ்மொக்கிங் செய்யும் விஜய்க்கு அந்த பழக்கத்தை கைவிட விலையுயர்ந்த ஸ்மொக்கிங் ட்ரே பரிசளிப்பது என காதலை சொல்லாமல் அன்பை வெளிக்காட்டி வருவார்கள். முதலில் காதலை யார் சொல்வது என்ற ஈகோ இருவருக்குமே இருக்கும்.
ஜாதி, மதம், அந்தஸ்த்து பிரச்சனை போன்றவை காதலுக்கு எதிராக இருந்து வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இருவருக்குள்ளான ஈகோ வில்லனாக இருந்தது. ஒரு சிறிய கருத்து வேறுபாட்டில் இவருடைய ஈகோ காரணமாக காதலை சொல்லாமலே பிரிந்து விடுவார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பார்க்கும்போது சந்தோசமாக இருப்பது போன்று காட்டிக்கொள்வது, விஜய் ஸ்மொக்கிங் பழக்கத்தை மீண்டும் செய்து ஜோதிகாவை வெறுப்பெற்றுவது என இருவரும் இருந்து வருவார்கள்.
ஒரு சமயம் ஜோதிகாவின் அப்பாவான விஜயகுமாரை சந்திக்கும் விஜய் ஜோதிகாவை பற்றி கூறும் தவறான விஷயங்கள் ரசிக்கும் படியாக இருக்கும். பின்னர் விஜய் பக்கத்தில் இருக்கும் போது, விஜய் ஜோதிகாவை பற்றி தவறாக பேசியதை விஜயகுமார் ஜோதிகாவிடம் கூறிவார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாததை போல காட்டிக்கொள்வார்கள்.
நண்பர்களின் காதலை சேர்த்து வைக்க இருவரும் உதவி செய்கின்றார்கள். பின்னர் நாளடைவில் இருவருக்கிடையேயான காதல் மேலும் அதிகரிக்கிறது. கல்லூரி படிப்பை முடித்து அவரவர் ஊருக்கு செல்லும்போது காதலை வெளிப்படுத்த தொலைபேசியில் பேச முயற்சிக்கும்போது தொடர்ப்பு கொள்ள முடியாமல் ஏமாற்றத்தில் செல்கிறார்கள்.
பின்னர் ரயிலில் சக பயணிகளிடம் காதலிப்பதாக கடிதம் எழுதி கொடுத்துவிட்டு செல்வார்கள். அந்த கடிதத்தை இருவரும் படித்த பிறகு தங்களுக்குள்ளான ஈகோவை விட அன்புதான் முக்கியம் என அறிந்து கொள்வார்கள். ஜோதிகா வீட்டிற்கு வரும்போது அவருக்கு கல்யாணம் ஏற்ப்பாடு செய்து இருப்பர் விஜயகுமார். மாப்பிளை விஜய் என்று பார்த்ததும் சந்தோசத்தில் இருவரும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

விஜய்யை ஒவ்வொரு காட்சியிலும் ஸ்மார்ட்டாக காட்டியிருப்பார். விஜயகுமார் எதார்த்த நடிப்பு, விவேக் காமெடி, மும்தாஜ் விஜய்யிடம் செய்யும் சேட்டைகள் அதை பார்த்து கோபமாகும் ஜோதிகா என அனைவரும் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்குது”, “மேக்கரினா மேக்கரினா”, ஒரு “பொண்ணு ஒன்னு நான் பார்த்த”, “யார் சொல்வதோ யார் சொல்வதோ”, “கட்டிப்புடி கட்டிப்புடிடா” என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.
சமீபத்தில் குஷி படம் வெளியாகி 24-வருடம் ஆனதை SJ. SURYA சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]