ஒவ்வொரு வாரமும் தியேட்டர்கள், OTT platform என திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிவருகிறது. அந்தவகையில் இந்தவாரம் OTT-ல் ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட்.
OTT platform வந்த பிறகு பெரும்பாலான படங்கள், வெப் சீரிஸ்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு இரண்டு , மூன்று படங்கள் திரையரங்கில் வெளியாகி வந்தன. தற்போது வாரத்திற்கு 2, 3 படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.
OTT தளத்தில் வெளியாகும் போது நினைத்த நேரத்தில் படங்களை பார்க்க முடியும் என்பதால் திரையரங்கம் சென்று பார்ப்பது குறைந்து வருகிறது என்றே கூறலாம்.
அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்.
Brinda:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் திரிஷா முதன் முதலில் Brinda என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கலா கதை எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் கிரைம் திரில்லராக உள்ளது. மேலும் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ரவீந்திர விஜய், அனந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள திரிஷா தொடர்ந்து கொலைகள் ஏற்படும் வழக்கு ஒன்றை எப்படி கையாளுகிறார் என்பது தான் கதை. சுவாரஸ்யமாக சீரிஸ் முழுவதும் ரசிக்கும்படியாக கதைக்களத்தில் எடுத்துள்ளனர். SonyLiv OTT தளத்தில் ஆகஸ்ட் 2 முதல் ஒளிபரப்பாகிறது.
வெப்பன்:

ஆக்சன் த்ரில்லர் படமாக குகன் சென்னியப்பன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் ஜூன் 7-ஆம் தேதி வெளியான படம் வெப்பன். சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப், மீம் கோபி, யாஷிகா ஆனந்த், கனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
சத்யராஜ் சூப்பர் ஹியூமனாக செழியன் / மித்ரன் கேரக்டரில் நடித்திருப்பார். தரமணி, ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி அக்னி கேரக்டரில் நடித்திருந்தார். அமேசான் பிரைம் OTT தளத்தில் ஆகஸ்ட் 2-ல் வெளியானது.
இந்தியன் 2:

கமல் சங்கர் கூட்டணியில் 28 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை பல சிரமங்களுக்கு மத்தியில் ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்டனர். அனிருத் இசையில், கமல் ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, ஜெகன், ரிஷி போன்றோர் நடித்திருந்தனர்.
இந்தியன் தாத்தாவாக கமல் ரீ எண்ட்ரி தந்திருப்பார். சங்கர் படம் என்றாலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொண்டு இருக்கும் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு எதிர்பார்த்தவாறு படம் இருக்கவில்லை.
நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் ஆகஸ்ட் 9-ல் இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது.
படங்கள் | OTT PLATFORM | நடிகர்கள் | OTT ரிலீஸ் தேதி | இயக்குனர்கள் |
Brinda(Web Series) | SonyLiv | திரிஷா, இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ரவீந்திர விஜய், அனந்தசாமி | ஆகஸ்ட் 2, 2024 | சூர்யா மனோஜ் வாங்கலா |
வெப்பன் | அமேசான் பிரைம் | சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப், மீம் கோபி, யாஷிகா ஆனந்த், கனிகா | ஆகஸ்ட் 2, 2024 | குகன் சென்னியப்பன் |
இந்தியன் 2 | நெட்பிலிக்ஸ் OTT | கமல் ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, ஜெகன், ரிஷி | ஆகஸ்ட் 9, 2024 | சங்கர் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]