Home OTT வைபவ் நடிக்கும் “Bench Life” வெப் தொடர் ஓடிடியில் வெளியானது!!

வைபவ் நடிக்கும் “Bench Life” வெப் தொடர் ஓடிடியில் வெளியானது!!

வைபவ், ரித்திகா சிங் இருவரும் இணைந்து நடித்த “Bench Life” வெப் தொடர் Sony Livல் வெளியானது.

by Shanmuga Lakshmi

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியான “The Greatest of All Time” படத்தில் ‘ஷா’ என்ற கதாபாத்திரமாக நடித்த வைபவின் அடுத்த அப்டேட் வெளியானது. திரைப்படம் மட்டும் அல்லாது வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி தொடர்ந்து வைபவ் நடித்து வரும் நிலையில். செப்டம்பர் 12 ஆம் தேதி Sony Liv ஓடிடி தளத்தில் வெளியானது.

நடிகர் வைபவ், சரண் பெரி, நடிகை ரித்திகா சிங், ஆகன்ஷா சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடருக்கு பி.கே.தண்டி இசைஅமைத்துள்ளார். மொத்தம் 5 எபிசொட் கொண்ட “Bench Life” தொடரின் இயக்குனர் மானசா சர்மா, எழுத்து மகேஷ் உப்பலா மற்றும் மானசா சர்மா ஆவர். தெலுங்கு மொழியில் இந்த தொடர் படமாக்கபட்டாலும், தமிழில் டப்பிங் செய்யபட்டு Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மூன்று software என்ஜினீயர்கள் பாலு, மீனாட்சி, ரவி இந்த மூன்று கதாபாத்திரங்களை மையமாக கதை அமைக்க பட்டு Feel Good சீரிஸ் வகையில் வெளியாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

நடிகர்/நடிகை பெயர் கதாபாத்திரத்தின் பெயர்  
வைபவ் ரெட்டி பாலு 
சரண் பெரி ரவி 
ரித்திகா சிங் மீனாட்சி 
ஆகன்ஷா சிங் ஈஷா 
Dr.ராஜேந்திர பிரசாத் ஈஷாவின் தந்தை 
நயன் சரிகா 
வெங்கடேஷ் ககுமானு 
தனிக்கெல்லா பரணி 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.