Home Movies இசையமைப்பாளர், நடிகர், இயக்குனராக சினிமாவில் தன்னை நிரூபித்த Vijay Antony

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனராக சினிமாவில் தன்னை நிரூபித்த Vijay Antony

2000 காலகட்டத்தில் இளையராஜா, AR. ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என இசை பிரபலங்களுக்கு மத்தியில் முறையாக இசையை கற்காத விஜய் ஆண்டனி எனும் மனிதன் அவர்களுக்கு இணையாக இசையமைத்து ரசிகர்களுக்கிடையே தனது பாடலால் வைப் ஏற்படுத்தினார். 

by Sudhakaran Eswaran

2000 காலகட்டத்தில் இளையராஜா, AR. ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என இசை பிரபலங்களுக்கு மத்தியில் முறையாக இசையை கற்காத விஜய் ஆண்டனி எனும் மனிதன் அவர்களுக்கு இணையாக இசையமைத்து ரசிகர்களுக்கிடையே தனது பாடலால் வைப் ஏற்படுத்தினார். 

Vijay Antony

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த விஜய் ஆண்டனி ஊடகங்கள் மற்றும் திரையுலகில் நுழைந்தபோது ​​அவர் பெயரை “அக்னி” என வைத்திருந்தார். ஆனால் அந்த பெயர் அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்  “Vijay Antony” என மாற்ற வைத்தார். 

விஜய் ஆண்டனியின் தாத்தா சாமுவேல் வேதநாயகம் பிள்ளை தமிழ்க் கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக சேவகர் ஆவார். அவர் “முதல் நவீன தமிழ் நாவல்” என்று அங்கீகரிக்கப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரத்தின் ஆசிரியரும் ஆவார். வேதநாயகத்தின் பெண் விடுதலை, கல்வி பற்றிய இலட்சியங்கள் போன்றவை இந்நாவலில் உள்ளது. 

ஆண்டனிக்கு 7 வயதாக இருந்தபோது தந்தை தற்கொலை செய்துகொண்ட பிறகு, Vijay Antony அவரது தாயால் வளர்க்கப்பட்டார். அவர் ஒரு பயிற்சி பெற்ற இசைக்கலைஞர் அல்ல, ஆனால் ஒரு சவுண்ட் இன்ஜினியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் இசையமைப்பாளராக மாறினார். 

அவர் ஆடியோ இன்ஃபோடெயின்மென்ட் என்ற ஆடியோ ஸ்டுடியோவை நிறுவி, அங்கு ஒலிப் பொறியாளராகப் பணியாற்றினார். இசையமைப்பாளராக இருந்த அவரது ஆரம்ப நாட்களில் அவர் நாடகங்கள், விளம்பரங்களுக்காக இசையமைத்தார். 

விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்”, “காதலிக்க நேரமில்லை” போன்ற தொடர்களில் இவரது இசை தான் டைட்டில் பாடலாக இருந்துள்ளது. 

மேலும் ஒலிப் பொறியியலில் ஆராய்ச்சி செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பின்னணி இசையை இயற்றினார். இயக்குனர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  “டிஷ்யும்” படத்திற்கு இசையமைக்க ஆண்டனியை அணுகியபோது திரைப்படங்களில் முதல் முறை இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அதை தொடர்ந்து சுக்ரன் படத்திற்கு இசையமைக்க, டிஸ்யும் படத்திற்கு முன்னதாகவே  சுக்ரன் படம் வெளியிடப்பட்டது.

Actor Vijay Antony

தனக்கென்று ஒரு வைப்பில் இசையமைக்க தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பரவிய பாடல் தான் சுக்ரன் படத்தில் “சாத்திக்கடி போத்திக்கடி” பாடல். படம் பெரிய அளவில் ஹிட்  என்றாலும் பாடல்கள் ரசிக்கும் படியான வரவேற்பை பெற்றது. 

அடுத்து டிஸ்யும் படத்தில் “டிலாமோ டிலாமோ”, “நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்” பாடல்கள் ஹிட் அடிக்க முதல் இரண்டு படத்திலேயே தனது திறமையை சினிமா ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். 

நான் அவன் இல்லை படத்தில் ஜீவன் ஒவ்வொரு ஹீரோயின்களை சந்திக்கும் போது வேறு வேறு சூழ்நிலையில் தனது இசையால் ரசிக்கும் படி செய்திருப்பார். “பச்சை தண்ணி பத்திக்கிச்சு” என்ற குத்து பாடல் இவரது இசையால் பல முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல ரசித்து குத்தாட்டம் போட வேண்டும் என்றே தோணும். இந்த படத்திற்கு பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. 

அடுத்து குத்துப்பாட்டு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று காதலில் விழுந்தேன் படத்தில் வரும் “நாக்க முக்க” பாடல் மூலம் எல்லா வயதினரையும் இந்த பாடலுக்கு ஆடும் படி வைப் செய்திருப்பார். 

2011-ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்த பாடல் ஸ்டேடியத்தில் போடப்பட்டு வைப் செய்தனர். கேன்ஸ் கோல்டன் லயன் விருது இந்த பாடலுக்காக Vijay Antonyக்கு வழங்கப்பட்டது. 

அடுத்து “கேளு மகனே கேளு தமிழில முதல் முறையை ரேப் குத்து கேளு” என்று தனது பாடல்கள் மூலம் புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு காட்டியிருப்பார். எப்படி இப்படி பாடல் எழுதி, இசையமைக்கிறார் என்று ஆச்சரிய பட வைத்தார். 

Vijay Antony

நினைத்தாலே இனிக்கும் படத்தில் ” வண்ணராஸ் பட்டு கட்டி”, செஸ்ஸி லேடி கிட்ட வாடி” பாடல்கள் வைப்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். அதை தொடர்ந்து வேட்டைக்காரன் படத்தில் ” புலி உரும்புது, புலி உரும்புது”, 

‘ஒரு சின்ன தாமரை”, “என் உச்சி மண்டைல” போன்ற பாடல்கள் படத்தை விட பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது. 

Music Director Vijay Antony
Source: IMDb

உத்தம புத்திரன், வெடி, வேலாயுதம் போன்ற படங்களில் மெலோடி, குத்துப்பாடல் என இரண்டிலும் கலக்கியிருப்பார். 

பின்னர் நடிப்பின் பக்கம் வந்த Vijay Antony, நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்தும், இசையமைத்தும் அசத்திருந்தார். 

நான் படத்தில் “மக்காயல மக்கயால”, “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடல்கள் படம் ரிலீஸ் ஆனா சமயம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன் படத்தில் “நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல” பாடல் இவரது இசையில் ரசிக்க வைத்தது. 

படங்கள்   வெளியான தேதி நடிகர்கள்    இயக்குனர்கள் கேரக்டர்கள்
நான்            15 ஆகஸ்ட் 2012 விஜய் ஆண்டனி, சித்தார்த் வேணுகோபால், ரூபா மஞ்சரி.ஜீவா ஷங்கர்கார்த்திக்/ சலீம்     
சலீம்        29 ஆகஸ்ட் 2014Vijay Antony, அக்ஷா பர்தாசனி, நிர்மல் குமார் முஹம்மத் சலீம்  
இந்தியா பாகிஸ்தான்       8 மே 2015     விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், ஜெகன், பசுபதி, MS. பாஸ்கர் ஆனந்த்  கார்த்திக்   
பிச்சைக்காரன்                 4 மார்ச் 2016 Vijay Antony, சட்னா டைட்டஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் சசி  அருள் செல்வகுமார்
சைத்தான்   1 டிசம்பர் 2016  விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், YG. மஹேந்திரன், மீரா கிருஷ்ணன்பிரதீப் கிருஷ்ணமூர்த்தி   தினேஷ்/ சர்மா   
எமன்        24 பிப்ரவரி 2017  Vijay Antony, மியா, ஷில்பா மஞ்சுநாத், தியாகராஜன், சார்லி ஜீவா ஷங்கர்தமிழரசன்/ அறிவுடை நம்பி 
அண்ணாதுரை            30 நவம்பர் 2017விஜய் ஆண்டனி, மஹிமா, ராதா ரவி, காளி வெங்கட் ஸ்ரீனிவாசன் அண்ணாதுரை/ தம்பிதுரை 
காளி 18 மே 2018  Vijay Antony, ஷில்பா மஞ்சுநாத், அமிர்தா ஐயர், அஞ்சலி, சுனைனாகிருத்திகா உதயநிதிdr. பரத்  
திமிரு பிடிச்சவன்         16 நவம்பர் 2018 விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, லட்சுமி ராமகிருஷ்ணன்  கணேசாஇன்ஸ்பெக்டர் முருகவேல்
கொலைகாரன்    7 ஜூன் 2019    விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால்  ஆண்ட்ரூ லூயிஸ் பிரபாகரன்  
கோடியில் ஒருவன்    17 செப்டம்பர் 2021   விஜய் ஆண்டனி, ராமச்சந்திர ராஜு, ஆத்மீகா ஆனந்த கிருஷ்ணன்  விஜயராகவன்  
தமிழரசன்       22 ஏப்ரல் 2023  விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பிசன், சங்கீதா, ராதா ரவி. பாபு யோகேஸ்வரன்  இன்ஸ்பெக்டர் தமிழரசன்
பிச்சைக்காரன் 2    19 மே 2023 விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில், ஜான் விஜய் விஜய் ஆண்டனி, விஜய் குருமூர்த்தி/ சத்யா  
கொலை     21 ஜூலை 2023  விஜய் ஆண்டனி, மீனாட்சி சௌத்ரி, ரித்திகா சிங்க், ராதிகா   பாலாஜி k குமார்  விநாயக் 
ரத்தம்   6 அக்டோபர் 2023     விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பிசன், CS. அமுதன்ரஞ்சித் குமார் 
ரோமியோ         11 ஏப்ரல் 2024 விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி, VTV கணேஷ், யோகி பாபு, இளவரசு விநாயக் வைத்தியநாதன்     அறிவழகன் / அறிவு 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.