Home Movies கமல், ரஜினி ஆகிய ஜாம்பவான்களை வைத்து Block buster வெற்றி கண்ட எஸ்.பி. முத்துராமன்

கமல், ரஜினி ஆகிய ஜாம்பவான்களை வைத்து Block buster வெற்றி கண்ட எஸ்.பி. முத்துராமன்

கமல்ஹாசன், ரஜினி காந்த் என்ற இரண்டு நடிகர்களின் ஆரம்ப கட்ட திரை வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார் முத்துராமன்.   

by Sudhakaran Eswaran

கமல்ஹாசன், ரஜினி காந்த் என்ற இரண்டு நடிகர்களின் ஒவ்வொரு படத்திலும் அவர்களின் நடிப்பை ரசிக்கும் படி செய்து, அவர்களின் ஆரம்ப கட்ட திரை வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார் முத்துராமன்.   

தமிழ் திரையுலகில் 70, 80 காலகட்டங்களில் சிவாஜி, ஆர். முத்துராமன், ஜெய் சங்கர், விஜயகுமார்  போன்ற நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை இயக்கி தந்து கொண்டிருந்தார் எஸ்.பி. முத்துராமன். பின்னாளில்  ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களையும் வைத்து வெற்றி கண்டார். தமிழில் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். தமிழில் மட்டுமல்ல 3 தெலுங்கு படத்தையும் இயக்கியுள்ளார். முதன் முதலில் 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார். தனது ஆரம்ப காலத்தில் கண்ணதாசன் அவர்களின் தென்றல் இதழில் வேலை செய்து வந்தார் கமல், ரஜினி ஆகிய ஜாம்பவான்களை வைத்து Block buster வெற்றி கண்ட எஸ்.பி. முத்துராமன். திரைக்கதை எழுத்தாளராக வேண்டும் என்று ஆசையில் ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால் மெய்யப்பன் அவர்களால் உதவி எடிட்டராக ஏ.வி.எம். நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னாளில் துணை இயக்குனராக சில படங்களில் வேலை செய்து வந்தார்.   

Director SP Muthuraman

கனி முத்து பாப்பா என்ற படத்தின் மூலம் 1972-ல் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார். இதில் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், லட்சுமி, ஜெயா ஆகியோர் நடித்திருந்தனர். பின்னர் 1973-ல் சாவித்ரி, ஆர். முத்துராமன், மேஜர் சுந்தராஜன் ஆகியோர் நடித்த பெத்த மனம் பித்து என்ற படத்தை இயக்கினார்.  

1973-ல் வி.கே. ராமசாமி, சோ. ராமசாமி, சுருளி ராஜன், மனோரமா ஆகியோரை வைத்து காசி யாத்திரை என்ற காமெடி படத்தை இயக்கினார். அன்றைய காலகட்டத்தில் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கி ஓடி வெற்றியடைந்தது. 

தெய்வ குழந்தைகள், அன்புத்தங்கை, எங்கம்மா சபதம், ஆண்பிள்ளை சிங்கம், வாழ்ந்து காட்டுகிறேன், யாருக்கு மாப்பிளை யாரோ போன்ற படங்கள் ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தது. 1975-ல் மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தில் எஸ்.பி.பி. அவர்களின் “சம்சாரம் என்பது வீணை” என்ற பாடல்  சூப்பர் ஹிட் ஆனது.  

SP Muthuraman and Rajinikanth

1976-ல் கமல் ஹாசன், சுஜாதா, விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை முதன் முதலில் பெற்றார். 1977-ல் சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ரா ஆகியோர் நடிப்பில் புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். பிலிம்பேர் சிறந்த இயக்குனருக்கான விருதை இந்த படத்துக்காக வழங்கப்பட்டது. 

பின்னர் கமல், ரஜினி என இருவருக்கும் மாறி மாறி 25-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார். 1981-ல் விசு நடிப்பில் வெளியான குடும்பம் ஒரு கதம்பம் படத்தை குடும்பங்கள் ரசிக்கும் விதமாக எதார்த்தமாக எடுத்திருந்தார்.  

Murattu Kaalai poster

ரஜினி உடனான நட்பை கொண்டு இருவரும் கிட்டத்தட்ட 24 படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதே போல கமல் உடன் இணைந்து 9 படங்கள் பணியாற்றியுள்ளார்.  ரஜினிகாந்த் திரை வாழ்வில் அதிகபட்ச படங்களை இயக்கி தந்தது எஸ்.பி. முத்துராமன். சூப்பர் ஸ்டார் என்று உலகம் கொண்டாடும் ரஜினி அவர்களின் திரை பயணத்தில் முத்துராமன் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என ரஜினியை ஒவ்வொரு படத்திலும் ரஜினியை செதுக்கியுள்ளார்.  புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டு காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புது  கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்த்ரா, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் போன்ற படங்கள் ரஜினி மற்றும் எஸ்.பி. முத்துராமன் கூட்டணியில் வெளிவந்தன.  

கமல் , எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறதே, மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், ஜப்பானில் கல்யாண ராமன், பேர் சொல்லும் பிள்ளை, உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற வெற்றி படங்கள் வெளிவந்தன. 

கமல் நடிப்பில் வெளிவந்த உயர்ந்த உள்ளம் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு 50-வது படமாக இருந்தது. ரஜினி நடிப்பில் வெளியான பாண்டியன் 70-வது படமாகும். 1995-ல் ராம்கி, ரஞ்சிதா, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான தொட்டில் குழந்தை முத்துராமன் அவர்களின் கடைசி படமாக இருந்தது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.