ஒரு சில நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் போது அவர்களின் ஜோடி படத்தில் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக இருக்கும். அப்படி ஒன்றாக இணைந்து நடித்த, Suriya மற்றும் ஜோதிகா ஜோடி படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
சிவகுமாரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தனது நடிப்பு திறமையால் சூர்யாவின் அப்பா தான் சிவகுமார் என்று சொல்லும் அளவிற்கு தற்போது வளர்ந்து வந்துள்ளார். தொடக்க காலத்தில் விஜய், முரளி, விஜயகாந்த் ஆகியிருடன் நடித்து வந்த Suriya பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

அந்த படத்தில் முதன் முறையாக ஜோதிகாவுடன் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் இவர்களது ஜோடி வெற்றி கூட்டணியாக அமைந்தது.
பூவெல்லாம் கேட்டுப்பார்:

1999-ல் வசந்த் இயக்கத்தில், காமெடி வசனத்திற்கு பெயர் போன கிரேஹி வசனம் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையில், சூர்யா, ஜோதிகா, விஜயகுமார், நாசர், அம்பிகா, வடிவேலு நடிப்பில் வெளியான படம் ” பூவெல்லாம் கேட்டுப்பார்”.
விஜயகுமார் மற்றும் நாசர் இருவரும் இசையமைப்பாளராக இருந்து வருவார்கள். அவர்களுக்குள்ளான மோதலால் பேசாமல் இருந்து வருவார்கள். நாசரின் மகளாக ஜோதிகாவும், விஜயகுமார் மகனாக சூர்யாவும் நடித்திருப்பார்கள். இறுதியில் நாசர் மற்றும் விஜயகுமார் இணைந்தார்களா என்பது தான் கதை.
யுவன் இசையில் “இரவா பகலா”, ஓ சென்யோரிட்டா”, சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே” போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிக்க வைத்துக்கொண்டே உள்ளது.
உயிரிலே கலந்தது:

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா combo இரண்டாவது முறையாக 2000-ல் KR. ஜெயா இயக்கத்தில் தேவா இசையில் வெளியான படம் “உயிரிலே கலந்தது”. இதில் சிவகுமாரின் இளையமகனாக சூர்யா நடித்திருப்பார்.
ரகுவரன், ராதிகா, வையாபுரி, அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் நடித்திருப்பார்கள். சிவகுமார், ராதிகாவிற்கு மூத்த மகனாக ரகுவரன் நடித்திருப்பார். அப்பா, அம்மா இருவரும் இளைய மகனான சூர்யாவிற்கு செல்லம் தந்து வளர்த்தி வருவார்கள். இதனை விரும்பாத ரகுவரன் ஒரு கட்டத்தில் சூர்யாவை கொலை செய்ய முயற்சிப்பார். இதன் பிறகு நடக்கும் நிகழ்வை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து வருவார்கள்.
காக்க காக்க:

பெரும்பாலும் ஜாலியான சூர்யாவாக நடித்து வந்த நிலையில் முதன் முதலில் போலீஸ் கேரக்டரில் 2003-ல் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜோதிகா, சூர்யா combo மூன்றாவது முறை சேர்ந்த படம் ” காக்க காக்க“.
ACP அன்புச்செல்வன் ஆக சூர்யாவும், பள்ளி ஆசிரியை மாயாவாக ஜோதிகாவும் நடித்திருப்பார்கள். பள்ளியில் படிக்கும் மாணவிக்கு உதவி செய்ய சூர்யாவை அழைக்கும் ஜோதிகா, உதவி செய்ய வரும் சூர்யா இருவருக்கும் காதல் மலர அதன் பின் நடக்கும் கதையை வித்தியாசமாக கொண்டு சென்றிருப்பார்.
படத்தின் வெற்றிக்கு பாடல்கள் இன்னொரு காரணம் என்று கூறும் அளவிற்கு அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. ” ஒரு ஊரில் அழகே அழகா ” என்ற பாடல் ஜோதிகாவுக்கு இன்ட்ரோ பாடலாக அமைந்தது மட்டுமல்லாமல் நிஜ வாழ்வில் அவருக்காக எழுதிய பாடல் போலவே இருந்தது.
பேரழகன்:

2004-ல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம்” பேரழகன்”. சூர்யா ஒரு கேரக்டரில் கார்த்திக் பெயரிலும், மற்றொரு கேரக்டரில் சின்னா (பிரேம் குமார்) கேரக்டரில் ஊனமுற்றவராக நடித்திருப்பார். அதே போல ஜோதிகா ஒரு கேரக்டரில் பிரியா நாயர் என்றும், மற்றொரு கேரக்டரில் கண் பார்வை இல்லாமல் செண்பகம் கேரக்டரிலும் நடித்திருப்பார்.
விவேக், மனோரமா, மனோபாலா, தலைவாசல் விஜய் போன்றோரும் நடித்திருப்பார்கள். பிரியா கேரக்டரில் நடித்த ஜோதிகா இறந்த பிறகு செண்பகத்திற்கு அவரது கண்களை வைத்து பார்வை தெரியும்படி செய்து விடுவார்கள். அதன் பிறகு நடந்த விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.
யுவன் இசையில் மீண்டும் தன்னை நிரூபித்திருப்பர். பாலா பாரதி, சினேகன், கபிலன் வரியில் பாடல்கள் ரசிக்க வைத்தது. பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது.
மாயாவி:

காமெடி நடிகர் சிங்கம்புலி இயக்கத்தில் 2005-ல் Suriya, ஜோதிகா, சத்யன் நடிப்பில் வெளியான படம் “மாயாவி”. நடிகை ஜோதிகாவை சூர்யா மற்றும் சத்யன் கடத்திக்கொண்டு வந்து விடுவார்கள். அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளை காமெடியாகவும், செண்டிமெண்ட் நிறைந்தும் காட்டியிருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு சில பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவரை சூர்யா ஜோதிகா நடித்த படங்களில் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
சில்லுனு ஒரு காதல்:

2006-ல் Suriya, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சுகன்யா, சந்தானம், தம்பி ராமையா நடிப்பில் வெளியான படம் “சில்லுனு ஒரு காதல்“. கிருஷ்ணா இயக்கத்தில், AR. ரஹ்மான் இசையில் க்ரீன் ஸ்டூடியோ படத்தை வெளியிட்டு இருந்தது.
கல்லூரி வாழ்கை, திருமணத்திற்கு பிறகு நடக்கும் நிகழ்வு என சூர்யாவின் இருவேறு காலங்களை ரசிக்கும் படியாக எடுத்திருப்பார். கல்லூரியில் முரட்டு தனம்கொண்ட மாணவனாக பூமிகாவை காதலித்து வருவார். அவர்களது காதல் காட்சிகள் எப்போது பார்த்தாலும் ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.
மற்றொரு பக்கம் ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வேலை செய்து வருவார். இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கும். இவர்களுக்குள்ளான காதலும் ரசிக்கவைக்கும். ஒரு முறை சூர்யாவின் கடந்த கால வாழ்க்கை ஜோதிகாவிற்கு தெரிய வர மனமுடைந்து விடுகிறார் ஜோதிகா.
பின்னர் நடக்கும் சில நிகழ்வுகள் கதையை ராசிக்கு வைத்திருக்கும். AR. ரஹ்மான் இசையில் ” முன்பே வா என் அன்பே வா”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்”, போன்றவை காதலர்களின் பிலே லிஸ்ட்டில் இன்றும் இருந்து வருகிறது.
2006-ல் ரேவதி S வர்மா இயக்கத்தில் ஜோதிகா, குஷ்பு, பிஜு மேனன் நடிப்பில் வெளியான June R படத்தில் guest ரோலில் சூர்யா நடித்திருப்பார்.
சூர்யா மற்றும் ஜோதிகா combo மூவிஸ்.
படங்கள் | வெளியான தேதி | கேரக்டர்கள் | இயக்குனர்கள் | நடிகர்கள் |
---|---|---|---|---|
பூவெல்லாம் கேட்டுப்பார் | 6 ஆகஸ்ட் 1999 | கிருஷ்ணா | வசந்த் | Suriya, ஜோதிகா, விஜயகுமார், நாசர், அம்பிகா, வடிவேலு |
உயிரிலே கலந்தது | 29 செப்டம்பர் 2000 | சூர்யா | KR. ஜெயா | சூர்யா, ஜோதிகா, ரகுவரன், ராதிகா, வையாபுரி, அரவிந்த் ஆகாஷ் |
காக்க காக்க | 1 ஆகஸ்ட் 2003 | ACP அன்புச்செல்வன் | கெளதம் வாசுதேவ் மேனன் | சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி, மனோபாலா |
பேரழகன் | 7 மே 2004 | கார்த்திக், சின்னா (பிரேம் குமார்) | சசி ஷங்கர் | Suriya, ஜோதிகா, விவேக், மனோரமா, மனோபாலா, தலைவாசல் விஜய் |
மாயாவி | 10 மார்ச் 2005 | பாலய்யா | சிங்கம்புலி | சூர்யா, ஜோதிகா, சத்யன் |
சில்லுனு ஒரு காதல் | 8 செப்டம்பர் 2006 | கெளதம் | கிருஷ்ணா | Suriya, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சுகன்யா, சந்தானம், தம்பி ராமையா. |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]