தமிழ் சினிமாவில் பல நல்ல கதைகளை திரைப்படங்களாக இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். ‘அழகிய தீயே’ படத்தின் மூலம் அறிமுகமாகி, எந்தவித போட்டியும் இல்லாமல் தனக்கென தனி பாதையில் பல நல்ல படங்களை கொடுத்தார் ராதா மோகன். ‘மொழி’ படத்தில் ஜோதிகா, பிரகாஷ் ராஜ், பிரித்விராஜ், ஸ்வராமலியா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய படம். மிக நுணுக்கமாக, பலரும் கடந்து போகும் கதையை அழகாக இயக்கியிருந்தார்.
இதை தொடர்ந்து ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களை இயக்கிய ராதா மோகன், OTT வழியாக நல்ல கதைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க தொடங்கியுள்ளார். அப்படி அவரின் முதல் OTT சீரிஸ் தான் ‘சட்னி சாம்பார்‘. நடிகர்கள் யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, சம்யுக்தா, மைனா நந்தினி, நிழல்கள் ரவி, சார்லி, இளங்கோ குமாரவேல் ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸ் தற்போது ஹாட்ஸ்டாரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஊட்டியில் பிரபலமான உணவகம் தான் ‘அமுதா கஃபே’. நிழல்கள் ரவி நடத்திவரும் இந்த ஹோட்டலில் புகழ்பெற்ற உணவு அவரின் கைப்பக்குவதில் செய்யப்படும் சாம்பார் தான். அதன் செய்முறையும் பக்குவமும் தெரிந்த ஒரே ஆள் நிழாகள் ரவி மட்டும் தான். உடல் நலம் குன்றிபோகும் அவர் தன்னுடைய குடும்பத்திடம் இருந்து ஒரு பெரிய ரகசியத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளார். அதை தன்னுடைய கடைசி ஆசையாக சொல்லி நிறைவேற்ற கூறுகிறார். இது தான் ‘சட்னி சாம்பார்’ தொடரின் கதைக்களம்.

இதில் யோகி பாபுவின் கதாபாத்திரம் எளிமையான ஒரு தள்ளுவண்டி உணவகம் நடத்திவருபவர். அவரின் தனித்துவமான சட்னிக்கு பல ரசிகர்கள் உண்டு. எப்படி இவர் ஊட்டியில் உள்ள இந்த குடும்பத்துடன் இணைகிறார். அவருக்காக காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி என்ன? 13 நாட்களில் இந்த குடும்பத்துடன் அவர் செய்யும் நகைச்சுவை கலந்த feel good கதையை 6 எபிசோடுகளில் கூறியுள்ளார் ராதா மோகன்.
இயக்குனராக இவரின் படங்களில் எப்போதுமே நகைச்சுவைக்காக பெரிய பங்கு இருக்கும். முக்கியமாக கதையுடன் சேர்ந்து பயணிக்கும் வகையில் நகைச்சுவை மற்றும் எமோஷன் இருக்கும். ராதா மோகனின் கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும், அதே போல் அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நிச்சயம் தருவார்.

அப்படி இந்த ‘சட்னி சாம்பார்‘ தொடரிலும் நடிகர் சார்லி, நடிகர் இளங்கோ குமாரவேல் ஆகியோரின் கதாபாத்திரங்களை கதையில் மிக கச்சிதமாக நெய்துள்ளார். துணை நடிகர்கள் என்றாலும் கதையோட்டத்தில் முக்கியமான திருப்பங்களை கொண்டவர்களாக அல்லது அழகான ஒரு கருத்தை சுமப்பவர்களாக இவர்களை பயன்படுத்தியுள்ளார்.
வாணி போஜன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ‘சட்னி சாம்பார்’ தொடரில் நல்ல வரவேற்பு கிடைக்கும் வகையில் அவர்களின் நடிப்பு அமைந்துள்ளது. நடிகர் யோகி பாபு ‘மண்டேலா‘ படத்துக்கு பின் நகைச்சுவையில் மட்டும் கவனம் செலுத்தாமல் கதையின் நாயகனாக ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை இயக்குனர் ராதா மோகனுடன் 9 படங்களில் நடித்துள்ளார் நடிகர் இளங்கோ குமாரவேல். ‘சட்னி சாம்பார்’ தொடரில் இவரின் கதாபாத்திரமும் ஒரு உன்னதமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏறத்தாழ ஒரு முழுநீள படத்தை 6 எபிசோடுகளாக எடுத்துளார்கள். கண்டிப்பாக குடும்பத்துடன் உட்கார்ந்து ஒரு படத்தை பார்க்கும் உணர்வை ‘சட்னி சாம்பார்’ தொடர் தரும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு சீசன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]