இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘வாழை‘. நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் நடிக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து பத்திரிக்கரையாளர்களை அழைத்து படத்தை பற்றிய விரிவான நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ராம், இயக்குனர் பா. ரஞ்சித், இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை‘ படத்தின் பின்னணி பற்றியும் அவரின் திரைப் பயணம் பற்றியும் பேசினார்.

சினிமாவில் இயக்குனர் ராமின் துணை இயக்குனராக இருந்த சமையத்தில் அவர் கதையே ‘வாழை’ தான். அப்போது எதாவது சின்ன பட்ஜெட்டில் இந்த கதையை படமாக எடுத்துவிடலாம் என்று இருந்தாராம் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமின் அறிவுரைப்படி பல ஆண்டுகளாக ‘வாழை’ படத்தின் கதையை படமாக்காமல் வைத்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்‘ என்ற வெற்றிப் படங்களை இயக்கிய பின்னர், மாமன்னன் படத்தை முடித்ததும் எப்படியாவது ‘வாழை’ கதையை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து, டிஸ்னி உதவியுடன் இந்த படத்தை இயக்கியதாக கூறினார் மாரி செல்வராஜ்.
‘வாழை’ படத்தை இப்போது இயக்க காரணம் தன்னுடைய ரசிகர்கள் தான் என்றும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கும் நன்றி தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று இருந்ததாகவும், ‘வாழை’ படத்தில் நடித்த சிறுவர்கள் பொன்வேல் மற்றும் ராகுல்க்காக தான் ஒருங்கிணைத்ததாகவும் தெரிவித்தார். இந்த சிறுவர்கள் இருவரும் ‘வாழை’ படத்தில் கடினமாக உழைத்து நடித்துள்ளதாகவும், அதையும் தாண்டி இளம் சிறுவர்கள் நடிப்பு மாதிரியான கலையில் ஈடுபடும்பொது மற்ற தேவையில்லாத பழக்கதில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறினார்.
இந்த படத்தின் நடிகர்களிடம் மிகப்பெரிய உழைப்பை வாங்கி படத்தை உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். முதலில் ஹாட்ஸ்டாருக்காக ஓடிடி-யில் உருவான இந்தப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு ‘’இது தியேட்டரில் ரிலீஸாக வேண்டிய படம்’’ எனப்பாராட்டிவிட்டு படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் நடிகை திவ்யா துரைசாமி கடுமையான சூழ்நிலைகளில், அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் என்றும், பல காட்சிகளில் நடிகர் கலையரசி 100 கிலோ எடையுள்ள வாழைத்தாரை சுமந்ததாகவும், நடிகை திவ்யா துரைசாமி 70 கிலோ எடையை சுமந்து நடித்ததாகவும் குறிப்பிட்டு பாராட்டினார் இயக்குனர் Mari Selvaraj.
தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை அப்படியே படமாக எடுத்து நடிக்க சொல்லியிருக்கிறேன், ‘வாழை’ படம் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் ஆறாத காயங்களின் வெளிப்பாடு என்றும் மிக உருக்கமாக பேசினார். அவருக்கு இந்த படம் மிகவும் மனதுக்கு நெருக்கமான படமாக இருப்பதாலும், ‘வாழை’ படத்துக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த படம் வெளியாகும் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார் மாரி செல்வராஜ்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]