தமிழ் சினிமாவில் நடிக்க நாட்டமில்லாமல் வேற துறையில் வேலை செய்து , பின்னர் முற்றிலும் தன்னுடைய உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் நடிகர் சூரியா. ‘நேருக்கு நேர்’ படத்தில் தொடங்கிய பயணம், தற்போது ‘கங்குவா‘ படம் வரை, நடிகர் சூரியாவின் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் பல உண்டு.
நந்தா (2001)

நடிகர் சூரியாவின் திறப்பபயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘நந்தா‘. இயக்குனர் பாலாவின் கல்ட் படமாக இன்றும் பேசப்படும் இந்த படத்தில் நடிகர் Suriya அதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன தாயை ஏமாற்றி அடித்து துன்புறுத்தும் தந்தையை சிறு வயதிலேயே கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் நந்தா. ஆண்டுகள் கடந்து வெளியாகும் அவருக்கு அம்மாவின் பாசம் கிடைக்காமல், சமூகத்துடன் பழக முடியாமலும் படும் துயரம், விரக்தியை தத்ருபமாக காட்டியிருப்பார்.
பிதாமகன் (2003)

விக்ரம் மற்றும் சூரியாவின் நடிப்பில் தவிர்க்கமுடியாத கதாபாத்திரங்கள் என்றால் அது ‘பிதாமகன்’ படத்தில் அவர்கள் நடித்த சித்தன் மற்றும் சக்தி பாத்திரங்கள் தான். பிழைப்பிற்காக ஊரை ஏமாற்றி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரு வாலிபன். நகைச்சுவையாக கவலையில்லாமல் திரியும் சக்தி, இந்த படத்தில் புதுவிதாமாக ஒரு நக்கலான வேடத்தில் நடித்திருப்பார் Suriya. “ஏன்னா உருட்டு அப்படி” என்று வரும் நகைச்சுவை காட்சிகளில் இதுவரை காணாத தோற்றத்தில் இவரை பார்த்திருந்தோம்.
காக்க காக்க (2003)

அன்பு செல்வன் IPS ஆக ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடித்த படம் ‘காக்க காக்க’. நேர்மையான ஒரு போலீஸ் ஆபிஸராக சென்னையில் உள்ள குற்றங்களை தடுக்கும் சிறப்பு பிரிவில் முக்கிய அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அபோது ஒரு ரவுடி கும்பலுடன் உருவாகும் பிரச்சனையில், இந்த சிறப்பு பிரிவு அதிகாரிகள் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவிதம் தான் கதை. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு ஸ்டைலான cop story, நடிகர் சூரியாவின் முதல் ப்ளாக்பஸ்டர் ஹிட் படம்.
பேரழகன் (2004)

‘பேரழகன்‘ படத்தில் நடிகர் சூரியா ஒரு உடல் ஊனமுற்றவராக, மிக எளிமையான அப்பாவி கதாபாத்திரத்திலும் அதற்கு அப்படியே மாறாக ஒரு கோவக்கார கல்லுக்குறி மாணவனாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒரே படத்தில் சின்னா பாத்திரத்தையும் பாவப்படும் மக்களை கார்த்திக் பாத்திரத்தை வெறுக்கும் படியும் நடித்து அசத்தியிருப்பார். இதுவரை ஒரு காதல் நாயகனாக நடித்து வந்த Suriya, அதற்கு மாறாக எடுத்த முயற்சி தான் பேரழகன் படத்தில் வரும் சின்னா கதாபாத்திரம்.
வாரணம் ஆயிரம் (2008)

மீண்டும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து, ஒரு முழுநீல காதல் கதையில் நடித்திருப்பார் சூரியா. ‘வாரணம் ஆயிரம்‘ படத்தில் இரட்டை வேடத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் காதலை பொழிந்திருப்பார். அப்பா கதாபாத்திரத்தில் ” Hi மாலினி, I’m கிருஷ்ணன்” என்று உருகி உருகி காதல் வசனம் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அப்படியே மகனாக சிக்ஸ் பேக் வைத்து ஸ்டைலான இளைஞனாக நடித்திருப்பார். இந்த படமும் நடிகர் சூரியாவுக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமைந்தஸ்திற்கு காரணம் அவரின் வேறுபட்ட நடிப்பால் தான்.
அயன் (2009)

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரியான சூர்யா, திருட்டு CDகளை எடுத்து வித்து தொழில் நடத்தி வருபவர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒரு துடிப்பான இளைஞனாக நடித்திருக்கும் சூரியா, இந்த கதாபாத்திரத்திற்காக உடலை மிடுக்காக வைத்தருப்பார். கே. வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு பக்க கமர்ஷியல் அச்டின் படமாக உருவான ‘அயன்’, அந்த வருடத்தின் மெகா ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. அதிலும் முக்கியமாக தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் சண்டை காட்சிகள் கடினமான சூழ்நிலையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் (2010)

துரைசிங்கம் என்ற கண்ணியமான காவல் அதிகாரி, நல்லூர் கிராமத்தில் வன்முறையில்லாமல் பல பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர். இயக்குனர் ஹரி, அவரின் இயல்பான கிராமத்து கதைக்களத்தில், ‘சிங்கம்’ படங்களை வெற்றி படமாக எடுத்துள்ளார். இந்த படம் நடிகர் சூரியாவுக்கு ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாயாக அமைந்தது.
24 (2016)

மூன்று மாறுபட்ட வேடங்களில், ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதையில் அட்டகாசமாக நடித்திருப்பார் சூரியா. அதிலும் குறிப்பாக ஆத்ரேயா கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து படம் முழுவதும் மிரட்டியிருப்பார். இந்த பாத்திரத்தின் லுக் மற்றும் முகபாவனை கொண்டே பார்ப்பவர்களை மிரட்டியிருப்பார் நடிகர் சூரியா. Wheel chairல் உட்கார்ந்த படியே படத்தில் வில்லத்தனம் செய்து, மற்றொரு கதாப்பாத்திரத்தில் திறமையான விஞ்ஞானியாகவும், Watch Mechanic மணியாக என நடிப்பில் வேறுபாடு காட்டி, நல்ல பாராட்டு பெற்றார்.
சூரரை போற்று (2020)

இயக்குனர் சுதா கொங்கரா, நிஜவாழ்க்கையில் நடந்த கதையை ஒரு திரைக்கதையாக எழுதி, அதில் நடிகர் சூர்யாவை கச்சிதமாக நடிக்க வைத்திருப்பார். ‘சூரரை போற்று‘ படம் சூர்யாவுக்கு பல flop படங்களுக்கு பின்னர் கிடைத்த பெரும் வெற்றி. Deccan Airways நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக கண்முன் காட்டி, அதில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.
ஜெய் பீம் (2021)

ஜஸ்டிஸ் K. சந்துரு அவர்கள் இருளர் சாதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தொடுத்த வழக்கை திரைப்படமாக எடுத்து, அதில் நடிகர் சூரியா, மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடித்த படம் ‘ஜெய் பீம்’. வழக்கறிஞராக நேர்த்தியுடன் தனது கதாபாத்திரத்தை புரிந்து அதற்கு ஏற்ப நடித்து ஒட்டுமொத்த திரையுலகையே திருப்பி பார்க்க வாய்த்த படமாக அமைந்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]