Home OTT Aranmanai 4 படத்தை இனிமேல் OTTயில் காணலாம்! 

Aranmanai 4 படத்தை இனிமேல் OTTயில் காணலாம்! 

2024ன் அதிரடி வெற்றி படம் Aranmanai 4 OTTயில் ஜூன் 21 அன்று வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் மே 3 வெளியாகி, 100 கோடி வசூலை ஈட்டியது அரண்மனை 4.

by Vinodhini Kumar

2024ன் அதிரடி வெற்றி படம் Aranmanai 4 OTTயில் ஜூன் 21 அன்று வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் மே 3 வெளியாகி, 100 கோடி வசூலை ஈட்டியது அரண்மனை 4.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வரிசையாக எடுக்கப்பட்ட அரண்மனை படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் Aranmanai 4. மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வெற்றி படமாக உருமாறிய படத்தில் தமண்ணா, ராஷி கண்ணா, சுந்தர் சி, கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு என பலர் நடித்துள்ளார்கள். காமெடி, திகில் என எல்லாமும் அரண்மனை 4 படத்தில் வேலை செய்துள்ளது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 

Aranmanai 4 OTT poster

Aranmanai 4 படம், அதன் முந்தைய படங்களை விட ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி குடும்பங்கள் கொண்டாடப்படும் வெற்றியாக 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இப்போது இந்த படத்தின் OTT உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. 

சுந்தர் சி இயக்கிய நான்காவது அரண்மனை படம் வெளியாகி ஒரு மாதம் ஆரவார வெற்றிக்கு பின் OTTயில் ஜூன் 21 ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும். ஏற்கனவே ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ப்ளாக் பஸ்டர் படமாக ஓடிக்கொண்டிருக்கும் அரண்மனை 4, இந்தியில் OTT ரிலீஸ் செய்ய தாமதமாகும் என தெரிகிறது. OTTயில் வெளியானதும் இந்தியளவில் பெரிய மார்கெட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.