Home OTT அடேங்கப்பா!! 100 கோடிக்கு Kanguva படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய Amazon Prime!

அடேங்கப்பா!! 100 கோடிக்கு Kanguva படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய Amazon Prime!

by Santhiya Lakshmi

      அட ஆமாங்க நம்ம சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் கங்குவா(Kanguva) படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 100 கோடிக்கு வாங்கி இருக்காங்கனா அப்படி அந்த படத்துல என்னென்ன சிறப்புகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா வாங்க..

     சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா.பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய இப்படத்தின் டீசர் வெளியாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளது ஏன்?

      தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ஃபேமஸ் ஆன சிறுத்தை சிவா  முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படமான கங்குவா,வரலாற்று கதை அம்சம் கொண்ட ஒரு ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை  திஷா பதானியும்,வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்கள்.

      கங்குவா படத்தின் கதைகளம்  1700 களில் வாழ்ந்த ஒருவர் அப்போது முடிக்க முடியாமல் போகும் ஒரு விசயத்தை 500 ஆண்டுகள் கழித்து வந்து அதை முடித்தாரா ?இல்லையா? என்பது தான்.

       ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெற்றி ஒளிப்பதிவில் தயாராகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.சுமார் 300 கோடி ருபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம்  3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி மற்றும் கன்னடம் உட்பட 10 மொழிகளிலும் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

         இவ்வாறாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கும்போதே கங்குவா படத்தின்  திரைக்கு பிந்தைய ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம்  சுமார் 100 கோடிக்கு வாங்கி இருப்பது இன்னும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.நடிகர் சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களிலே  கங்குவா படம் தான் அதிக தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு  உள்ளது.ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் எந்தளவு பூர்த்தி செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்போம்!!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.