நடிகர்கள் ரகுவரன், சரத்பாபு, சத்யராஜ், ஜெய்ஷ்ங்கர் போன்ற தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான தவிர்க்கமுடியாத நடிகர்கள் இன்றைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை அவர்களின் திரைப்படங்கள் அளித்து வருகிறது. வில்லன், கதாநாயகன், துணை நடிகர் என பல பரிமாணங்கள் எடுத்து அவர்களின் நடிப்பை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளனர் என்று கூறினால் அது மிகை ஆகாது. இவர்கள் வரிசையில் இன்றைய தலைமுறையில் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு நடிகராக “Bobby Simha” திகழ்கிறார்.
இவரின் நடிப்பில் தமிழில் வெளியான கட்டாயம் பார்க்க வேண்டிய Top 7 திரைப்படங்களின் பட்டியல்.
1. Pizza
Top 7 படங்களில் முதல் இடம் பிடிப்பது திகில் மற்றும் த்ரில்லர் படமான “Pizza”. தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான படமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. தற்போது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய உச்சத்தில் வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, Bobby Simha மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஆரம்ப கால வெற்றி திரைப்படம் தான் இந்த “pizza”. 2012 ஆம் ஆண்டு வெளியான “Pizza” திரைப்படத்தில் ஆழமான பாபி என்ற துணை கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹா மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். திகில் மற்றும் சுவாரசியம் நிறைந்த இந்த படத்தில் பாபியின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதுவே அவர் சினிமாவில் ஜொலிக்க அடித்தளம் வகுத்தது.
2. சூது கவ்வும்
நளன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் பாபிக்கு கிடைத்த அடுத்த வெற்றி படமாகும். விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவின் ஜோடி இரண்டாவது முறையாக இந்த திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தது இவர்களுடன் அசோக் செல்வன் மற்றும் ரமேஷ் திலக் இணைந்து நடித்தது கூடுதல் கவனம் பெற்றது. வேலைக்காக தினந்தோறும் அலைந்து திரிந்து விரக்தியில் இருக்கும் மூன்று நடுத்தர வயது நபராக அசோக், Bobby Simha மற்றும் ரமேஷ் திலக் நடித்திருந்தனர். இதில் பாபி பகலவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ள பகலவன் இறுதியில் தனது கனவை தனது நண்பர்களுடன் இணைந்து செய்த கடத்தல் அவருக்கு கை கொடுக்கிறது. பாபியின் நகைச்சுவையான செயல், வசனம், வெகுளித்தனம் பலரின் பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
3.ஜிகர்தண்டா
இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பது, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் பாபியின் நடிப்பில் வெளியான “ஜிகர்தண்டா”. 2014 ஆம் ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். சித்தார்த் மற்றும் பாபி இணைந்து நடித்த இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்தனர். ஆனால், “Assault சேது” என்ற கதாபாத்திரம் பாபி சிம்ஹாவை தவிர வேறு எவரையும் ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. ஒரு ரவுடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் சேது சினிமா துறையில் நுழையும் வித்யாசமான கதைக்களமாக “ஜிகர்தண்டா” அமைந்தது.
4.இறைவி
பாபி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் நட்பு “இறைவி” திரைப்படத்திலும் தொடர்ந்தது. பெண்களை மையமாக வைத்து அவர்களை சுற்றி இருக்கும் ஆண்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக பாபி நடித்திருப்பார். ‘ஜெகன்’ என்ற காலேஜ் மாணவனாக வளம் வரும் பாபி தனது அண்ணன் மற்றும் நண்பன் மைக்கேல், இருவருடன் நல்ல பந்தத்தில் இருந்து வருகிறார். கதைக்களம் முன்னோக்கி செல்ல செல்ல அவர் கதாபாத்திரத்தின் உண்மையான நிறம் வெளியே வருகிறது. தனது நண்பனுக்கு துரோகியாக ஒரு கட்டத்தில் மாறுகிறார். மிகவும் தெளிவாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் அவரின் சிறந்த நடிப்பை அளித்ததால் இந்த படம் Top 7 பட்டியலில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
5. மெட்ரோ
வித்யாசமான கதை கலங்களை தேர்வு செய்வதில் உறுதியாக இருந்த பாபிக்கு கிடைத்த மற்றொரு மிகச் சிறந்த படம் தான் “மெட்ரோ”. ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் “குணா”-வாக மிரட்டலான நடிப்பை வெளிக் காட்டியிருப்பார். செயின் பறிக்கும் கும்பலின் தலைவனாக இருக்கும் குணா தனது எதிரியாக கதாநாயகனை எண்ணி அவர் செய்யும் வில்லத்தனம் பலரின் கோபத்தை தூண்டியது அவர் நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்ஷன் கிரைம் திரில்லர் படமாக “மெட்ரோ” அமைந்தது.
6.திருட்டு பயலே 2
சுசி கணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான “திருட்டு பயலே” படத்தின் இரண்டாம் பாகம் 2017-ல் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் நடிப்பில் “திருட்டு பயலே 2” வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்டது அதை சிறப்பாக பூர்த்தியும் செய்தது என்றே கூறலாம். “செல்வம்” என்ற காவல் அதிகாரியாக தனது காதல் மனைவி அகல்யா உடன் வாழ்ந்து வரும் பாபிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைவது பிரசன்னாவின் வருகை. குற்றவாளிகளின் உரையாடலை ஒட்டு கேக்கும் செல்வம் தனது மனைவியின் உரையாடலை ஒட்டுக் கேட்க தொடங்குவதில் இருந்து படத்தின் கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. கதாநாயகனாக பாபிக்கு இந்த படம் வெற்றியை அளித்தது.
7.மகான்
Thanks for all the love showered on #Mahaan ♥️♥️🙏🏼
— karthik subbaraj (@karthiksubbaraj) May 20, 2022
It will always be a special film for me and my team 🙏🏼🙏🏼
Me personally will cherish every moment working with the Super awesome #ChiyaanVikram 🤗🤗 #100daysofMahaan #100daysofLivingBig
And it's time to move 2️⃣ my next 😊 pic.twitter.com/o4cfFPjTGd
Top 7 பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் இந்த படம் பாபி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அமைந்த மற்றொரு மெகா ஹிட் திரைப்படம் ஆகும். 2022-ல் நேரடியாக OTT-யில் வெளியான “மகான்” படத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் உடன் இணைந்து பாபி ‘சத்யா’ என்ற முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரமாக “சத்யா” அமைந்தது பாபி சிம்ஹாவிற்கு கிடைத்த வெற்றியாகும். காந்தி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் விக்ரமின் நெருங்கிய நண்பனாக இருக்கும் சத்யா சூழ்நிலைகளின் சூழ்ச்சியால் எதிரியாக உருமாறி பழிவாங்க துடிப்பது, அவரின் வெளிப்படுத்தும் அடக்க முடியாத குரோதம், ‘சத்யா’ என்ற கதாபாத்திரம் வெற்றி பெற உறுதுணையாக அமைந்தது.
கதாநாயகன், வில்லன், துணை நடிகன் என நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தெளிவாகவும், கவனமாகவும் தேர்வு செய்து அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, காலம் கடந்தாலும் என்றும் நிலைத்து நிற்கும் படி செய்துள்ளதால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக பாபி சிம்ஹா அங்கம் வகித்து வருகிறார்.