2024 ஆம் ஆண்டின் தலைசிறந்த திரைப்படம் என்று இந்திய அளவில் ரசிகர்களால் போற்றப்பட்ட “Amaran” திரைப்படம் அடுத்த மாதம் Netflix தளத்தில் வெளியாவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை Netflix நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Amaran – இரு இதயங்களின் சகாப்தம்
Major முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேக்காவின் வாழ்க்கையை சுவாரசியமான, ஆழமான உணர்ச்சிகளை உள்ளடக்கி உருவாக்கியது தான் இந்த “Amaran” திரைப்படம். கல்லூரி காலங்களில் தொடங்கிய இருவரின் காதல் பயணம் திருமணம் தாண்டி Major முகுந்த் அவர்களின் இறப்பிற்கு பிறகும் பசுமையாக இருந்து வரும் இருவரின் அன்பை போற்றும் விதமாக இந்த திரைப்படம் அமைந்தது. ஒரு ராணுவ வீரனின் மனைவியாக என்றும் தைரியமாக இருப்பேன் என்று தனது கணவரிடம் செய்து கொடுத்த சத்தியத்தை இன்றுவரை சிறு அணுவும் அதில் இருந்து விலகாமல் கடைபிடித்து வருகிறார், இந்து.
ரீல் இந்து மற்றும் Major முகுந்த் ஆக நடித்த சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பு இந்திய ரசிகர்களால் பறைசாற்றப்பட்டது. மேலும் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் (300+ கோடி) மாபெரும் வெற்றி பெற்றது. சூப்பர்ஸ்டார் ரஜினியில் தொடங்கி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை “அமரன்” திரைப்படம் அதன் படக்குழுவை வாழ்த்தி பலப் பதிவுகளை வெளியிட்டனர்.
Major Mukund had us all go achamillai achamillai 😎🔥
— Netflix India South (@Netflix_INSouth) December 2, 2024
Watch Amaran on Netflix, out 5 Dec in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi!#AmaranOnNetflix pic.twitter.com/GbWcnmaKtR
சமீபத்தில் நடிகர் விஜய் “அமரன்” படத்தை நேரில் சந்தித்து பாராட்டியதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
Netflix-ல் ‘அமரன்’
திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடிய “அமரன்” திரைப்படம் தற்போது OTT தளத்திலும் வெளியாகி சக்கைபோடு போட காத்துக்கொண்டு இருக்கிறது.
படம் | Amaran |
Ott தளம் | Netflix |
OTT-ல் வெளியாகும் நாள் | டிசம்பர் 5, 2024 |
மொழி | தமிழ்தெலுங்குமலையாளம் கன்னடம் ஹிந்தி |