2011-ல் தெலுங்கு சினிமாவில் கால்பதித்து பல சோதனைகளை கடந்து, அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தனது நடிப்பால் கவனிக்க வைத்தார் விஜய் தேவரகொண்டா.
ஹைதராபாத் பகுதியில் கோவர்தன் ராவ், மாதவி ஆகியோருக்கு பிறந்த விஜய் தேவரகொண்டா பள்ளிப்படிப்பை புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் ஹைதராபாத் லிட்டில் ஃப்ளவர் ஜூனியர் கல்லூரியில் படித்தார். கல்லூரி படிப்பை பத்ருகா வணிகவியல் & கலைக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது அப்பா டிவி சீரியல் டைரக்டராக இருந்து வந்தார். இவரது அம்மா பெர்சனாலட்டி டெவலப்மென்ட் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். கல்லுரி படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் கொண்ட விஜய் தேவரகொண்டா மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு இருந்தார்.
இவர் புத்தகம் வசிப்பது, எழுதுவதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார். 2011-ல் நுவ்வில்ல என்ற படத்தில் 6 புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ரவி பாபு. அதில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர். பெரிய அளவில் ரசிக்கப்படாத நிலையில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தார்.

மனம் தளராத Vijay Devarakonda சினிமா வாழ்வில் திருப்பு முனையாக 2015-ல் எவடே சுப்பிரமணியம் என்ற படத்தில் நானியுடன் நடித்து கவனம் பெற்றார். பின்னர் 2016-ல் ரிது வர்மாவுடன் நடித்த “Pelli Choopulu” என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

2017-ல் அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் “Handsome ரௌடியாக” திரும்பி பார்க்க வைத்தார். காதல், ஆக்சன் என சைக்கோ டாக்டர் ஆக படம் முழுவதும் நடிப்பில் ரசிக்கவைத்திருப்பார். இந்த படம் இவருக்கான அடையாளத்தை தந்தது என்றே கூறலாம். பிலிம்பேர் சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருதை பெற்றார்.
அதை தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து அசத்தினார். பாடல்கள், இவரது நடிப்பு என 2k கிட்ஸ் இவரை பெரிய அளவில் கொண்டாட தொடங்கினர். NOTA படத்தில் CM கேரக்டரில் மக்களின் நண்பனாக நடித்திருப்பார்.

டியர் Comrade, World famous lover, குஷி, The Family star போன்ற படங்கள் தெலுங்கில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு சினிமாவில் அதிக படங்கள் நடித்திருந்தாலும் பான் இந்தியா ஸ்டார் ஆக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான கல்கி 2898 AD படத்தில் அர்ஜுனா கேரக்டரில் நடித்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள்.
படங்கள் | நடிகர்கள் | வெளியான தேதி | கேரக்டர் | டைரக்டர்கள் |
அர்ஜுன் ரெட்டி | விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே | 25 ஆகஸ்ட் 2017 | Dr. அர்ஜுன் ரெட்டி தேஷ்முக் | சந்தீப் ரெட்டி |
கீதா கோவிந்தம் | விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. | 15 ஆகஸ்ட் 2018 | விஜய் கோவிந்த் | பரசுராம் |
NOTA | விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்சாதா, சத்யராஜ், நாசர், MS. பாஸ்கர் | 5 அக்டோபர் 2018 | வருண் சுப்பிரமணியம் | ஆனந்த் சங்கர் |
Taxiwaala | விஜய் தேவரகொண்டாபிரியங்கா ஜவால்கர், மாளவிகா நாயர் | 17 நவம்பர் 2018 | சிவா | ராகுல் சங்கிரித்யன் |
Dear Comrade | விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா, ஸ்ருதி ராமச்சந்திரன் | 26 ஜூலை 2019 | சைதன்யா கிருஷ்ணா (பாபி) | பாரத் கம்மா |
World Famous Lover | விஜய் தேவரகொண்டா, ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா | 14 பிப்ரவரி 2020 | கெளதம், ஸ்ரீனு(dual role) | கிரந்தி மாதவ் |
லிகர் | விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் | 25 ஆகஸ்ட் 2022 | பல்ராம் அகர்வால் ,லிகர் | பூரி ஜெகநாத் |
குஷி | விஜய் தேவரகொண்டா, சமந்தா | 1 செப்டம்பர் 2023 | லெனின் விப்லவ் | ஷிவா நிர்வாணா |
தி Family star | விஜய் தேவரகொண்டா, மிருணால் தாக்கூர் | 5 ஏப்ரல் 2024 | கோவர்தன் | பரசுராம் |
கல்கி 2898 AD | பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதினி, விஜய் தேவரகொண்டா | 27 ஜூன் 2024 | அர்ஜுனா | நாக் அஸ்வின் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]