Home Movies முதல் நாள் அதிக வசூல் செய்த Top 10 தமிழ் படங்கள்!!

முதல் நாள் அதிக வசூல் செய்த Top 10 தமிழ் படங்கள்!!

படம் வெளியாகி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள். முதல் நாளே அதிக வசூல் செய்து வர்த்தக ரீதியாக மிகப்பெரிய தொடக்கத்தை கொண்ட டாப் 10 திரைப்படங்கள்.

by Shanmuga Lakshmi

முதல் நாளே அதிக வசூல் செய்து வர்த்தக ரீதியாக மிகப்பெரிய தொடக்கத்தை கொண்ட Top 10 திரைப்படங்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், நடிகை திரிஷா, நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மிஷ்கின், நடிகைகள் மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்து 2023-ல் வெளியான “லியோ” 148 கோடி வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. வெள்ளித்திரையில் பெரிதும் கொண்டாடப்பட்டு ரசித்த ஜோடியான நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா 15 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து நடித்தனர். இதற்கு முன் வெளியான “கில்லி”, “திருப்பாச்சி”, “ஆதி” படங்களைப் போலவே, இந்த படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து தோன்றும் எல்லா காட்சிகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்)-ல்‌ “லியோ” இணைந்திருப்பதால் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் 

செப்டம்பர் 5 2024 இல் வெளியான “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(GOAT) திரைப்படம் 126 கோடி வசூலித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தளபதி விஜயின் 68 ஆவது படத்தில் முதல் முறையாக இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். De-aging தொழில்நுட்பம், தென்னிந்திய நடிகர் பட்டாளம், கேப்டன் விஜயகாந்த் cameo, சி எஸ் கே, என ஒரே படத்தில் ஏராளமான வியக்க வைக்கும் கூறுகளை அள்ளித் தெளித்து, ரசிகர்களை சந்தோஷ வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டனர் படக்குழு. இந்த ஆண்டின் மிகவும் முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது.

100+ கோடி வசூல் செய்து சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2.0 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2010ல் இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளியான “எந்திரன்” திரைப்படத்தின் sequel-ஆக “எந்திரன் 2.0” 2018-ல் லைக்கா தயாரிப்பில் வெளியானது. 2.0 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகை எமி ஜாக்சன், வில்லனாக நடிகர் அக்ஷய் குமார் தமிழில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்திற்கான VFX தொழில்நுட்பம் மேற்பார்வையாளராக சீனிவாஸ் மோகன் பணியாற்றியுள்ளார். VFX தொழில்நுட்பத்தின் உழைப்புக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது 

அதற்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் மிகவும் முக்கியமான எழுத்தாளரான ‘கல்கி கிருஷ்ணமூர்த்தியின்’ எழுத்துப் பயணத்தில் மிக முக்கிய படைப்பான பொன்னியின் செல்வன் தமிழ் புத்தக வாசிப்பாளர்களுக்கு பிடித்த புத்தகமாக கருதப்படுகிறது. ஐந்து பாகங்களை கொண்ட இந்த பிரம்மாண்ட படைப்பை திரையில் படமாக எடுக்க வேண்டும், என்று கனவு கண்ட பலரின் இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் ஒருவர். 40 ஆண்டு கால தேடலில் பலனாக 2022 இல் முதல் பாகம் ஆகவும் 2023 இரண்டாம் பாகமாகவும் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வெளியானது. ஆஸ்கர் நாயகனின் பின்னணி இசை மற்றும் சுவையான பாடல்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி, குந்தவையாக நடிகை திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன்/ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி என இந்த படத்தில் நடித்த அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பர். “பொன்னியின் செல்வன் – பாகம் ஒன்று” 80 கோடி வசூலித்து நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 

2022-ல் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் 72 கோடியுடன் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது அடுத்தடுத்த வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் முதல் முறையாக இணைந்து பணியாற்றினார். பல விமர்சனங்களை இந்த திரைப்படம் சந்தித்தாலும் அனிருத் இசை, இயக்குனர் நெல்சனின் டார்க் காமெடி என பல்வேறு கூறுகள் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருந்தது. 

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், இயக்குனர் நெல்சனுக்கும் அமைந்த திரைப்படம் தான் 2023 ல் வெளியான பிளாக் பஸ்டர் படமான “ஜெயிலர்” 70 கோடி முதல் நாள் வசூல் உடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இதுவரை மாஸ் ஹீரோவாகவே சூப்பர் ஸ்டாரை கண்ட ரசிகர்களுக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சாதாரண பேமிலி மேனாக நடித்து அதிலும் மாஸ் ஹீரோவாக கலக்கிய சூப்பர் ஸ்டாரின் வித்தியாசமான பரிமாணமாக இந்த படம் அமைந்தது . 

2018 இல் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் வெளியான “சர்க்கார்” திரைப்படம் 69 கோடிகளை வசூலித்து ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா ஆகியோர் நடித்த வெளியான அரசியல் ஆக்சன் டிராமாவான இந்த திரைப்படம் பல விமர்சனங்களை தாண்டி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

MCU, DCU என்று ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸ் போலவே தமிழ் சினிமாவிலும் அந்த கலாச்சாரத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2022 இல் உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளியான “விக்ரம்” படத்தின் மூலம் தொடக்கி வைத்தார். அதற்கு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) என்று பெயரிட்டார். தனது நான்காவது படத்திலேயே உலக நாயகனுடன் கூட்டணி வைத்து தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமா உலகமே திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு‌ வந்து சேரும். போதைப் பொருட்களை கடத்தும் கும்பல் அதை எதிர்க்கும் ஹீரோக்கள் என்ற கதை அமைப்பை கொண்டு 2019ல் வெளியான “கைதி”, அதன் பிறகு வெளியான “விக்ரம்” அதன் பிறகு வெளியான “லியோ” என இந்த மூன்று படங்களையும் முக்கிய கதாபாத்திரங்களின் மூலம் ஒன்று சேர்த்துள்ளார் இயக்குனர் லோகேஷ். தமிழ் சினிமாவிற்கு இந்த ஐடியா ஒரு புதுமையை சேர்த்துள்ளது. முதல் நாள் 66 கோடி வசூலித்து எட்டாம் இடத்தை பிடித்துள்ளது விக்ரம். 

2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளியான “பிகில்” 55 கோடி வசூலித்து ஒன்பதாவது இடத்திலும். 2021 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் 50 கோடி வசூலித்து பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.

டாப் 10 திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


திரைப்படத்தின் பெயர் முதல் நாள் வசூலித்த பணம் 
லியோ (Leo)146 கோடி 
The Greatest of All Time (GOAT)126 கோடி 
எந்திரன் 2.0100+ கோடி 
பொன்னியின் செல்வன் – I (பாகம் ஒன்று)80 கோடி 
பீஸ்ட் (Beast)72 கோடி 
ஜெயிலர் (Jailer)70 கோடி 
சர்க்கார் (Sarkar)69 கோடி 
விக்ரம் (Vikram)66 கோடி 
பிகில் (Bigil) 55 கோடி 
வலிமை (Valimai)50 கோடி 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.