Home OTT இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

by Santhiya Lakshmi

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். இன்னொரு புறம் பெரிய படம், சின்ன படம் என்று பார்க்காமல், எதுவாக இருப்பினும் அதை OTT-யில் வெளியான பிறகே பார்க்க விரும்பும் ரசிகர்களும் உண்டு. அவர்களுக்காக இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.பிரேமலு :

premalu

‘பிரேமலு’ திரைப்படம் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதியும், தமிழில் கடந்த மார்ச் 15-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் காமெடி படமான இதனை பிரபல இயக்குநர் கிரிஷ்.ஏ.டி இயக்கியிருந்தார். இதில் நஸ்லென்.கே.கஃபூர் – மமிதா பைஜு ஜோடியாக நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன்.எம், அகிலா பார்கவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த வாரம் இப்படம் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.

2.டெவில் :

devil

விதார்த் நடித்த ‘டெவில்’ கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஆதித்யா இயக்கியிருந்தார். இதில் விதார்த்திற்கு ஜோடியாக பூர்ணா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் த்ரிகன், மிஷ்கின், சுபஸ்ரீ, ரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு மிஷ்கின் இசையமைத்திருந்தார், கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த வாரம் இப்படம் ‘ஆஹா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.  

3.அதோமுகம் :

Athomugam

எஸ்.பி.சித்தார்த் நடித்த ‘அதோமுகம்’ கடந்த மார்ச் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுனில் தேவ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சைத்தன்யா பிரதாப், சரித்திரன், ஜே.எஸ்.கவி, ஆனந்த் நாக், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களுக்கு மணிகண்டன் முரளி இசையமைத்திருந்தார், சரண் ராகவன் பின்னணி இசையமைத்திருந்தார். இந்த வாரம் இப்படம் ‘சிம்ப்ளி சவுத்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

4.நந்திவர்மன் :

Nandivarman

சுரேஷ் ரவி நடித்த ‘நந்திவர்மன்’ கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், JSK கோபி, ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், மீசை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த வாரம் இப்படம் ‘சிம்ப்ளி சவுத்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

5.பைரி :

Byri

சையத் மஜீத் நடித்த ‘பைரி’ கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜான் கிளாடி இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மேகனா ஏல்லென், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த், கார்த்திக் பிரசன்னா, ஃபிரான்சிஸ் கிருபா, ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு அருண் ராஜ் இசையமைத்திருந்தார். இந்த வாரம் இப்படம் ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

6.பொன் ஒன்று கண்டேன் :

Ponn Ondru Kandein

அசோக் செல்வன் – வசந்த் ரவி இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. இந்த படத்தை இயக்குநர் ப்ரியா.வி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஏ.டி.பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜியோ சினிமா’வில் வெளியாகவிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.