Home Movies 15 வருடங்களுக்கு பின் இணையும் Sundar c Vadivelu!!

15 வருடங்களுக்கு பின் இணையும் Sundar c Vadivelu!!

இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் வடிவேலுவின் வெற்றிக் கூட்டணி 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

by Shanmuga Lakshmi

தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஜோடியாக ஜெயித்த பல நடிகர், நடிகைகள் மத்தியில் ஒரு comedian மற்றும் நடிகரின் on-screen ஜோடி பொருத்தம் இன்றளவும் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் உருவாக்குகின்றது என்றால் அது நடிகரும் இயக்குனரும் ஆன Sundar C மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஜோடி தான். இந்த கூட்டணி இணையும் போதெல்லாம் வெற்றிக்கூட்டணியாகவே அமைந்தது.

Sundar C and vadivelu films

2003ல் வெளியான “வின்னர்”, 2004ல் வெளியான “கிரி”, 2005ல் வெளியான “லண்டன்”, 2006ல் வெளியான “தலை நகரம்” என இவர்கள் கூட்டணியில் வெளியான படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் நமது வாழ்வில் நடக்கும் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற மீம்ஸ் ஆக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

“தலைநகரம்” வெளியான பிறகு பல காரணங்களால் இருவருமே இணைந்து பணியாற்றவில்லை. தற்போது 15 வருடங்களுக்கு பிறகு “கங்கேர்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலமாக இருவரும் இணைத்துள்ளனர். நடிகர் வடிவேலுவின் 64-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தில் நடிகை கேத்தரின் திரேசா, முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்க உள்ளனர். வைகை புயல் வடிவேலுவின் evergreen கதாபாத்திரங்களான “கைப்புள்ள, நாய் சேகர், வீரபாகு,” வரிசையில் “சிங்காரம்” கதாபாத்திரமும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.