Home OTT இந்த வாரம் OTT-யில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

பெரிய படம், சின்ன படம் என்று பார்க்காமல், எதுவாக இருப்பினும் அதை OTT-யில் வெளியான பிறகே பார்க்க விரும்பும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். இன்னொரு புறம் பெரிய படம், சின்ன படம் என்று பார்க்காமல், எதுவாக இருப்பினும் அதை OTT-யில் வெளியான பிறகே பார்க்க விரும்பும் ரசிகர்களும் உண்டு. அவர்களுக்காக இந்த வாரம் OTT-யில் வெளியாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

சைரன்

Untitled design 90

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ‘ஜெயம்’ ரவி நடிப்பில் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படம் தான் ‘சைரன்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

இதில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாந்தினி தமிழரசன், யோகி பாபு, அழகம் பெருமாள், அஜய், துளசி, லல்லு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸாகப்போகிறது.

ரணம்

RANAM

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான வைபவ் நடிப்பில் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படம் தான் ‘ரணம்’. இந்த படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியிருந்தார். வைபவ்வின் 25-வது படமான இதில் முக்கிய கதாபாத்திரங்களில் தன்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ப்ரணிதி ஆகியோர் நடித்திருந்தனர்.

அரோல் கொரெல்லி இசையமைத்திருந்த இதற்கு பாலாஜி.கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை மது நாகராஜனின் ‘மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகப்போகிறது.

யாவரும் வல்லவரே

Yavarum vallavaare

கோலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘யாவரும் வல்லவரே’. இந்த படத்தை இயக்குநர் N.A.ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, ரித்விகா, அருந்ததி, ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸாகப்போகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.