Tamil cinema Villain-களுக்கு எப்போது ஒரு தனித்துவம் உண்டு. நம்பியாரின் வில்லத்தனம் MGR-ஐ கொண்டாட வைத்தது. M R Radha-வின் வில்லத்தனம் சுய சிந்தனையை தூண்டியது. இப்படியான Villain-கள் தமிழ் சினிமாவை ஆண்டனர். 90களிலும் 2000திற்கு பின்னரும் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கை கூடியது. அதில் Kollywood Villain- களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். படத்திற்கும் கதையை நகர்த்திச் செல்லவே பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் கடந்த பத்து வருடத்தில் இருந்தது.
சமீபத்தில் நடிகர் Fahadh Faasil ஒரு நேர்காணலில் தன்னுடைய Villain கதாபாத்திரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுவது பற்றி மிக எளிமையாக கூறினார். Maamannan படத்தில் முதல் காட்சியிலேயே Villain அவரின் நாயை அடித்து கொள்ளுவது தான். பார்ப்பவர்களை நடுங்க செய்து திரையரங்கை அதிர்ச்சியில் வைத்த காட்சி. இந்த காட்சி மட்டுமில்லாமல் படம் முழுவதும் Fahadh Faasil-ன் கதாப்பாத்திரம் தொடர்ந்து செய்யும் சூழ்ச்சிகள் வில்லத்தனத்தின் உச்சம். ஆனாலும் சமூக வலைதளங்களில் இந்த கதாபாத்திரத்தை ‘மாஸ்’, ‘கெத்து’ என்று சித்தரித்து ஹீரொ போல கொண்டாடுவது சமூகத்தின் போக்கை பற்றி சிந்திக்க வைக்கிறது. இது முதல் முறை இல்லை, இது போல பல மாஸ் ஹீரோ படங்களில் Villain-களை பார்த்து ஆர்பரித்து கூச்சலிட்டனர் ரசிகர்கள்.
Kollywood Villain-களில் கொண்டாடப்படும் சில பாத்திரங்களோடு ஏதோ ஒரு வகையில் மக்கள் சம்பந்தப்படுத்தி கொள்கிறார்கள்.
கில்லி – முத்துப்பாண்டி

Praksh Raj பல வருடங்களாக வெவ்வேறு மொழிகளில் Villain-ஆக நடித்திருந்தாலும், இன்றளவும் பேசப்படும் கதாப்பாத்திரம் – முத்துப்பாண்டி. தான் ஆசைபட்டு காதலிக்கும் பெண் அவனின் காதலை ஏற்காததால் அவளின் குடும்பத்தை மிரட்டி அவளை கல்யாணம் செய்ய இயன்ற அனைத்தையும் செய்கிறான்- கொலை கூட. முத்துப்பாண்டி இன்றைக்கும் வலைதளங்களில் மீம்களிலும் கொண்டாடப்படுவதற்கு காரணம் – முத்துப்பாண்டி தனலட்சுமி மீது வைத்திருந்த காதல். அவளுக்காக அவனுடைய அனைத்தையும் விட்டு வாழ அவன் தயாராக இருந்தது. இப்படி முத்துப்பாண்டியை இவர்களே மிகை படுத்தி பிரபலமாக்கி வருகிறார்கள்.
மாமன்னன்- ரத்தினவேல்

அரசியல்வாதியான ரத்தினவேல் தன்னுடைய ஊரில் பெயர் அந்தஸ்து என பெரிய இடத்தில் உள்ளவன். அவனுடைய பலம் அவனுடைய சாதி. மேல் சாதியில் பிறந்து அதில் கர்வம் கொண்டு அவன் செய்யும் வில்லத்தனத்திற்கு எல்லை இல்லை. Fahadh Faasil ரத்தினவேலாக தத்ரூபமாக நடித்து பலரின் கோபத்திற்கு ஆளாகினாலும் இன்றும் சாதி பெருமை பேசும் சிலர் வலைதளங்களில் ரத்தினவேல் கதாபாத்திரத்தை தலையில் தூக்கி வைத்து ‘மாஸ்’ பாடல்கள் போட்டு கொண்டாடுவது பல கேள்விகளை எழுப்புகிறது.
தனி ஒருவன் – சித்தார்த் அபிமன்யு

நடிகர் Aravind Swami-ன் கம்பேக் படத்தில் ஸ்டைலான Villain -ஆக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். பிரபல பிஸ்னஸ் மேன் சித்தார்த் அபிமன்யுவிற்கு உலகில் அவனை தவிர எதுவும் பெரிதில்லை. அவன் வழியில் இடையூராக யார் வந்தாலும் இரக்கம் பார்க்காத வில்லன். படம் வெளியானதும் இப்படியும் வில்லன் உண்டா என்று அந்த பாத்திரத்தை கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். சித்தார்த் அபிமன்யுவின் ஸ்டைல், வசனம், தோரணை என அனைத்தையும் பிரபலமானது.
Atharva மற்றும் Nimisha Sajayan நடிக்கும் கிரைம் – த்ரில்லர் ‘DNA’!
ஜிகர்தண்டா 1- அசால்ட் சேது

Bobby Simha-வின் திரை பயணத்தின் முக்கியமான படம் ‘Jigarthanda 1’. லோக்கல் ரவுடியாக அந்த ஊரை தன் வசம் வைத்திருக்கும் கதாப்பாத்திரம். கதையில் வில்லன் என பார்த்தும் தெரியும் அளவுக்கு முதல் பாதியில் அக்மார்க் Kollywood Villain-ஆக நடித்திருப்பார். சினிமா ஆசையில் கதாநாயகனாக நடித்து அதில் ஏமாந்து இயக்குனரை பழி வாங்கும் சேது, தமிழ் சினிமாவில் இதுவரை காணாத வில்லன். அவனின் கோபமும் செய்யும் வில்லங்கமான சம்பவங்களும் ரசிகர்களை ஈர்த்து ‘அசால்ட் சேது’-வை கொண்டாட வைத்தது.
மங்காத்தா – விநாயக் மகாதேவ்

நடிகர் Ajith Kumar-ஐ வில்லன் ஆக்கி அழகு பார்க்க வைத்த படம். Kollywood -ன் முன்னனி ஹீரொ Villain-ஆக மாறி அதிலும் ரசிகர்களை ஆரவாரமாக்கிய படம் ‘Mankatha’. விநாயக் மகாதேவ் பணத்திற்காக நட்பு, காதல் என அனைத்தையும் பணையம் வைக்கும் சுயநலக்காரன். படத்தின் போக்கை மாற்றி அமைக்கும் திருப்பமாகவும் இருக்கும் கதாப்பாத்திரம் தமிழ் ரசிகர்கள் எதிர்பாராத கதாப்பாத்திரம்.
Villain என்று பார்ப்பவர்களை நம்பவைத்து கதையில் அனைத்து வித வில்லத்தனமும் செய்யும் திரமையான நடிகர்களை பாராட்டலாம். கதாப்பாத்திரங்களை கதையின் பகுதியாக எடுத்து அதில் சொல்லும் கருத்தை ரசிகர்கள் எடுத்து கொள்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]